
வெளிநாட்டு சிறைகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்டு அவர்களின் தாய் நாட்டிற்கு பத்திரமாக அனுப்பி வைத்ததற்காக இரண்டாவது முறையாக தேசத்தின் அடையாள விருதை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
சீர்காழி-புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022_2023 ஆண்டுக்கான முதுநிலை பாடப்பிரிவருக்கு மாணவர்கள் கவிண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி-புத்தூரில் இயங்கி வருகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 ஆண்டு முதுநிலை மாணவருக்கான விண்ணப்பம் இணைய வழியில் 07.09.2022 முதல் 16.09.2022 வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்விதுறை அறிவித்துள்ளது.
சீர்காழி, புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை தமிழ் (MA Tamil) மற்றும் முதுநிலை அறிவியல் கணிதம் (MSc Maths) ஆகிய இரு பாடப்பிரிவுகள் மட்டும் உள்ளது. மேற்கண்ட இரு பாடப்பிரிவுக்கு மாணவ மாணவிகள் www.tngasapg.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று கல்லூரியின் முதல்வர் கி.விஜயலட்சுமி அவர்கள் கூறினார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை செய்தியாளர் திருமுருகன்
உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆணையிடப்பட்டது.
அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் அரசு நடுநிலைப்பள்ளியில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிங்காரவேலு வரவேற்றார்.
மேற்படி முகாமில் ஊராட்சிக்கு உட்பட்ட ஆக்கூர், அன்னப்பன்பேட்டை, சவுரியாபுரம், ஆக்கூர் முக்கூட்டு, பட்டவர்த்தி, உடையவர்கோயில் பத்து புங்கையன்தோப்பு, அம்மன்கோயில்பத்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், பிறந்தநாள் தேதி மாற்றம், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் மற்றும் அட்டை வகை மாற்றம் ஆகியவை தொடர்பாக 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அதில் 490 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு பெற்று பொதுமக்கள் பயனடைந்தனர். மீதமுள்ள 35 மனுக்கள் விசாரணைக்காக நிலுவையில் உள்ளன. முகாமில் 2 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், அட்டை வகை மாற்றம் தொடர்பான மனுக்களை வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை செய்திட அனுப்பி வைக்கப்பட்டும், மற்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றம் செய்யவும் வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஒப்புதல் ஆணை வழங்கினார். இதில் கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார், வருவாய் துறை ஆய்வாளர் ராஜ், வட்ட வழங்கல் கண்காணிப்பு குழு உறுப்பினர் சகாயராஜ், வட்ட பொறியாளர் ஐயப்பன், அங்காடி விற்பனையாளர்கள் மதன கண்ணன், சோமு, மணிகண்டன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மயிலாடுதுறை செய்தியாளர் திருமுருகன்
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் அணைப்பட்டி பேரணையில் இருந்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாசனம் பெறும் அணையை பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஞானசேகரன், செயற்பொறியாளர் ,
அன்புச்செல்வன்,
துணை செயற்பொறியாளர்
அன்பு தலைமையில்
வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் பாசன கோட்ட தலைவர்கள் எம்.பி.ராமன் , தங்கராஜ், பகவான்,தியாக ராஜன்,ஆர்.பாண்டியன் மற்றும் விவசாய பிரதிநிதிகள் முன்னிலையில் உதவி பொறியாளர்கள் செல்லையா, கோவிந்தராஜன், பிரபாகரன், தளபதி, ராம்குமார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு அணையை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் பெரியாறு வைகை திருமங்கலம் பிரதான கால்வாய் விவசாய சங்க கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிரணி தலைவி அன்னலட்சுமி ஷகிலா கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தென்னக மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஐயப்பா கார்த்தி பங்கேற்றார்.
அன்புச் சகோதரர் திரு. ராகுல் காந்தி அவர்கள், இந்தியாவின் ஆன்மாவை மீட்டெடுக்க, நமது குடியரசின் உயர் விழுமியங்களை உயர்த்திப் பிடிக்க, நாட்டு மக்களை அன்பால் ஒன்றிணைப்பதற்கான பயணத்தை இன்று தொடங்கியிருக்கிறார்.
சமத்துவத்தின் சின்னமான வள்ளுவர் சிலை உயர்ந்து நிற்கும் குமரிமுனையைக் காட்டிலும் இந்த “இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கப் பொருத்தமான இடம் வேறு இருக்கமுடியாது. மதத்தால் பிளவுபடுத்தலும், கேடு விளைவிக்கும் வெறுப்புப் பரப்புரைகளும் மக்களின் மனங்களை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவை ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் அரும்பணியை நாட்டின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பேரியக்கம் முன்னெடுத்துள்ளது.
பெருமைமிகு நமது குடியரசை மீண்டும் கண்டெடுக்கும் தனது நோக்கத்தில் “இந்திய ஒற்றுமைப் பயணம்” வெற்றிபெற வாழ்த்துகிறேன். -தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின்