Friday , December 19 2025
Breaking News
Home / செய்திகள் (page 120)

செய்திகள்

All News

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவை

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகளுக்கு இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக சேவை செய்ய தேவைப்படுகிறார்கள்.

கரூர் வட்டம் (பகுதி):

கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை (வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) கிராமங்கள், புலியூர் (பேரூராட்சி) மற்ரும் உப்பிடமங்கலம் (பேரூராட்சி),

கிருஷ்ணராயபுரம் வட்டம் (பகுதி):

பாலராஜபுரம் ரெங்கநாதபுரம் (வடக்கு), ரெங்கநாதபுரம் (தெற்கு), மாயனூர், திருக்காம்புலியூர், மணவாசி, சித்தலாவை, கம்மநல்லூர், மகாதானபுரம் (வடக்கு), சேங்கல் மற்றும் முத்துரெங்கம்பட்டி கிராமங்கள். கிருஷ்ணாபுரம் (பேரூராட்சி), மற்றும் பழையஜெயங்கொண்ட சோழபுரம் (பேரூராட்சி),

குளித்தலை வட்டம் (பகுதி):

பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி, பண்ணப்பட்டி, தேவர்மலை, ஆதனூர், செம்பியநத்தம், டி.இடையப்பட்டி (மேற்கு), டி.இடையப்பட்டி (கிழக்கு), பாலவிடுதி, முள்ளிப்பாடி, மாவத்தூர், கீழப்பகுதி மற்றும் வாழ்வார்மங்கலம் கிராமங்கள்.

மேற்கண்ட பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள், சமூக சேவை செய்ய தேவை.

அணுகவும் முனைவர் க. பாலமுருகன் 9965557755.

குழலி ஹெர்பல்ஸ்

குழலி ஹெர்பல்ஸ்:

Kuzhali Herbs
Product Name Quantity Price
Mud Bath Powder 250g 410
Sivakai Powder 250g 320
Kukumam 1 Box 90
Kajal/Kanmai 1 Box 192
Hair Oil 100ml 269
Saffron Cream 1 Box 269
Tooth Powder 1 Box 64
Face Pack 1 Box 102
Honey 250g 384
Murungai Seed Oil 50ml 768
Coconut Oil Soap 1 45
Herbal Napkin 1 26
Born Baby Bath Powder 250g 358
Contact
Vandar Kuzhali
9942495228
9965557755
www.karurkart.in

ஒரு இலட்சம் மக்களின் ஒருமித்த குரல் – வெள்ளியணை பெரியகுளம் நீர் மேலாண்மை ஆய்வுத் திட்டம்.

வெள்ளியணை டூ கொல்கத்தா:

ஒரு இலட்சம் மக்களின் ஒருமித்த குரல் – வெள்ளியணை பெரியகுளம் நீர் மேலாண்மை ஆய்வுத் திட்டம்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை,அரசுப்பள்ளி இளம் விஞ்ஞானி மாணவர்கள் கொல்கத்தாவில் நடைபெறும் இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவில் மாணவர்கள் அறிவியல் கிராமம் நிகழ்வில் ஆய்வுத் திட்டம் சர்ப்பித்தல் .

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம், புவி கிராமம் துறை, விஞ்ஞான பாரதி அமைப்பு இணைந்து நடத்தும் 5வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவை பிஸ்வா பன்கலா கன்வென்ட்சன் சென்டர், அறிவியல் நகரம், கொல்கத்தாவில் நவம்பர் மாதம் 4 முதல் 8 தேதி வரை நடத்தி வருகிறது. இதில் உலக அளவில் 700 விஞ்ஞானிகள், 8,000 பள்ளி, கல்லூரி மாணவர்கள், 12,000 அறிவியல் ஆராய்ச்சி மாணவர் கள் , என 20 ,700 பங்கேற்பாளர்கள் 28 நிகழ்வுகளில் கலந்துக் கொண்டுள்ளனர்.

அதில் ஒரு நிகழ்வாக மாணவர்கள் அறிவியல் கிராமம் என்ற நிகழ்வில் கரூர் மக்களவைத் தொகுதி சார்பாக , கரூர் மாவட்டம், வெள்ளி யணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், 10ஆம் வகுப்பு சு.சுகி, 9 ஆம் வகுப்பு கோ.சுகந்த், கா. பசுபதி, சி. நவீன் குமார், மு.விஷ்ணு ஆகிய மாணவர்களும், வழிகாட்டி ஆசிரியராக பெ. தனபால் பட்டதாரி ஆசிரியரும் தேர்வு செய்யப்பட்டு, வெள்ளியணை பஞ்சாயத்து சார்ந்த 13 கிராமங்களின் மக்கள் தொகை, விவசாயம், அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தும், எதிர்கால திட்டமான அனைத்து கிராமங்ளுக்கும் சாலை, குடிநீர், கழிவறை , இளைஞர் வேலைவாய்ப்பு , போக்குவரத்து வசதி, மின் வசதி ஆகியவற்றுடன், ஒரு இலட்சம் மக்களின் ஒருமித்த குரலான வெள்ளியணை பெரிய குளத்திற்கு காவிரியிலிருந்து கடலில் கலக்கும் உபரி நீரை 23 கி.மீ தொலைவில் உள்ள வெள்ளியணைக்கு எடுத்து வரும் ஆய்வுத் திட்டம் ஒன்றை வெள்ளியணை ஊராட்சி, லந்தக் கோட்டை ஊராட்சி, தி.கூடலூர் ஊராட்சி , ஜெகதாபி ஊராட்சி, உப்பிடமங்கலம் பேருரட்சி, முனையனுர் ஊராட்சி, சேங்கல் ஊராட்சி, முத்து ரெங்கன் பட்டி ஊராட்சி, மஞ்சா நாயக்கன்பட்டி ஊராட்சி, அய்யர்மலை வட்டார பகுதிகள் சார்ந்த 90.716 மக்கள் பயனடையும் வகையில் 36, 878 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் ஆய்வுத் திட்டத்தை வெள்ளியணை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர் திரு . வீ. இராமநாதன் ஐயா மற்றும் மேற்கண்ட ஊர் பொதுமக்கள் சார்பாக ஆய்வுத் திட்டம் தயாரித்து கொல்கத்தாவில் வெள்ளியணை, அரசுப் பள்ளி மாணவர்கள் இன்று 08.11.2019 சமர்ப்பிக்க உள்ளார்கள்.

சர்வதேச அறிவியல் திருவிழாவில் கலந்துக் கொள்ளும் 5 மாணவர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர் பெ.தனபால் ஆகியோருக்கு 02.11.2019 அன்று கரூர் பிரேம் மஹாலில் சிறப்பான வழியனுப்பும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி கட்டிடக் குழுத் தலைவர் உயர்திரு வீ, இராமநாதன் தலைமை வகித்தார், பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் , அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் (ஒய்வு) உயர்திரு சீனிவாசன் ஐயா அவர்கள்’.பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் செயலாளர் உயர்திரு. ஆ.கிருஷ்ணன். வெள்ளியணைப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் உயர்திரு .வே.பொன்னுசாமி, முன்னாள் முதுகலை வணிகவியல் ஆசிரியர் உயர்திரு.அ. கருப்பண்ணன்,முன்னாள் முதுகலை வேதியியல் ஆசிரியர் உயர்திரு . பாலசுப்பிரமணி, கல்வியாளர்கள் உயர் திரு. விடியல் காமராஜ், ஆசிரியர் உயர்திரு. ரவி, ஜல்லிப்பட்டி உயர்திரு.ஞானசேகர், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் செல்லாண்டிபட்டி உயர்திரு முருகேசன் வெள்ளியணை ஊர் முக்கியஸ்தர் உயர்திரு அமிர்தலிங்கம் , மேட்டுப்பட்டி உயர் திரு .மதுரகவி உள்ளிட்ட 1981 – 87 ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர் கள், பெற்றோர்கள் பங்கேற்று மாணவர்களை வாழ்த்தி வழியனுப்பினர்.பள்ளி முன்னாள் மாணவி திருமதி.கலாவதி வழியனுப்பும் விழா நிகழ்ச்சிக்கு அறுசுவை உணவுடன் ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் கரூர் மாவட்டம், முதன்மைக் கல்வி அலுவலர் உயர்திரு . சி முத்துக்கிருஷ்ணன், கரூர் மாவட்டக் கல்வி அலுவலர் உயர் திரு ப.சிவராமன் , குளித்தலை கல்வி மாவட்டக் கல்வி அலுவலர் உயர்திரு . மு. கபீர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை ) மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் உயர்திரு மு.பத்தவச்சலம், கரூர் மாவட்டம் உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினார்கள்.

அனைவருக்கும் நன்றி.

கொல்கத்தாவிலிருந்து…..
கனவு ஆசிரியர்
பெ.தனபால்,
பட்டதாரி ஆசிரியர்,
அ.ஆ.மே.நி.பள்ளி,
வெள்ளியணை,
கரூர் மாவட்டம்.

 

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறு பாதுகாப்பாக மூடப்பட்டது – அரவக்குறிச்சி

அரவக்குறிச்சி ஊட்டி காய்கனி கடை அருகில். ஆயிஷா மளிகை எதிரில் உள்ள காலி இடத்தில் ஓர் ஆழ்துளை கிணறு பராமரிப்பு இல்லாமல் திறந்த நிலையில் உள்ளது என தகவல் கிடைக்க இடத்தின் பொறுப்பாளர் திரு மணிகண்டன் அவர்கள் உடனடியாக இடத்திற்க்கு வந்து பார்வையிட்டு அவற்றை உடனடியாக பாதுகாப்பு செய்வதாக தொலைபேசியில் தெரிவித்தது போல் உடனுக்குடன் ஆட்களை வரவைத்து கட்டுமானம் செய்தும் மற்றும் பொது இடங்களில் இதுபோன்ற ஆழ்குழாய் கிணறு பயனற்று இருந்தால் தனது சொந்த சிலவில் அமைத்து தருவதாக நம்மிடம் அறிவித்தது தமிழக இளைஞர்களுக்கும் மக்களுக்கும் ஒரு உதாரணமான செயலை செய்தமைக்கு தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாகவும் அரவக்குறிச்சி நகர மக்களின் சார்பாகவும் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கின்றோம்.

க.முகமது அலி.
மாநில துணை செயலாளர்.
தமிழ்நாடு இளைஞர் கட்சி.

YouTube player

அறம் படம் போல ஆழ்துளைக் கிணற்றுக்குள் சுஜித் – #SaveSujith

#SaveSujith

சமீபத்தில் வெளியான அறம் படத்தில் ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. அக்குழந்தையை அப்படத்தில் மீட்பது போல் மணப்பாறை சுஜித் குழந்தையும் மீட்க முடியும் என்று இறைவனை வேண்டுகிறோம்.

– இளைஞர் குரல்

தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் க. முகமது அலி அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

நடிகர் விஜய் அவர்களுக்கு, திரைப்பட ரசிகர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அதிகம் ரசித்து மீண்டும் ஒரு முறை சென்று பார்த்தால் வசூல் கூடும் என்பதையும் அவர்கள் செய்யும் செயலை தலைவனாக கருதுபவர் உட்பட யாரும் செய்ய மாட்டார்கள் என்பதையும் அந்த படத்தில் எடுத்து சொல்லும் நல்ல விடயங்களை கற்று திருந்தி விட்டேன் என்று அறிவித்து அதன்படி செய்தால் தாங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள் என அறிவோம்.எனவே தங்களது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தால் அடுத்த தலைமுறை சிந்திக்கும் தலைமுறையாக இருக்கும் என தமிழ்நாடு இளைஞர் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் க. முகமது அலி அவர்கள் நடிகர் விஜய் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

 

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினம்

உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடு தடுப்பு தினத்தை எலைட் சிறப்பு பள்ளி கடைப்பிடித்தது .

பள்ளி தாளாளர் முத்துலட்சுமி பள்ளி மாணவர்களிடையே பேசுகையில், உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் நாள் அன்று அனுசரிக்கப்படுகிறது. அயோடின் சத்து பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளில் நோக்கமாகும். அயோடின் சத்து குறைபாட்டால் இளம் வயதினரின் அறிவுத் திறன் பாதிக்கப்படும். பெரியவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்படும். எனவே தினமும் அயோடின் கலந்த உப்பினை பயன்படுத்த வேண்டும். உலக பொது சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வின்படி அயோடின் சத்து குறைபாடு உள்ள நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. அயோடின் சத்து மனித வளர்ச்சிக்கு தேவையான மைக்ரோ ஊட்டச்சத்தாகும். நம் உடலில் கழுத்தின் முன்பகுதியில் தைராய்டு சுரப்பி உள்ளது. இந்த சுரப்பியானது இரத்தத்தில் உள்ள அயோடினையும் சில புரத பொருட்களையும் இணைத்துக்கொண்டு தைராக்ஸின் மற்றும் ட்ரை அயோடோ தைரோனின் எனும் ஹார்மோனையும் சுரக்கிறது. அயோடின் நுண் சத்தானது ரத்தத்தில் குறைந்தால் இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்படும் எனவே அயோடின் சத்து உள்ள உப்பினை பயன்படுத்த வேண்டும் என்றார். இயற்கை நல வாழ்வியல் ஆலோசகரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

 

உலகில் முதன் முறையாக சென்னையில் ஒரே மேடையில் பல உலக சாதனையாளர்கள்

20 10 2019 ஞாயிற்றுக்கிழமை மாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎஸ்பி மினி ஹாலில் உலக சாதனை விழா யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஃப்யூச்சர் கலா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இணைந்து பல உலக சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தனர். இதில் பல்வேறு உலக சாதனைகள் ஒரே மேடையில் இடம்பெற்றது சிறப்பாக இருந்தது. இந்நிகழ்ச்சியை தலைமை தாங்கி சிறப்பு விஜய் டிவி புகழ் ராஜா வேலு மற்றும் விக்னேஷ் சிவா.

மேலும் இந்நிகழ்ச்சியில் முனைவர் க.பாலமுருகன், நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, என் கே பி பி டெக்னாலஜீஸ், இளைஞர் குரல், செல்வி ஐஸ்வர்யா, தொகுப்பாளினி, காந்தி கனகராஜ் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அப்துல் கலாம் அவர்களின் கனவு திட்டமான சேவ் மதர் எர்த், அதாவது 100 கோடி மரங்கள் நட்டு மற்றும் பராமரிக்க போவதாக பசுமை பூமியின் நிறுவன தலைவர் Tree Regan சொன்னது  சிறப்பு அம்சம் கொண்டதாக இருந்தது.

தமிழ்நாடு இளைஞர் கட்சி யின் மாநில துணைச் செயலாளர் திரு முகமது அலி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு எதிர்கால இளைஞர்களை பற்றியும் மற்றும் தமிழ்நாடு இளைஞர் கட்சியின் நோக்கம் என்பது பற்றியும் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியை முன் நின்று நடத்திய டாக்டர் பாபு பாலகிருஷ்ணன் மல்டிபிள் வேர்ல்ட் ரெக்கார்ட் அச்சீவர், நிறுவனர் யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஃப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் டாக்டர் செல்வம் என்கிற உமா தலைமை செயல் அதிகாரி யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஃப்யூச்சர் கலாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அவர்களுக்கு இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்

ஒரே மேடையில் பல உலக சாதனை நிகழ்த்தும் சாதனையாளர்கள்…..
Universal achievers book of records and future kalams book of records இணைந்து நடத்தும் உலக சாதனை நிகழ்ச்சி.

 

let’s keep going – Justin Trudeau

This is it. These next 4 days are important. And I know Liberals out there will be working hard. You’ll have long days knocking on doors, making phone calls, and getting out that vote. Before it gets too intense, I want to say thank you.

Thank you for the hours you have and will put in. For the calls you’ll make. For the doors you’ll knock on. Every single one will make a difference in this election. What you’re doing matters. It matters to the future of our country. It matters to your kids, your parents, your neighbours, your colleagues and friends.

You’re stepping up for what you believe in, and our country will be better for it. For everything you’ve done, and for everything you’re about to do, THANK YOU. We’re almost there, let’s keep going.

Justin Trudeau

https://youtu.be/wQBZRhKotpM

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES