Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 37)

செய்திகள்

All News

வட்டக் கழக பிரதிநிதி மகா பாண்டி சார்பாக சிறப்பான வரவேற்பு..!

மதுரை மதிச்சியம் ஆசாரி தோப்பு பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ மற்றும் வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோருக்கு வட்ட கழகப் பிரதிநிதி மகா பாண்டி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக அதிமுக மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர், மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணன் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து முன்னாள் கூட்டுறவுதுறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம் எல் ஏ ஆழ்வார்புரம், மதிச்சியம், கரும்பாலை, முனிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.

அவர்களுக்கு ஆசாரித்தோப்பு பகுதியில் மாநகர் தெற்கு 1-ஆம் பகுதி 30 வது வார்டு வட்டக் கழகப் பிரதிநிதி மகாபாண்டி சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உடன் பகுதி செயலாளர் எம்.எஸ். செந்தில்குமார் மாணவர் அணி மாவட்ட செயலாளர் A.பார்த்திபன் மற்றும் நிர்வாகிகள், கார்மேகம், ரத்தினசாமி, பாம்சி கண்ணன், தக்காளி செந்தில்குமார், பிரகாஷ், முத்து, காளிதாஸ், மலைச்சாமி, முருகன், பாரதி தேவி உள்பட பலர் உள்ளனர்.

காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் மீது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் : அதிமுக மதுரை வேட்பாளர் டாக்டர் சரவணன் புகழாரம்..!

காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் மீது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்

மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் புகழாரம்

மதுரை

மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள காஞ்சி ஸ்ரீமகாபெரியவர் திருக்கோவிலில் தேர்தலில் வெற்றி பெற விசேஷ பிரார்த்தனையை மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா. சரவணன் மேற்கொண்டார்.

 அப்பொழுது அவருக்கு அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனத் தலைவர் நெல்லை பாலு தலைமையில் ஏழு சாஸ்திரிகள்  பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து கோவிலில் விசேஷ பிரார்த்தனை செய்து தீபாரதனை  காட்டும் பொழுது மழை பெய்தது அதனைத் தொடர்ந்து வேத விற்பனர்கள் பரிவட்டம் கட்டி தேர்தலில் வெற்றிபெற வாழ்த்தினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் சரவணன் கூறியதாவது

நான் அடிக்கடி காஞ்சி ஸ்ரீமகா பெரியவர் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்வேன். தற்பொழுது தேர்தல் நேரத்தில் கடுமையான பிரச்சாரம் இருந்தாலும் தற்போது இங்கே பிரார்த்தனை செய்யும்போது எனது மனம் அழுத்தம் குறைந்து விடுகிறது.

 மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் அதற்கு அச்சாரமாக இந்த தேர்தல் அமையும். எடப்பாடியாரின் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடைய பிரார்த்தனை மேற்கொண்டேன் 

காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் மீது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மிகுந்த பாசம் வைத்துள்ளார், அதற்கு பல்வேறு உதாரணங்களை சொல்லலாம். ஒரு சமயம் தமிழகத்தில் கடுமையாக வறட்சி ஏற்பட்டு மழை பெய்யவில்லை அப்போது தமிழகத்தில் மழை பெய்ய வேண்டி காஞ்சிஸ்ரீ மகா பெரியவரிடம் புரட்சி தலைவர் கோரிக்கை வைத்தார் அதனை தொடர்ந்து உடனடியாக மழை பெய்தது. தற்போது இங்கே நான் தரிசிக்க வரும்பொழுது மழை பெய்துள்ளது காஞ்சி மகா பெரியவரின் கருணை மழை இன்றைக்கு அதிமுகவிற்கு கிடைத்துள்ளது 

அது மட்டுமல்ல காஞ்சி மகா பெரியவர் சமைக்கும் பொழுது ஒரு பிடி அரசியை எடுத்து வைக்க வேண்டும் அந்த அரிசியை கோவில் மற்றும் ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறினார். அதேபோலத்தான் புரட்சித்தலைவர் ஏழை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை வழங்கினார். 

இந்த கோவிலுக்கு நான் வந்த போது எனக்கு மனம் அமைதி ஏற்படும், அதேபோல் பேட்டரி ரீசார்ஜ் செய்து போல இருக்கும்,நம்மை விட உயர்ந்த தெய்வங்கள் தான்.

இந்து அறநிலை துறையை திமுக சரியாக செயல்படுத்தவில்லை,திமுக அரசுக்கும் அறநிலையதுறைக்கும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது. இந்த துறையின் மூலம் சாஸ்திரிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. 2026 ஆண்டில் மீண்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வருவார் இதுக்கெல்லாம் ஒரு விமோசனம் போல அமையும்.

 செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள்தன் எழுச்சியாக வரவேற்பு தருகிறார்கள் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது போல இந்த தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் கூட்டணி

மாபெரும் வெற்றி பெறும் என கூறினார்.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின், வணிகர் தின பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் 41-வது வணிகர் தின பாதுகாப்பு மாநாடு மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டம் கோவை மண்டலத்தில் ஆரம்பித்து நெல்லை, தூத்துக்குடி வழியாக மதுரை வந்தடைந்தது.

பின்னர் மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையில் இருந்து ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மண்டல தலைவர் டி.எஸ்.மைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் சூசை அந்தோணி முன்னிலை வகித்தார். மண்டல செயலாளர் ஜெயக்குமார் தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், மாநில செயலாளர் குட்டி என்ற அந்தோணிராஜ், வடக்கு பகுதி தலைவர் சரவணன், மண்டல துணைத் தலைவர் வாசுதேவன், விரகனூர் பகுதி செயலாளர் ஆனந்தன், தெற்கு பகுதி செயலாளர் ரவிச்சந்திரன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

பள்ளி மாணவ மாணவிகளுக்கு விதைப்பந்து மூலம் மரங்கள் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு பயிற்சி..!

மதுரையில் ஜோ அந்திரியா இல்லத்தில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மரம் நடுவது குறித்தும், விதைப்பந்து மூலம் மரங்கள் வளர்ப்பதை பற்றியும், மேலும் விதைப்பந்து தயாரிப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம்(PSO),உலக மகளிர் கழகம்(IWO)
மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கம்,தாயின் மடி அறக்கட்டளை, இணைந்து நடத்தின.

இதில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் நிறுவனத் தலைவர் கா.ஜெயபாலன் மற்றும் ராமகிருஷ்ணன்,பிரியா கிருஷ்ணன், ராணிமுத்து (IWO), பூபதி, முருகேஸ்வரி,இந்து,இளவரசன், பள்ளி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த அமைப்புகளின் சார்பாக ஒரு லட்சம் மரங்கள் நட்டு வளர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

மதுரை அரசரடியில் இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பு தொழுகை.

ரமலான் பண்டிகையை யொட்டி மதுரை அரசரடியில் இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் மத்தியில் ஆண்டுதோறும் வரும் மற்ற மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் இம்மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.

நன்மை, தீமைகளைப் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டதும் இந்த மாதம் என்பதால், மாதம் முழுவதும் 30 நாள்கள் நோன்பு மேற்கொண்டு ரமலான் திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பெருநாளை உற்சாகத்துடன் கொண்டாடினர்.

மதுரையில் பள்ளிவாசல்களில் அதிகாலையிலிருந்து பெருநாளை முன்னிட்டு தொழுகைகள் நடைபெற்றன. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

மதுரை அரசரடியில் உள்ள இறையியல் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஆண்கள்,பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொழுகை முடிந்த பின்னர் கட்டித்தழுவி தங்களது ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தமுமுக மாவட்ட தலைவர் எஸ்.ஷேக் இப்ராஹிம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் முகம்மது கௌஸ், மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் சேக், ஐ.பி.பி மாவட்ட செயலாளர் அர்சத்புகாரி, மாவட்ட பொருளாளர் அப்துல்ஹமீது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்

சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்

சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை நியூ சினிமா தியேட்டர் அருகே உள்ள வள்ளலார் அன்னதான கூடத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

மேலும் ஏழை,எளியோருக்கு வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு திரைப்பட இயக்குனர் அலெக்ஸ் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக சேவகர் பாரதி சிவா, திமுக மதுரை தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மாரியப்பன், வழக்கறிஞர்கள் ஜெய்கணேஷ், இரவிக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மதுரை கனகு, சமூக சேவகர் ஸ்ரீமான் சரவணன், ஜெயபால்,ஒளிப்பதிவாளர் பாண்டி இணை இயக்குனர் வைரம் மூத்த நடிகர் அழகப்பன்,உதவி இயக்குனர்கள் பிரபு, சாமி, துணை நடிகைகள் சியாமளா கௌரி, முனீஸ்வரி, பத்ரகாளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் நாயுடு சேவா சங்கம் சார்பாக யுகாதி நாயுடு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி..!

மதுரையில் நாயுடு சேவா சங்கம் சார்பாக யுகாதி பண்டிகையை முன்னிட்டு நாயுடு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆர்.கே சேதுராமன் தலைமை வகித்தார். இலக்கிய இளந்தென்றல் தீபக் விழா பேருரையாற்றினார்.

இவ்விழாவில் ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் சென்றாய பெருமாள், வெலமநாயுடு மகாஜன சங்க மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில பொதுச் செயலாளர் சுருதி ரமேஷ், ரங்கா பில்டர்ஸ் கமலக்கண்ணன், கோம்பைராம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் சுதாகரன், பராசக்தி கல்வி குழுமம் தாளாளர் ஜெகதீசன், டாக்டர் சிட்டிபாபு, எஸ்.என்.பி டெய்ரி மில்க் நிறுவனர் ராஜேந்திரபாபு, பேராசிரியர் கதலி நரசிங்கப் பெருமாள், தொழிலதிபர் வாலிபால் செந்தில்குமார், பொம்மை ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் நாயுடு சேவா சங்க நிறுவனர் பி.கே சம்பத்குமார் நன்றி கூறினார்.

மதுரையில் பெத்தானியாபுரம் நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி விழா..!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பெத்தானியாபுரம் நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகளிரணியினர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு வினா-விடை புத்தகங்களை சங்கத்தலைவர் எவர்கிரீன் பாலமுருகன் மற்றும் செயலாளர் பொம்மை ரவிச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், டி.எம்.நாயுடு, மதுரை சிங்கம், ரெங்கராஜ், கஜேந்திரன், ராஜாராம், முத்துகண்ணன், டெய்லர் ரங்கராஜ், பாபு, அழகர்ராமானுஜம் மற்றும் மகளிரணியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தெலுங்கு, கன்னடம் பேசும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உகாதி புத்தாண்டு வாழ்த்து!

தெலுங்கு, கன்னடம் பேசும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உகாதி புத்தாண்டு வாழ்த்து!

தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் உகாதி, புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி – புத்தாண்டுத் திருநாள் (9-04-2024) நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் நலனில் என்றுமே அக்கறையுடன் செயல்பட்டும் வரும் கழக அரசுதான் யுகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது.

வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக்குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம் திகழ்கிறோம். தனித்தன்மையை இழக்காமல், சகோதர உணர்வைப் பேணி வாழ்ந்து வருகிறோம். புத்தாடை, மாவிலைத் தோரணம், அறுசுவையும் கலந்த பச்சடியுடன் யுகாதி திருநாளை வரவேற்கும் உங்கள் வாழ்வில் புத்தாண்டு மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலரெங்காபுரத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளர் டி.எஸ்.கே ஞானேஸ்வரன் ஏற்பாட்டில் வாக்கு சேகரிப்பு..!

மதுரை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியர் ஸ்ரீனிவாசனை ஆதரித்து, பாலரெங்காபுரம் மண்டல் 165 வது பூத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். இந்நிகழ்வில் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜே.கே.ரவி, 165-வது பூத் கிளைத் தலைவர் எம்.ஏ.டி சேகரன் மற்றும் மகாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES