Wednesday , December 17 2025
Breaking News
Home / ஆன்மீகம் / இன்றைய ராசிப்பலன் – 14.04.2020 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…
NKBB Technologies

இன்றைய ராசிப்பலன் – 14.04.2020 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்…

அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உடன் இன்றைய ராசிபலன் உங்களுக்காக…

மேஷம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வீக வழிபாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணத்தில் கவனம் இருக்கட்டும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நற்பலன்கள் உண்டா-கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.

கடகம்

இன்று நீங்கள் ஆர்வத்தோடு அணைத்து வேலைகளையும் செய்விர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

கன்னி

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்பட கூடும். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

துலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அதனால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்படலாம். தொழிலில் சற்று மந்த நிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள் ரொம்ப நல்லது. உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும். மன நிம்மதி ஏற்படும்.

தனுசு

இன்று புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகவே இன்றைய நாள் அமையும். பிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவர். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று உங்களுக்கு ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கொஞ்சம் சிந்தித்து செயல்படுங்கள் ரொம்ப நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். சிலருக்கு அரசின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு காலையிலே மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செல்லும்.

மீனம்

இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். வேலை சம்மந்தமாக பிரச்சினைகள் விலகி செல்ல மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சிக்கனமாக செயல்பட்டால் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES