Wednesday , December 11 2024
Breaking News
Home / செய்திகள் (page 120)

செய்திகள்

All News

கின்னஸ் ரெக்கார்ட் – பெண் முதல் பிரசவத்தில் 11 ஆண் குழந்தைகள்

சவூதி ரியாத்தில் 25 வயதான பெண் முதல் பிரசவத்தில் 11 ஆண் குழந்தைகளை பெற்று எடுத்திருக்கிறார்.

இதுவரைக்கும் கின்னஸ் ரெக்கார்ட் 7 குழந்தைகள் தான்.

 

 

நிஜ அசுரன் – பஞ்சமி நிலங்கள்

பஞ்சமி நிலங்கள் / தலித் உரிமை களத்தின் ‘நிஜ அசுரன்’.!

தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “அசுரன்” திரைப்படம் பஞ்சமி நிலங்கள் குறித்து சில இடங்களில் பேசுவதாகவும்,அதன் தாக்கத்தால் சமூக வலைத்தளங்களில் பஞ்சமி நிலம் வரலாறு,பஞ்சமி நிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கிறது…

இந்திய சாதிய கட்டமைப்பில் விளிம்புநிலை மக்களுக்கு ஏன் நிலங்கள் வழங்க வேண்டும் என்று பஞ்சமி நிலங்களின் “X-Factor”ஆக விளங்கிய ஜெ.எச்.ஏ.திரமென்ஹீர் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த போது,பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அளித்த சென்னேரி பறையர் இன மக்களின் நிலை குறித்த அறிக்கையில் (Notes On Pariah) குறிப்பிட்டு இருந்தது…

‘’கணத்த இதயத்துடன் இதை குறிப்பிடுகிறேன்.சென்னேரி பகுதி பறையர் இன மக்கள் வழக்கமான மனிதர்களை விடவும் கணிசமாக என்று கூற இயலாத அளவுக்கு கீழ் நிலையில் உள்ளனர்.அவர்களில் பெரும்பாலனோர் மோசமான ஊட்டச்சத்து கொண்டவர்களாக,படுபயங்கரமான குடிசையில்,மோசமான ஆடைகளை அணிந்து,தொழுநோய் மற்றும் மற்ற கொடுரமான நோய்களை கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.அவர்களுடைய குடிசைகள் பன்றிகள் வசிக்கும் இடங்களை போன்றும், கல்லாதவர்களாகவும்,யாராலும் கவனிக்கப்படாத,இரக்கப்படாத மனிதர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.இது அனைவரும் அறிந்த உண்மைதான் என்றாலும்,நான் இவ்வாறு இந்த மனிதர்களைப் பற்றி கூறுவதற்காக மதராஸ் மாகாண வருவாய் துறை மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.இந்தியா நாட்டினுடைய அல்ல,ஆனால் இங்கிலாந்து மக்களின் பொது மனசாட்சி இந்த மகிழ்ச்சியற்ற பரிதாபத்துக்குரியவர்களின் நிலையை கண்டு,அதை தணிப்பதற்காக வெகுண்டு எழும்காலம் வெகுதொலைவில் இல்லை.’’

“பறையர்களிடம் இருக்கும் பொருட்கள் மிகவும் பழமையானது. (மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வாங்கி வந்த பொருட்கள் போல). மேல் சாதி இந்துக்கள் இவர்களுக்கு மிகக் கேவலமான வேலைகளையே கொடுக்கின்றனர். இந்து மதம் இவர்களது ஆன்மீக வாழ்விற்கோ அல்லது பொருளாதார முன்னேற்றத்திற்கோ எந்தவிதத்திலும் பயனளிக்கவில்லை. இந்துக்கள் இவர்களை மனிதக்குலத்தின் மிகத்தாழ்ந்த இனமாகவே கருதுகிறார்கள். மிக மோசமான சுகாதாரமற்ற நிலையில் வாழ்கிறார்கள்”

“1844 ல் அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின்னும் அடிமைகளாக இருந்த பறையர்கள் படியாட்கள் என்ற முறையில் மீண்டும் அடிமைகளாக்கபடுகின்றனர். இவர்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக தங்களையும் தங்கள் வாரிசுகளையும் மொத்தமாக அடிமைகளாக்கிக்கொள்கின்றனர். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு ஒரே வழிதான் இருந்தது. அதாவது மற்றொரு எஜமானிடம் கடன் வாங்கிக் கொடுத்துவிட்டு புது எஜமானிடம் மனித அடமானமாகப் போவதுதான் அந்த வழி. வேறு வழியில் விடுபட முயலும் பறையர்களை கிராமம் அல்லது தாலுக்கா நீதிமன்றத்தில் உடன்பாட்டை மீறினார்கள் என்று (!) ‘உடன்பாட்டு மீறல் சட்டத்தின்’கீழ் எஜமானர்கள் வழக்கு தொடுத்து தண்டனை வாங்கிக்கொடுக்கிறார்கள். மிராசுதாரர்களாக பிராமணர்களும் வெள்ளாளர்களும் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களே நிலங்கள் அனைத்தையும் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்து உள்ள இடைச்சாதியினரும் நிலங்களை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடைசியிலுள்ள பறையர்கள் எல்லோருமே நிலமற்ற அடிமைகளாக இருக்கிறார்கள். அப்படியே பறையர்கள் புறம்போக்கு நிலத்திற்கு அரசிடம் விண்ணப்பம் செய்தாலும் அந்த நிலம் மிராசுதாரருக்கு வேண்டுமா அல்லது வேண்டாமா என்று அரசு கேட்கும்(!). மிராசுதாரர் வேண்டாம் என்று சொல்வது கிடையாது. அடுத்து பட்டாதாரரிடம் அந்த நிலம் வேண்டுமா என்று அரசு கேட்கும். அவரும் வேண்டாம் என்று சொன்னால்தான் அந்த புறம்போக்கு நிலம் பறையர்களுக்கு கிடைக்கும்.ஆனால் பறையர்கள் நிலம் வைத்திருக்க விரும்பி அரசைக்கேட்டால் கொடுக்க மாட்டார்கள் என்று எண்ணி புறம்போக்கு நிலத்தை எடுத்து அதைக் கஷ்டப்பட்டு சரிசெய்து விளை நிலமாக்கினால் அதுவரை அமைதியாய் இருக்கும் மிராசுதாரர்கள் கடைசியில் அந்த நிலத்தை அபகரித்துவிடுகின்றார்கள்.”

“சிறிது நிலம், சொந்தமான குடிசை, எழுதப்படிக்க தெரிந்திருத்தல், தனது உழைப்பில் சுதந்திரம், தன்மானம் ஆகியவற்றை அவர்களுக்கு கொடுத்தால் பறையர்களின் வாழ்வு இப்போதிருக்கும் மகிழ்ச்சியற்ற அடிமை நிலையிலிருந்து மாறுபட்டதாக இருக்கும்” என்று 5 அக்டோபர் 1891 அன்று கையெழுத்திட்டு தன் அறிக்கையை ஜெ.எச்.ஏ.திரமென்ஹீர் சமர்ப்பிக்கிறார். 1891 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்திற்கு பிறகு 1892 செப்டம்பர் 30 அன்று அரசாணையை (அரசாணை எண் 1010/ நாள் : 30.09.1892) வெளியிட்டது.இச்சட்டத்தின்படி “பஞ்சமி நிலம்” என்ற பெயரிலும் “டி.சி. நிலம் (Depressed Class Land)” என்ற பெயரிலும் இந்தியா முழுவதுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டு,தமிழகத்தில் மட்டும் சுமார் 12 லட்சம் ஏக்கர் நிலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கொடுக்கப்பட்டது…

பஞ்சமி நிலம் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஜெ.எச்.ஏ. திரமென்ஹீர் குறித்து நாம் நினைவு கூறுவது இன்றியமையாததாகும்…
இன்றைய காலக்கட்டத்தில் தலித்கள் சாதி இந்துக்களிடம் பஞ்சமி நிலங்களை வஞ்சகமாக இழந்து கையருநிலையில் நிற்கிறோம்…இருப்பினும் இன்று இல்லை என்றாலும்,என்றாவது ஒருநாள் திரமென்ஹீர் விரும்பிய படி பஞ்சமி நிலங்கள் தலித் மக்களிடமே நிச்சயம் பெற்று தரப்படும் என்பது மட்டும் உறுதி.!

விந்தணுவை தானம் செய்யுங்க – ஹீரோவிடம் வேண்டுகோள் – பாவனா பாலகிருஷ்ணன்

பாவனா பாலகிருஷ்ணன் – இவரை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுத்து வழங்கும் VJ என்று மட்டும் தனித்து குறிப்பிட்டு சொல்லமுடியாது. தொகுப்பாளி, டான்சர், கட்டுரையாளர், டப்பிங் ஆர்டிஸ்ட், பாடுவது, ஸ்போர்ட்ஸ் ஜர்னலிசம் என பன்முகத்தன்மை திறன் உடையவர்.

இவர் சமீபத்தில் வெளியான “வார்” படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் இவர் தட்டிய ரெவியூ பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம்.

” ஆண்களுக்கு விறு விறு ஆக்ஷன், கார் சேசிங் மற்றும் ஹாலிவுட் போன்ற ஸ்டுயன்ட் காட்சிகளுக்காக படம் பிடிக்கும். பெண்களுக்கு படம் பிடிக்க இரண்டு முக்கிய காரணம் டைகர் ஷெராப் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் தான். அவ்வளவு அருமை. ஹ்ரித்திக் இன்னும் அதிக படங்கள் நடிக்க வேண்டும் மேலும் அவர் விந்தணு தானம் கூட செய்யவேண்டும். போய் படத்தை பாருங்கள்.” என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார். இது புதுவிதமான தானம் தான் பாவனா பாலகிருஷ்ணன்…..

 

தப்பு எம்மேலதா – சொல்கிறார் இளம்பெண்

சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு வீடியோவை நாங்கள் இளைஞர் குரலில் வெளியிட்டு இருக்கிறோம். “தப்பு எம்மேலதா – ஒத்துக்கறேன், மாத்திக்கறேன்”

இந்த வீடியோ பதிவு என்ன சொல்வது என்றால், இந்த நாட்டில் நடக்கும் தவறுகள் அனைத்திற்கும் நாம் தான், நான் தான், பொறுப்பு என்றவாறு செல்கிறது.

இந்த வீடியோ பதிவை ஆராய்ச்சி செய்து பார்த்தால் கண்மூடித்தனமாக ஆம் என்ற பதில் தான் வருகிறது.

தயவுசெய்து இந்த வீடியோவை பார்த்து அனைத்து மக்களும் நம்மளை தயார்படுத்திக் கொண்டால் நமது எதிர்காலம் சிறப்பாக அமையும் என நம்புவோமாக.

இப்படிக்கு – இளைஞர் குரல்

https://www.youtube.com/watch?v=0Lt9uKWoZ4A&feature=youtu.be

டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியல் – ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா புதிய உயர்வைப் பெற்றுள்ளார்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும்(176, 127) சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 17-வது இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார்.

இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததையடுத்து தரவரிசையில் 38 இடங்கள் உயர்ந்து, 25-வது இடத்துக்கு முன்னேறியுல்ளார்.

கேப்டன் விராட் கோலி கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரிக்குப் பின் 900 புள்ளிகளுக்கு கீழ் குறைந்து தொடரந்து 2-வது இடத்தில் 899 புள்ளிகளுடன் நீடிக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் உள்ளார்.

இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தியதையடுத்து பந்துவீச்சாளர்கள் டாப்10 வரிசையில் இடம் பிடித்து 10-வது இடத்தை அடைந்துள்ளார். இதற்கு முன் 14-வது இடத்தில் அஸ்வின் இருந்தார். ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் அஸ்வின் முதல் 5 இடங்களுக்குள் உள்ளார்

மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி 18-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீசசாளர் தரவரிசையில் 710 புள்ளிகளை ஷமி பெற்று இருப்பது இதுதான் முதல் முறையாகும்.

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா 2-வது இடத்துக்கு உயர்ந்து, வங்கதேச வீரர் சகிப் அல்ஹசனை 3-வது இடத்துக்கு பின்தங்க வைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்க வீரர் டீ காக் சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்று 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். எல்கர் 5 இடங்கள் முன்னேறி 14-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் மீது தேசத்துரோக வழக்கு

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குனர் மணிரத்தினம் உட்பட 50 முக்கிய பிரமுகர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது, நாட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு இளைஞர் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்திய நாட்டின் குடிமகனின் கருத்து சுதந்திரத்தை பறிப்பது அது பாரதப் பிரதமராக இருந்தாலும், இது சர்வாதிகார போக்கு, இது சரியா? என ஐயம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் என்னும் அரசர்கள் பிரதம மந்திரியை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை மறந்து விடாதீர்கள்.

– தமிழ்நாடு இளைஞர் கட்சி

சீனாவை உலுக்கிய வீடியோ

சீனாவை உலுக்கிய வீடியோ:

இந்த குழந்தையின் தாய் பிரசவத்தில் இறந்து விட்டார் அந்த தாயின் இதயத்தை ஒருவருக்கு தானம் செய்து விட்டார் அந்த இதயம் இந்த வீடியோவில் வரும் கருப்பு சட்டை அணிந்த நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது குழந்தை அழுகின்றது குழந்தையின் அழுகையை நிறுத்த அந்தக் குழந்தையை ஒவ்வொருவராக மற்றவர்கள் அரவணைக்கிறார்கள்ஆனால் அந்த குழந்தை அழுகையை நிறுத்தவில்லை பிறகு அந்த குழந்தையை கருப்பு சட்டை அணிந்த நபருக்கு நபரிடம் கொடுத்தபொழுது அந்த அம்மாவின் இதய துடிப்பை கேட்டு அந்த குழந்தை அழுகையை விட்டுவிட்டு அந்த நபரிடம் கொஞ்சி விளையாடுகிறது.

என்ன ஒரு இறைவனின் படைப்பு

 

YouTube player

உண்மையும் பொய்யும்…

ஒரு நாள் உண்மையும் பொய்யும் சந்தித்து கொண்டன…

நீண்ட நேரம் இரண்டும் பேசி கொண்டிருந்தன இந்த உலகம் யாரை நம்பும் என்னைத்தான் என்னைத்தான் என்று இரண்டும் மாறி மாறி சொல்லிக் கொண்டே அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றன…

தன் ஆடைகளை களைந்து கிணற்றில் இறங்கி குளிக்க ஆரம்பித்தன சுத்தமான நீர் மிதமான சூட்டில் உண்மை மெய்மறந்து குளிக்க ஆரம்பிக்க, பொய் மேலே வந்து உண்மையின் ஆடைகளை அணிந்துக்கொண்டு நான் தான் உண்மை என ஊர்சுற்ற ஆரம்பித்து விட்டது…

கிணற்றில் இருந்த உண்மை அம்மனமாக வெளியே வர அதன் ஆடைகளை காணோம் பொய் ஆடையையும் அணிய முடியாது இருந்தாலும் ஊரில் உள்ள எல்லோரிடமும் நான் தான் உண்மை என சொல்லியும் யாரும் நம்பவில்லை கல்லால் அடிக்க தொடங்கி விட்டனர்..
உண்மை மீண்டும் போய் கிணற்றில் ஓளிந்து கொண்டது …

இந்த பொய் ஆனந்தமாக தனது புளுகிமூட்டை கதைகளுடன் மின்னல் வேகத்தில் உலகை சுற்றி வந்தது…

 

சுடிதார் வீராங்கனை கவிதா, உலக மல்யுத்தத்தில் களமிறங்குகிறார்

மஞ்சள் சுடிதாரில் வந்த கவிதா தேவி, ஒரு வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி சுழற்றியடித்த வீடியோவை பார்த்தவர்கள் மிரண்டிருப்பார்கள். ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, தற்போது, WWE எனப்படும் உலக பொழுதுபோக்கு மல்யுத்த அமைப்பில் சேருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தப் பெருமையை பெறும் முதல் இந்தியப் பெண் கவிதா.

முன்னாள் பளுதூக்கும் வீராங்கனையான ஹரியானாவைச் சேர்ந்த கவிதா தேவி, சில மாதங்களுக்கு முன் நடந்த மே யங் கிளாசிக் பெண்கள் போட்டியில், கவிதா தேவி பங்கேற்றார்.

பிபி புல் புல் என்ற வீராங்கனையை தலைக்கு மேல் தூக்கி வீசிய காட்சி வீடியோவில் பரவியது. அந்தப் போட்டியில் கவிதா தோல்வியடைந்தாலும், மஞ்சள் நிற சுடிதார் அணிந்து அவர் பங்கேற்ற வீடியோ வெகு வேகமாக பரவியது.

மிகப் பிரபலமான மல்யுத்த வீரரான, பஞ்சாப்பை சேர்ந்த கிரேட் காளியிடம் பயிற்சி பெற்றவர் கவிதா. தற்போது டபிள்யூடபிள்யூஇ அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த அமைப்புடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் முதல் இந்திய பெண் என்ற பெருமை கவிதாவுக்கு கிடைத்துள்ளது. இந்த போட்டிகளுக்காக சிறப்பு பயிற்சிகள் அவருக்கு வழங்கப்பட உள்ளது.

இவருடன், ஜோர்டானை சேர்ந்த ஷாதியா பெய்ஸோ என்ற பெண்ணும், ஒப்பந்தம் செய்துள்ளார். அரபு நாட்டைச் சேர்ந்த ஒரு பெண். மல்யுத்தத்தில் களமிறங்கப் போவதும் இதுவே முதல் முறையாகும்.

வரலாற்றில் இன்று

*?நாட்டு ⚖ நடப்பு*

*??

வரலாற்றில் இன்று
Today in History

??*

வரலாற்றில் இன்று

_*?வியாழன் ?*_

*✍பதிவு நாள்: 03-10-2019*

*கிரிகோரியன் ஆண்டின் 276 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 277 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 89 நாட்கள் உள்ளன.*

*?நிகழ்வுகள்*

?கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர்.

?1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது சுல்தானாக முடி சூடினான்.

?1739 – உருசிய-துருக்கிப் போர் (1736–1739) முடிவில் உருசியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.

?1908 – பிராவ்தா செய்திப்பத்திரிகை லியோன் திரொட்ஸ்கியினாலும் அவரது சகாக்களினாலும் வியென்னாவில் வெளியிடப்பட்டது.

?1918 – மூன்றாம் போரிசு பல்கேரியாவின் மன்னனாக முடிசூடினான்.

?1929 – செர்பிய, குரோவாசிய, சுலோவீனிய இராச்சியம் இணைக்கப்பட்டு அதற்கு யுகோசுலாவியா எனப் பெயரிடப்பட்டது.

?1932 – ஈராக், பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

?1935 – இத்தாலி எதியோப்பியாவினுள் ஊடுருவியது.

?1942 – செருமனியில் இருந்து ஏ4-ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது. இது 85 கிமீ உயரத்துக்கு சென்றது.

?1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியப் படைகள் கிரேக்கத்தில் லிஞ்சியாதெசு கிராமத்தில் 92 பொதுமக்களைக் கொன்றனர்.

?1952 – ஐக்கிய இராச்சியம் வெற்றிகரமாக அணுவாயுதச் சோதனையை நடத்தியது.

?1962 – சிக்மா 7 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. வொல்லி சீரா ஒன்பது மணி நேரத்தில் ஆறு தடவைகள் பூமியைச் சுற்றினார்.

?1963 – ஒண்டுராசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அங்கு இராணுவ ஆட்சி ஆரம்பமானது.

?1981 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகளின் ஏழு மாத உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது. 10 பேர் இறந்தனர்.

?1985 – அட்லாண்டிஸ் விண்ணோடம் தனது முதலாவது விண்வெளிப் பயணத்தை ஆரம்பித்தது.

?1989 – பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டு, புரட்சியில் ஈடுபட்ட 11 பேர் தூக்கிலிடப்பட்டனர்.

?1990 – செருமானிய மீளிணைவு: செருமானிய சனநாயகக் குடியரசு முடிவுக்கு வந்தது. கிழக்கும் மேற்கும் செருமனி என்ற பெயரில் இணைந்தன.

?1993 – சோமாலியாவின் இராணுவத் தலைவர் முகம்மது பரா ஐடிடு என்பவனின் தலைமையிலான ஆயுதக் குழுவினரைப் பிடிக்க எடுத்த முயற்சியில் 18 அமெரிக்கப் போர்வீரர்களும் 1,000 சோமாலிகளும் கொல்லப்பட்டனர்.

?2001 – வங்காளதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் காலிதா சியாவின் வங்காளதேசக் தேசியக் கட்சி வெற்றி பெற்றது.

?2010 – 2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் தில்லி நகரில் ஆரம்பமாயின.

?2013 – இத்தாலியின் லம்பெதூசா தீவில் ஆப்பிரிக்கக் குடியேறிகளை ஏற்றி வந்த படகு மூழ்கியதில் 134 பேர் உயிரிழந்தனர்.

?2015 – ஆப்கானித்தானில் குண்டூசு மருத்துவமனை மீது வான் தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர்.

*?பிறப்புகள்*

?1846 – பிளத்தோன் போரெத்சுகி, உருசிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1907)

?1849 – திமித்ரி துபியாகோ, உருசிய வானியலாளர் (இ. 1818)

?1854 – எர்மேன் சுத்ரூவ, உருசிய வானியலாளர் (இ. 1920)

?1917 – பீட்டர் கெனமன், இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (இ. 1997)

?1919 – ஜேம்ஸ் எம். புக்கானன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 2013)

?1930 – மார்வின் டி. கிரார்டோ, அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2015)

?1940 – முரு. சொ. நாச்சியப்பன், மலேசிய எழுத்தாளர்

?1945 – சேடபட்டி இரா. முத்தையா, தமிழக அரசியல்வாதி

?1954 – சத்யராஜ், தமிழ்த் திரைப்பட நடிகர்

?1957 – இராபர்ட்டோ செவெதோ, உலக வணிக அமைப்பின் 6வது தலைவர்

?1985 – அரோள் கரோலி, இந்திய இசையமைப்பாளர்

?1984 – அசிதா ( நடிகை ), கன்னட நடிகை

?1988 – அலிசியா விகண்டேர், சுவீடிய நடிகை

*?இறப்புகள்*

?1226 – அசிசியின் பிரான்சிசு, இத்தாலியப் புனிதர் (பி. 1181)

?1867 – எலியாஸ் ஓவே, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த அமெரிக்கர் (பி. 1819)

?1896 – வில்லியம் மோரிஸ், ஆங்கிலேயக் கவிஞர் (பி. 1834)

?1923 – கடம்பினி கங்கூலி, இந்திய மருத்துவர் (பி. 1861)

?1932 – மேக்சு வுல்ஃப், செருமானிய வானியலாளர் (பி. 1863)

?1954 – வேரா பெதரோவ்னா கசே, உருசிய வானியலாளர் (பி. 1899)

?1962 – கந்தையா கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1892)

?1966 – ரோல்ப் மாக்சிமில்லன் சீவெர்ட், சுவீடிய இயற்பியலாளர் (பி. 1896)

?1995 – ம. பொ. சிவஞானம், தமிழக எழுத்தாளர், அரசியல்வாதி (பி. 1906)

?1999 – மாரி. அறவாழி, தமிழக எழுத்தாளர் (பி. 1935)

?1999 – அக்கியோ மொறிட்டா, சப்பானியத் தொழிலதிபர் (பி. 1921)

?2009 – எஸ். இராமச்சந்திரன், இலங்கையின் மலையக ஓவியர் (பி. 1942)

?2011 – ஆ. கந்தையா, ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1928)

?2015 – ஏ. ஆர். எம். அப்துல் காதர், இலங்கை அரசியல்வாதி (பி. 1936)

*?சிறப்பு தினம்*

?மீளிணைவு தினம் (செருமனி)

?விடுதலை தினம் (ஈராக், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1932)

➖➖➖➖➖➖➖➖➖➖

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES