இந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட ஆன்மீகம் அணி சார்பில் மதுரை மாவட்டம் திருநகர் பகுதியில் அமைந்துள்ள சாலையோர ஆதரவற்ற படுக்கையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் கைவிடப்பட்ட முதியோர்கள் தாய்மடி இல்லத்தில் இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மதுரை மாவட்ட தலைவர் ப.குணா காலை உணவு வழங்கினார்
அவருடன் கட்சி நிர்வாகிகள் துணைத்தலைவர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன், மாவட்ட செயலாளர் Mu. கணேசன், புறநகர் தலைவர் கார்த்திக்ராஜா, புறநகர் துணைத்தலைவர் விக்னேஷ், மாவட்ட துணைச்செயலாளர் ஹார்வி குமார், மகளிர் அணியினர் மற்றும் பலர் உடனிருந்தனர்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து மக்கள் கட்சியின் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இந்துக்களின் ஒற்றுமை தினமாக கொண்டாட்டம் நடைபெற்றது
இந்து மக்கள் கட்சி மற்றும் அனுமன் சேனா இணைந்து திருப்பரங்குன்றத்தில் மிக பிரம்மாண்டமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் கொட்டும் மழையிலும் இந்து ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டது.
திருப்பரங்குன்றம் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து சுமார் 30 க்கு மேற்பட்ட விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக திருப்பரங்குன்றம் சரவணபொய்கை வழியாக செவ்வந்திகுளம் பகுதியில் விஜர்சனம் செய்யப்பட்டது.
ஊர்வலத்தில் இலங்கை மட்டகளப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ்திரு.சீனிதம்பி யோகேஸ்வரன் ஊர்வத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணைதலைவர் பாம்பன் பாலன் சுவாமி, மாவட்ட தலைவர் சோலைகண்ணன், தென் மாநில தலைவர் அன்பழகன், மாநில செயலாளர் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி ஆன்மீகம் அணி மாவட்ட தலைவர் குணா, செயலாளர் கணேசன், துணைச்செயலாளர் குமார் மற்றும் அனுமன்சேனா நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மதுரை பாத்திமா கல்லூரி உள் அரங்கத்தில் கலாம் பாரம்பரிய கலைக்கழகம் நடத்திய பல்லுயிர்களின் வாழ்வியலில், மரங்களின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பர்வதாசனா நிலையில் தொடர்ந்து 30 நிமிடங்கள் மரக்கன்றுகள் தூக்கிய நிலையில் ஒர் அணியும், வீரபத்திராசனா நிலையில் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றியபடி ஒர் அணியும், புதிய சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம், கலாம் பாரம்பரிய கலைக்கழகத்தின் தலைவர் ராஜா மகேந்திரன், மேதகு திரைப்பட கதாநாயகன் குட்டிமணி, விஜய் டிவி தொகுப்பாளர் ஆண்ட்ரூஸ், இந்தியன் சிலம்பம் ஆசான் எஸ்.எம் மணி, உடற்கல்வி இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உலக சாதனை படைத்தோருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களை முனைவர்.நிமலன்.நீலமேகம் மற்றும் நடிகர் குட்டிமணி ஆகியோர் வழங்கி பாராட்டினர்.
நிகழ்ச்சியை கலாம் பாரம்பரிய கலைக்கழகத்தின் நிறுவனரும், சோழன் உலக சாதனை புத்தகத்தின் தென் மண்டல தலைவருமான முனைவர் சுந்தர் ஒருங்கிணைத்தார்.
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை அழகர்கோவில் ரோடு சுந்தர்ராஜன்பட்டியில் உள்ள இந்திய பார்வையற்றோர் சங்கம் மேல்நிலைப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையத்தில், உயர்மட்ட குழு உறுப்பினர் ஜெ.பாலன் தலைமையேற்று 500 க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானத்தை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞரணி மாவட்ட செயலாளர் தல்லாகுளம் ராஜா சிறப்பாக செய்திருந்தார்.
இந்நிகழ்வில் அண்ணாநகர் பகுதி கழக செயலாளர் மேலமடை ஐயப்பன்,மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் மானகிரியார், மனோகரன், பி.ஆர்.முருகன், செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, மாவட்ட செயல்வீரர் ரமேஷ்பாபு, பகுதி கழக செயலாளர்கள் கோல்டு முருகன், தெய்வேந்திரன், 31வது வட்டக் கழக செயலாளர் கண்ணன் மற்றும் 31வது வார்டு நிர்வாகிகள் முத்துக்காளை, பாண்டி, அழகர், கண்ணன்,பகுதி அவைத்தலைவர் கவிஞர் மணிகண்டன், அய்யனார், 33-வது வட்டக் கழக செயலாளர் சசிகுமார், கேப்டன் மன்றம் டி.ஆர்.சுரேஷ், வழக்கறிஞர் அணி பாலகிருஷ்ணன், நெசவாளர் அணி பிரகாஷ், வர்த்தகர் அணி ஜெயபாண்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் அவர்களின் 70- வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் விதமாக, மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், அண்ணாநகர் பகுதிக்கு உட்பட்ட 12-வது வட்டக் கழகம் புதூர் காந்திபுரத்தில் மாநகர் வடக்கு மாவட்டகழக செயலாளர், வி.பி.ஆர் செல்வகுமார் அவர்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அண்ணாநகர் பகுதி கழக செயலாளர், மேலமடை ஐயப்பன், 12வது வட்டக்கழக செயலாளர் காரணம், பகுதி அவைத்தலைவர் கவிஞர் மணிகண்டன், பகுதி பொருளாளர், நாகராஜன், பகுதி துணை செயலாளர்கள் இன்பராஜா, அய்யனார் மற்றும் 12வது வட்டக் கழக நிர்வாகிகள் ஆனந்த், அசோக், கனகு, சந்திரன், செல்வம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர்கள் பா.மானகிரியார், இராமு, மனோகரன், சேகர் பொதுக்குழு உறுப்பினர்கள் பி.ஆர்.முருகன், சின்னச்சாமி, மாரிமுத்து, புரட்சிசெல்வம், இன்சூரன்ஸ் ராஜா மற்றும் மாவட்ட செயல்வீரர்கள் ரமேஷ்பாபு,சேக் அப்துல்லா, பகுதி கழக செயலாளர்கள் கோல்டு முருகன், கோவிந்தராஜ், தெய்வேந்திரன், இளங்கோ, கேப்டன் மன்றம் டி.ஆர்.சுரேஷ், துணை செயலாளர்கள் பாஸ்கரன், சிவனேசன், இளைஞரணி செயலாளர் தல்லாகுளம் ராஜா, மாணவரணி செயலாளர், காளீஸ்வரன், துணை செயலாளர் மணிகண்ட பிரபு, வழக்கறிஞரணி பாலகிருஷ்ணன், நெசவாளர் அணி செயலாளர் பிரகாஷ், தொண்டரணி வீரா, தொழிற்சங்கம் புலிவீரன், வர்த்தகரணி செயலாளர் ஜெயபாண்டி, விவசாய அணி ஆதம்ஷா உள்பட மகளிரணியினர், கழக நிர்வாகிகள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரை யூசி மேல்நிலைப்பள்ளியில் நடந்த 76 நிமிடங்கள் சிலம்பம் சாதனை ஜாக்கி புக் ஆப் ரெக்கார்டு நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிக்கு சிலம்பம் பயிற்சி கொடுத்து சாதனை படைத்த பள்ளி மாணவி (சிலம்பம் இளம் பயிற்சியாளர்) ஹரிணிக்கு உலக சாதனை பெண் என்ற சான்று 76 வது வார்டு கவுன்சிலர் கார்த்திக், டாக்டர் பாண்டியன் யுசி பள்ளி தலைமை ஆசிரியர் ராஜ்குமார் சான்று வழங்கி பாராட்டினர்.
மாணவி ஹரிணி ஏற்கனவே தமிழக அரசு விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரையில் அகில பாரத இந்து மகா சபா சார்பாக, பதினோரு அடி, ஒன்பது அடி கொண்ட விநாயகர் சிலைகள்,15 க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இருந்து ஊர்வலம் தொடங்கி விளக்குத்தூண் வரை விநாயகர் எழுச்சி ஊர்வலம் நடைபெற்றது.
ஊர்வலத்தை மாநில இளைஞரணி செயலாளர் முனைவர் எம்.டி. ராஜா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.மேலும் முளைப்பாரியை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் நான்கு மாசி வீதிகளிலும் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரை ஐராவதநல்லூரில் இந்து முன்னணி சார்பாக 29 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது
இதைத் தொடர்ந்து சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .மேலும் 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது
இவ்விழாவில் 41 வது வார்டு பாரதிய ஜனதா கட்சி தலைவர் ரவிச்சந்திரபாண்டியன், அண்ணாநகர் எம்.பி உணவக உரிமையாளர் சரவணன்,திமுக கவுன்சிலர் செந்தாமரைக்கண்ணன் | மாரியம்மன் நகர் கட்டிட உரிமையாளர்கள் சங்க தலைவர் பிருந்தாவனம் ,தொழிலதிபர் செந்தில் குமார்,அதிமுக வட்டச் செயலாளர் கணேஷ் மூர்த்தி ,மாவட்ட பாஜக கூட்டுறவு பிரிவு துணைத் தலைவர் மீசை முருகேசன் ,மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் கார்த்திக் குமார், மாவட்ட மகளிர் அணி செயலாளர் அம்பிகா குமரவேல், முன்னாள் கவுன்சிலர் காமாட்சி முத்துக்குமார், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ராஜ் மதன், அனுப்பானடி மண்டல் பாஜக துணைத் தலைவர் ராஜீவ் காந்தி, ராஜசேகர், செயலாளர் முருகன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி பொறுப்பாளர் ராம்தாஸ் தலைமையில் கமிட்டி நிர்வாகிகள் சுந்தரபாண்டி சுவாமி, வண்டு முருகன் ,மோகன், செந்தில் ஆகியோர் செயது இருந்தனர்…
மதுரை பொன்மேனி புதூர் 2- வது தெருவில் விநாயகர் சதுர்த்தி முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 62- வது வார்டு பாஜக தலைவர் பிச்சைவேல் தலைமையில் வியாழக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மறுநாள் வெள்ளிக்கிழமை விநாயகர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குரு தியேட்டர் அருகே வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாஜக மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் சத்யம். செந்தில்குமார், மருத்துவரணி மாவட்ட செயலாளர் டாக்டர் கஜேந்திரன், பைபாஸ் ரோடு ஜெயா ஸ்டோர் உரிமையாளர் பழனிவேல், மாவட்ட செயலாளர் ஆர்.கே.பிரகாஷ், 62 வது வார்டு கிளைத்தலைவர் பொன்முருகன், பரவை மண்டல் ஊடகப்பிரிவு தலைவர் அசோக், ஊடகப்பிரிவு செயலாளர் சிவவடிவேல், இளைஞரணி மன்ற செயலாளர் ஜெயச்சந்திரன், 70 வது வார்டு தலைவர் செல்விகிருஷ்ணன், 68 வது வார்டு தலைவர் சசிகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும் செவல் பகுதியில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் பூலித்தேவரின் 307வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவச் சிலைக்கு நேதாஜி சுபாஷ் சேனை நிறுவன தலைவர் வழக்கறிஞர் மகாராஜன், மாநில செயலாளர் சுமன் ஆகியோர் நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்