Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 9)

செய்திகள்

All News

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!

May be an image of 9 people and text

“எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு – நாம்

எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு

சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே – இதைத்

தரணிக்கெல் லாமெடுத்து ஓதுவோமே”

சுதந்திரம் என்பது சமத்துவமெனும் பாரதியின் கனவை நினைவாக்க இந்நன்நாளில் உறுதியேற்போம்.

அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்!

₹3 லட்சம் மானியம்! 1000 முதல்வர் மருந்தகம்! ரூ.500, ரூ.1000 – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

₹3 லட்சம் மானியம்! 1000 முதல்வர் மருந்தகம்! ரூ.500, ரூ.1000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்த பின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய சுதந்திர தின உரை விவரம் பின்வருமாறு:

“மக்களுக்கு உண்மையாக இருப்பதை மக்கள் தொண்டு என்று செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடர்ச்சியாக அளித்து வரும் வெற்றிக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ்நாட்டின் உன்னதமான கோட்பாடுகளை இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தி காட்டும் கடமையும் பொறுப்பும் நமக்கு உண்டு.மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன் பெற்றுத் தந்தவர் கலைஞர். 4வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றும் வாய்ப்பை பெற்றதில் பெருமை அடைகிறேன்.

முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்படும். இதில் சிறப்பாக செயல்படும் மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடன் உதவியோடு, ₹3 லட்சம் மானியம் அரசால் வழங்கப்படும்.2026 ஜனவரி மாதத்துக்குள் சுமார் 75,000-க்கும் மேற்பட்ட அரசுப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஓய்வுபெற்ற விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 21 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

தியாகிகள் குடும்பத்திற்கு வழங்கப்படும் ரூ. 11 ஆயிரம் ஓய்வூதியம் ரூ. 11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். கட்டபொம்மன், வ.உ.சி., மருது சகோதரர்களின் வழித்தோன்றல்களுக்கான ஓய்வூதியம் ரூ. 10,500 ஆக உயர்த்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

குற்றங்களை தடுக்க கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை: கரூர் புதிய எஸ்பி தகவல்

குற்றங்களை தடுக்க கூடுதல் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை: கரூர் புதிய எஸ்பி தகவல்

கரூர்: கரூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று (ஆக.

14ம் தேதி) பொறுப்பேற்றுக் கொண்ட கே.பெரோஸ் கான் அப்துல்லா கூறியுள்ளார்.

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகஸ்ட் 8ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய கி.பிரபாகர், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கே.பெரோஸ் கான் அப்துல்லா கரூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக கே.பெரோஸ் கான் அப்துல்லா இன்று (ஆக. 14ம் தேதி) காலை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது பேசிய கே.பெரோஸ் கான் அப்துல்லா கூறியதாவது: பொதுமக்கள், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சட்டம், ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்படும். குற்றங்களை தடுக்க அதிகளவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது பெருகி வரும் இணைய வழி குற்றங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கணினி வழி குற்றங்கள் பற்றி மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, புகார்கள் மீது முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். பொதுமக்களுக்கும், காவல் துறைக்கும் இடையே நட்புணர்வு பேணப்படும். கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள், சூதாட்டம் தொடர்பான புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி காவல் நிலையங்களை அணுகலாம். காவல் நிலையங்களில் குறைகள் இருந்தால் உயர் அதிகாரிகளை உடனடியாக தொடர்புக் கொள்ளலாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை 94421 49290 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். இவ்வாறு பெரோஸ் கான் அப்துல்லா கூறினார்.

78-வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் 100 அடி நீள மூவர்ண கொடி அணிவகுப்பு ….

Image

ஊடகத்தினருக்கு அழைப்பு 78-வது ஆண்டு இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அவர்கள் தலைமையில் நாளை (15.8.2024) வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னை அண்ணா சாலை தர்கா எதிரில் இருந்து சத்தியமூர்த்தி பவன் வரை 100 அடி நீள மூவர்ண கொடி அணிவகுப்பு நடைபெறும். அதைத் தொடர்ந்து சேவாதள தலைவர் திரு. குங்பூ எஸ்.எக்ஸ். விஜயன் தலைமையில் நடைபெறும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தின உரையாற்றுகிறார். இந்நிகழ்வில் நடுவண் அரசின் முன்னாள் அமைச்சர் திரு. ப. சிதம்பரம், எம்.பி. அவர்கள் பங்கேற்று சுதந்திர தின சிறப்புரையாற்ற உள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பசுபதி தன்ராஜ் அவர்களின் சமுதாய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருந்தினர் நினைவு பரிசு வழங்கப்படும். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னணித் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். மேலும், காலை 10.30 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதள மாநில செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கப்பட்ட முதல் பரிசிற்கான விருதிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (14.8.2024) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சந்தித்து, புதுடில்லியில் உள்ள தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பால் 2022-23-ஆம் பருவத்தில் தேசிய அளவில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கான முதல் பரிசிற்கான விருதினை தர்மபுரி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், தேசிய அளவில் சிறந்த நிதி மேலாண்மைக்குரிய முதல் பரிசிற்கான விருதினை கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் வழங்கப்பட்டதையொட்டி, அவ்விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், தமிழ்நாட்டில் செயல்படும் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகளை மேம்படுத்திடவும், கரும்பு விவசாயப் பெருமக்களின் நலன் காக்கவும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் துறை சர்க்கரை ஆலைகள், என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. 2023-24-ஆம் அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் 30 சர்க்கரை ஆலைகள் அரவையை மேற்கொண்டுள்ளன.

கரும்பு விவசாயிகள் மீது அக்கறை கொண்ட இவ்வரசு கடந்த மூன்று ஆண்டுகளில் உற்பத்தி ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கரும்பு விலையை வழங்கிட சர்க்கரை ஆலைகளுக்கு வழிவகைக் கடனாக சுமார் 1224.36 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது. 2023-24-ஆம் அரவைப் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ. 215 /- சிறப்பு ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் புதிய கரும்பு இரகங்கள், பருசீவல் நாற்றுகள்,

தோகை தூளாக்குதல், கரும்பு அறுவடை இயந்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கரும்பு அபிவிருத்தப் பணிகளுக்காவும், ஆலைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் சுமார் ரூ.13.27 கோடி நிதியுதவி செய்துள்ளது. நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைமின் உற்பத்தித் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் இவ்வரசு 1.10.2022 முதல் சுமார் 35 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கி தொழிலாளர்களின் நலன்காக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நலிவடைந்த நிலையிலிருந்த சர்க்கரை ஆலைகள் மீண்டும் வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

புதுடில்லியில் உள்ள தேசிய அளவிலான கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைக் கண்டறிந்து விருது வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2022-23-ஆம் பருவத்தில் தேசிய அளவில் ஒட்டுமொத்த செயல்திறனுக்கான சிறந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையாக தர்மபுரி மாவட்டம், கோபாலபுரத்தில் செயல்படும் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசைப் பெற்றுள்ளது. மேலும், தேசிய அளவில் சிறந்த நிதி மேலாண்மைக்குரிய முதல் பரிசை கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராபாளையத்தில் செயல்படும் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை பெற்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக சர்க்கரை ஆலைகள் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்று வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப., சர்க்கரைத்துறை இயக்குநர் த. அன்பழகன், இ.ஆ.ப., சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சுதந்திர தின வாழ்த்துக்கள்…

Image

இந்திய விடுதலைக்கு காந்தியடிகள் தலைமையில் போராடி, சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் நவீன இந்தியாவை உருவாக்கி பிரதமர் பொறுப்பு வகித்த பண்டித நேரு முதற்கொண்டு தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க உரையை நிகழ்த்திய பெருமை இந்திய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆனால், விடுதலை போராட்டத்தில் கடுகளவு பங்கு வகிக்காத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து மீண்டும் மூன்றாவது முறை அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. மூன்றாவது முறை ஆட்சியமைந்த பா.ஜ.க.விற்கு மதரீதியாக பிளவுபடுத்துகிற அரசியலுக்கு பாடம் புகட்டுகிற வகையில் மக்கள் வாக்களித்து அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவராக காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி சார்பாக தலைவர் ராகுல்காந்தி பொறுப்பேற்று இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கிற வகையில் உரிமைக் குரல் எழுப்பி வருகிறார். அவரது பங்களிப்பு இந்திய ஜனநாயகத்தை செழுமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் 78 ஆவது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடுகிற நேரத்தில் மதவெறி சக்திகளை மாய்த்திடவும், மாநில உரிமைகள் பறிப்பதை முறியடிக்கவும், ஜனநாயகத்தையும், தேச ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் கட்டிக் காத்திடவும் சுதந்திர திருநாளில் சூளுரையோற்போம். இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்காமல் முறியடிக்கிற பணியை மிகச் சிறப்பாக செய்கிற வகையில் பரப்புரை மேற்கொண்டு இந்திய இறையாண்மையை பாதுகாப்போம். தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆயத்தத்திற்காகவும், அமைப்பு சார்ந்த விஷயங்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

May be an image of 3 people and dais

1⃣ செபி மற்றும் அதானி இடையேயான தொடர்பின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் குறித்து முழுமையான விசாரணை தேவை. பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்களின் பணம் பாதிக்கப்படக் கூடாது. மோடி அரசு உடனடியாக செபி (SEBI) தலைவரை பதவியில் இருந்து நீக்கி மற்றும் இது தொடர்பாக விசாரிக்க, பாராளுமன்றக் கூட்டுக்குழுவை (JPC) அமைக்க வேண்டும்.

2⃣ கட்டுப்படுத்தப்படாத வேலையின்மை மற்றும் கட்டுப்பாடற்ற பணவீக்கம் மற்றும் குடும்பச் சேமிப்புகள் குறைதல் ஆகிய அழுத்தமான பிரச்சனைகள் குறித்து எங்களுடைய கவனம் இருக்கவேண்டும் என முடிவுசெய்யப்பட்டது. ஏழை, நடுத்தர மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

3⃣ அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல் தடையின்றி தொடர்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

4⃣ நமது விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராடும்.

தேசபக்தியுள்ள நமது இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

5⃣ கோடிக்கணக்கான பயணிகள் அவதிப்படும் நிலையில், ரயில் தடம் புரள்வது வாடிக்கையாகி விட்டது. காலநிலை தொடர்பான பேரழிவுகள் மற்றும் சரிந்து வரும் உள்கட்டமைப்பு ஆகியவையும் கவலைப்படவைக்கும் விஷயமாக உள்ளது.

இந்தப் பிரச்னைகளைச் குறித்து விரிவாக தேசிய அளவில் பிரச்சாரம் செய்து மக்களிடம் கொண்டு செல்வோம்.

– காங்கிரஸ் தலைவர் திரு Mallikarjun Kharge

ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கிற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிற செயலை தொடர்ந்து செய்து வருகிறார். இவரது பேச்சுகளாலும், நடவடிக்கைகளாலும் எழுந்த சர்ச்சைகளை போல இதற்கு முன்பு எந்த ஆளுநர் மீதும் எழுந்ததில்லை. அரசமைப்புச் சட்ட உறுப்பு 163-ன்படி தமிழக அமைச்சரவையின் உதவியுடனும், அறிவுரையின்படியும் தான் மாநில ஆளுநர் செயல்பட வேண்டும். ஆனால், தமிழக ஆளுநர் தமிழக அமைச்சரவையின் பரிந்துரைகளை உதாசீனப்படுத்துகிற போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய 12-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்டகாலமாக இழுத்தடித்து வருகிறார். அரசமைப்புச் சட்டப்படி ஒன்று மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது அவரது கருத்தை கூறி சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்ப வேண்டும். அதற்கு பிறகு தமிழக சட்டப்பேரவை அரசமைப்புச் சட்ட உறுப்பு 200-ன்படி திரும்பவும் அந்த மசோதாவை திருத்தத்துடனோ அல்லது திருத்தம் இல்லாமலே நிறைவேற்றி திரும்ப ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு ஒப்புதல் வழங்குவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை. ஆனால், அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருவதால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் அளித்த தீர்ப்பில் ஆளுநருக்கு சம்மட்டி அடி கொடுக்கிற வகையில் தெளிவான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார் ? அரசமைப்பு சட்டப்படி செயல்படாமல் இருப்பதற்கு அவருக்கு யார் அதிகாரம் அளித்தார்கள் ? இதன்மூலம் உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிறார். அரசமைப்புச் சட்டம் ஆளுநருக்கு தெரியுமா ? தெரியாதா ? உச்சநீதிமன்றத்தோடு விளையாட வேண்டாம் என கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதேபோல, அமைச்சர் பொன்முடி மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த பிறகு அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். ஆனால், ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் சண்டித்தனம் செய்தார். இதற்கு பிறகு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பெறப்பட்ட ஆணையின்படி பொன்முடிக்கு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை ஆளுநருக்கு ஏற்பட்டது. இதற்கு பிறகும் அவர் பாடம் கற்றதாக தெரியவில்லை. இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக தமிழக ஆளுநர் தாம் வகிக்கிற பதவியின் மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடும், விரோத போக்கோடும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா கிராமப்புற மக்களுக்கு எதிரானது என மசோதாவை மறுபரிசீலனை செய்வதற்கு ஆளுநருக்கு என்ன உரிமை இருக்கிறது ? மசோதாவை நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகத் தான் பொருள் என்று புதிய வியாக்யானம் கூறுவது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும். தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளாத மும்மொழி திட்டம், புதிய கல்விக் கொள்கை, சனாதன தர்மம் தான் நம்; பாரதத்தை உருவாக்கியது மற்றும் ஜியூ போப்பின் திருக்குறள் மொழி பெயர்ப்பு ஆன்மா இல்லாத சவம் போல் இருக்கிறது என்றும், திருவள்ளுவர் ஒரு ஆன்மீகவாதி என்று மதச்சாயம் பூசுவது என்று தமிழர்களின் உணர்வுகளுக்கு விரோதமாக ஆணவத்தோடும், அதிகார மமதையோடும் கருத்து கூறியவர் ஆளுநர் ஆர்.என். ரவி.

அரசமைப்புச் சட்டம் ஏற்றுக் கொண்ட மதச்சார்பற்ற கொள்கைக்கு விரோதமாக, எந்தவொரு நாடும் ஒரு மதத்தை சார்ந்து தான் இருக்க முடியும். அதில் இந்தியா விதிவிலக்கல்ல என்று பேசியதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் எழுச்சியினால் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தை கொச்சைப்படுத்தி ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக பேசியது, நாடு முழுவதும் இளைஞர்களால் எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்ட அக்னிபாத் திட்டம் ஒரு புரட்சிகரமான திட்டம் என்று கூறியது அனைத்துமே மக்கள் விரோத கருத்துகளாகும்.

தமிழ்நாடு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிப்பதில் தமிழக அரசின் பரிந்துரையை புறக்கணித்து ஆளுநர் தன்னிச்சையாக தேடுதல் குழுவை அமைத்து செயல்பட்டு வருகிறார். இதனால் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது. சென்னை உள்ளிட்ட நான்கு பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமிக்கப்படாமல் பல மாதங்களாக காலியாக இருக்கிறது. இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் வகையில் சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவிற்கு ஒப்புதல் கொடுக்காமல் எதேச்சதிகாரமாக செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் உயர்கல்வித்துறையை சீரழித்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தின் போது ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாகும். அந்த மரபின் அடிப்படையில் ஆளுநர் உரையை தயாரிப்பது மாநில அரசு. அதை முழுமையாக படிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அந்த உரையை முழுமையாக வாசிக்காமல் திரித்து, மாற்றி, விட்டு விட்டு வாசித்து புதிதாக சேர்த்து அவர் ஒரு உரையை வாசித்தது அப்பட்டமான சட்டப்பேரவை விதிமீறலாகும். இதன்மூலம் சட்டப்பேரவையின் மாண்பை அவமதித்த ஆளுநருக்கு பாடம் கற்பிக்கிற வகையில் தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி அதன்மூலம் தமிழக அரசின் உரையை அவைக் குறிப்பில் முழுமையாக இடம் பெறச் செய்து பேரவையின் மாண்பு காப்பாற்றப்பட்டது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. அரசின் செயல்பாடுகளை முடக்கி, வளர்ச்சியை பாதித்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து, பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிற தமிழக ஆளுநரின் பதவிக் காலம் ஜூலை 31 ஆம் தேதி முடிவடைந்தது. அவரை மீண்டும் ஆளுநராக நியமிக்கக் கூடாது என்பது தான் தமிழக மக்களின் ஏகோபித்த கோரிக்கையாகும்.

இந்நிலையில் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில் வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் ஆர்.என். ரவி வழங்குகிற தேநீர் விருந்தை தமிழக காங்கிரஸ் புறக்கணிக்கிறது. இதன்மூலம் தமிழகத்தின் உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கிற வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

தென் சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அடையார் துரை அவர்களின் தலைமையில் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கோல்டன் பீச் பன்னீர் மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ. அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .

இக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருமான திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் துணை தலைவர்கள் திரு பொன் கிருஷ்ணமூர்த்தி திரு கீழானூர் ராஜேந்திரன் திரு சொர்ண சேதுராமன் திருமதி இமயா கக்கன், அமைப்பு செயலாளர் திரு ராம் மோகன், பொது செயலாளர்கள் திரு D செல்வம் திரு S A வாசு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் திருமிகு அமிர்தவர்ஷினி, திருமிகு சுபாஷினி AICC உறுப்பினர் திரு ரவீந்திரதாஸ் மற்றும் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், துறைகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் ” பெருந்தலைவர் காமராஜர்” தலைப்பில் பேச்சு போட்டி நடைபெற்று மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

வயநாடு நிலச்சரிவு: 205 உடல் பாகங்கள் கண்டெடுப்பு!

எமனாக வந்த நிலச்சரிவு… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு நடந்த சோகம்!! |  வவுனியா நெற்

வயநாடு நிலச்சரிவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் 205 உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த பேரிடரில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். இதையடுத்து அவர்களை தேடும் பணியில் ராணுவ வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என 11 பேர் கொண்ட குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

ராணுவப் படையினரும் தங்களின் தேடுதல் பணியை கடந்த 9-ம் தேதி முடித்துக் கொண்டு திரும்பினர். அதே நேரத்தில் மாயமான 100- க்கும் மேற்பட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டி இருப்பதால் மற்ற பிரிவுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் கடந்த 9-ம் தேதி முதல் தேடுதல் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 126 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. 1000த்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மீட்புப் பணிகளில் தற்போது வரை 200க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். அடுத்து வரும் நாட்களில் ஆற்றங்கரையோர பகுதிகளில் மீட்புக்குழுக்கள் தேடுதல் பணியில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES