மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று ஆயுத பூஜை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தாங்கள் தொழில் செய்யும் இயந்திரங்களுக்கு மரியாதை செய்யும் விதமாக சந்தனம், குங்குமம் இட்டு வழிபட்டனர். அந்த வகையில் மதுரை கோ.புதூர் டி.ஆர்.ஓ காலனியில் உள்ள டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் அவர்களின் அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் …
Read More »மதுரையில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தினமும் உணவு வழங்கி வரும் கல்வி பவுண்டேஷன் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் அங்குலட்சுமி.!
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டியில் “கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட்” என்ற அமைப்பை ஏற்படுத்தி அப்பகுதியை சேர்ந்த கணவனை இழந்தவர்கள், பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருக்கும் 50 க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு கடந்த ஒரு வருடமாக “தினமும் மதிய உணவு” வழங்கி வருகிறார் டிரஸ்ட் நிறுவனத்தலைவராக உள்ள “அங்குலட்சுமி”. மேலும் அப்பகுதியில் வசிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் தனக்கென ஒரு சுயதொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக …
Read More »திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல்லில் அனைத்திந்திய பிள்ளைமார் சங்க மாநில கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல்,அக்.22- அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார்கள் சங்கத்தின் மாநில அளவிலான கலந்தாய்வு கூட்டம் திண்டுக்கல் பி.எஸ்.என்.எ. ஆடிட்டோரியத்தில் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ரகுராம் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பு செயலாளர் ரவிபிள்ளை வரவேற்றார். நாடு முழுவதும் இச்சமுதாயத்தின் நிர்வாகிகளை தொழில்களின் அடிப்படையில் ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது. சங்கத்தின் நிர்வாகிகள் நடத்திவரும் கல்வி நிறுவனங்களில் இச்சமுதாயத்தினருக்கு …
Read More »மதுரை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம்
மதுரை மாவட்ட நாடகம் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா மதுரையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கலை வளர்மணி செ. நாகேஸ்வரன் வரவேற்பு வழங்கினார். மாநிலத் தலைவர் எஸ்.தங்கவேல் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக நாடக நடிகர் குண்டுசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட செயலாளர் அழகர்சாமி நன்றி கூறினார். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை …
Read More »தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரையில் உண்ணாவிரத போராட்டம்
தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரையில் உண்ணாவிரத போராட்டம் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக மதுரை கோச்சடையில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பணியிட மாறுதல்களை பதவி உயர்வு மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்த வேண்டும். நகர சுகாதார செவிலியர்கள் …
Read More »மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் கே.ஆர்.நீலாராம் – கே.என்.கீதா சஷ்டிய பூர்த்தி விழா
மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் கே ஆர் நீலாராம் – கே.என்.கீதா ஆகியோர் சஷ்டிய பூர்த்தி விழா மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் அருகே உள்ள மதன கோபாலசாமி கோவிலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய தொகுதி மாவட்ட செயலாளர் வி.பி.மணி, வடக்கு தொகுதி மாவட்ட செயலாளர் அயூப்கான் உள்பட கட்சி நிர்வாகிகள், நண்பர்கள், குடும்பத்தினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
Read More »கேட்ட வரம் கொடுக்கும் உசிலம்பட்டி அருகே உள்ள ஜோதிமாணிக்கம் பெருமாள் சுவாமி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா ஜோதிமாணிக்கம் கிராமத்தில் உள்ளது ஜோதிமாணிக்கம் பெருமாள் கோவில். இந்த கோவில் 1.000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மேலும் மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கர் இந்த கோவிலுக்கு வந்து வணங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த கோயிலில் கவரா நாயுடு பங்காளிகள் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மாதா மாதம் ஏகாதசி மற்றும் பௌர்ணமி அன்று பங்காளிகள் குடும்பத்தினர் பல …
Read More »முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களுக்கு நன்றி தெரிவித்த தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகிகள்
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதற்காகவும், இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த அதிமுகவுக்கு, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பாக நன்றி தெரிவிக்கும் விதமாக மாநில தலைவர் கே.எம். சரீப் அறிவுத்தலின்படி, அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களை மதுரையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் ஜலால் முகமது …
Read More »அதிமுக தலைமை கழக பேச்சாளராக நியமனம் செய்யப்பட்ட எம்.எஸ்.கே. மல்லன் அவர்களுக்கு, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்து.!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணைக்கிணங்க, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்களின் பரிந்துரையின்படி, தலைமை கழக பேச்சாளராக நியமனம் செய்யப்பட்ட எம்.எஸ்.கே.மல்லன் அவர்களுக்கு, அண்ணா தொழிற்சங்க மதுரை மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் அவர்களின் தலைமையில் தொழிற்சங்க நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். உடன் நிர்வாகிகள் அனுப்பானடி பாலகுமார், உசிலை தவசி, ராஜசேகர், பூக்கடை முருகன், பி.ஆர்.சி மகாலிங்கம், …
Read More »மதுரையில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பாக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைமை அலுவலகத்தில் மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் 222 வது ஜெயந்தி விழாவை சிறப்பாக நடத்துவது என்றும், 116-வது தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நிறுவனத் தலைவர் டாக்டர் நா.சேதுராமன் அவர்களின் தலைமையில், பசும்பொன்னில் நடைபெற உள்ள பிரமாண்டமான அன்னதானத்தை, பசும்பொன்னுக்கு வருகை தர உள்ள தமிழக முதல்வர் அவர்கள் தொடங்கி …
Read More »