Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 61)

செய்திகள்

All News

தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன : அமைச்சர் ராமச்சந்திரன் தகவல்

சென்னை : தமிழ்நாட்டில் பருவமழையை ஒட்டி 4967 சிறப்பு நிவாரண முகாம்களும் கடலோர மாவட்டங்களில் 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும் 19 செமீ மழை பெய்துள்ளது என்றும் நாகை. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளது என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் அளித்துள்ளார்.

”பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை அளித்தது காங்கிரஸ்”: ப.சிதம்பரம்

புதுடெல்லி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கியது காங்கிரஸ் கட்சியே என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.

சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ப. சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு எப்பொழுது அமலுக்கு வந்தது என்ற உண்மைகளைத் தெரிந்து கொள்வோம். 1951ஆம் ஆண்டு சமூக, பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கு ஏதுவாக அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. அதை நிறைவேற்றியது காங்கிரஸ் அரசு.

1992-1993 ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. அதைச் செய்தது காங்கிரஸ் அரசு. 2006ம் ஆண்டில் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது. அதைச் செய்தது காங்கிரஸ் அரசு” என்று தெரிவித்துள்ளார்.

அதிரடியாக பறந்த உத்தரவு.. அரசு மருத்துவமனை கேண்டீன்களில் ‘ரெய்டு’.. உணவு பாதுகாப்புத்துறை ஆணை!

சென்னை: அரசு மருத்துவமனைகளில் உள்ள கேண்டீன்களை ஆய்வு செய்ய மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தனியார் உணவக கேண்டீனில் எலி உலாவிய வீடியோ இணையத்தில் பரவிய நிலையில் அதிரடி உத்தரவு பறந்துள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேண்டீனில் உணவு பொருட்களின் மீது எலி ஓடித் திரிவது போன்ற வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் செயல்படும் கேண்டீனில் செய்யப்படும் வடை, பஜ்ஜி உள்ளிட்ட பலகாரங்களை எலி உண்ணும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தன.

தலைநகரில் உள்ள முக்கியமான மருத்துமனையில் அதுவும், தனியார் மருத்துவமனைகளில் இல்லாத சிகிச்சைகள் கூட அளிக்கப்படும் சிறந்த அரசு மருத்துவமனைகளில் ஒன்றான ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள கேண்டீனில், எலிகள் பலகாரங்களை சாப்பிடும் அளவுக்கா பராமரிப்பது என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

நோயாளிகள் வரும் இடமான மருத்துவமனையில், எலிகள் உண்ட திண்பண்டங்களை விற்றால் அது மேலும் அவர்களுக்கு புதுப்புது ஆபத்தான நோய்களை உருவாக்கிவிடும் என்றும், எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனை கேண்டின்களையும் சுகாதாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டின் தின்பண்டங்களில் எலி.. டீன் போட்ட அதிரடி உத்தரவு

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட கேண்டீனை மூட ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த தனியார் கேண்டீன் மூடி சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகளில் இயங்கி வரும் கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் டெண்டர் விடப்பட்டுள்ள கேண்டீன்களை உடனே ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் சமையற்கூடம், விற்பனையகத்தில் ஆய்வு செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளன. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை குறித்து மாவட்ட ஆட்சியர் இன்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், உணவு பாதுகாப்பு துறை சார்பில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, கேண்டீன்கள் தொடர்ந்து முறையாக சுத்தம் செய்யப்பட வேண்டும், கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. உணவகங்களுக்கு அருகே உள்ள துளைகள், சாக்கடைகள் கால்வாய்கள் ஆகியவற்றை முழுமையாக மூடி, பூச்சிகள், உயிரினங்கள் உள்ளே வராமல் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் காலாவதி காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், உணவுப் பொருட்களை கையாள்பவர்கள் கையுறை, தலையுறை அணிந்திருப்பது அவசியம், உணவுப் பொருட்களை பூச்சிகள் நெருங்காத இடங்களில் சேமித்து வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை கல்லூரி முதல்வர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி தினத்தில் தலைநகர் டெல்லியில் அதிகளவு காற்று மாசடைந்து உள்ளது என இன்றைய காற்று மாசு அளவீடுகள் வெளியீடு

டெல்லி: தீபாவளி தினத்தில் தலைநகர் டெல்லியில் அதிகளவு காற்று மாசடைந்து உள்ளது என இன்றைய காற்று மாசு அளவீடுகள் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால், வாகன கட்டுப்பாடு, பள்ளிகளுக்கு விடுமுறை, கட்டுமான பணிகளுக்கு தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி மாநில அரசு விதித்தது.

மேலும், காற்றின் தரத்தை சற்று மேம்படுத்த ஐஐடி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்களுடன் உதவியுடன் செயற்கை மழை பொழிவை உருவாக்கவும் மாநில அரசு முடிவு செய்து இருந்தது. இதற்கிடையில், டெல்லியில் இயற்கை மழை பொழிந்து ‘மிகமோசமான’ எனும் காற்றின் தரம் ‘மோசமான’ எனும் தரத்திற்கு வந்தது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவின் படி, நச்சு நிறைந்த மூடுபனி டெல்லியை சூழ்ந்து மற்றும் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் தரம் மோசமான அளவீட்டை பெற்றது.

இன்று காலை 6 மணி நிலவரத்தின் படி, டெல்லி பவானாவில் 434ஆகவும், துவாரகா பகுதியில் 404ஆகவும், ITO பகுதியில் 430ஆகவும், முண்ட்காவில் 418ஆகவும், நரேலாவில் 418ஆகவும், ஓக்லாவில் 402ஆகவும், ரோகினி மற்றும் ஆர்கே புரம் இரண்டிலும் 417ஆகவும் இருக்கிறது. இந்த அளவீட்டின்படி தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் ‘மோசமான’ எனும் பிரிவில் இருந்ததை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு காட்டுகிறது.

டெல்லியில் தீபாவளி அன்று மாசு ஏற்படுத்தும் விதமாக பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் வேறு மாசு ஏற்படுத்தும் வகையில் தீபம் ஏற்றத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொதுமக்கள் அதனை மீறி செயல்பட்டதால் இதுபோன்று காற்றின் தரம் மோசமாக இருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன. காற்றின் தரம் 0 முதல் 50க்கும் இடைப்பட்ட அளவீடு நல்லது, 51 மற்றும் 100 திருப்திகரமானது, 101 மற்றும் 200 மிதமானது, 201 மற்றும் 300 ஏழைகள், 301 மற்றும் 400 மிக மோசமானது, 401 மற்றும் 450 கடுமையானது.

நேரு பிறந்தநாள் -டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி மரியாதை.

டெல்லி: நேரு பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1889 ஆம் ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் பிறந்தார் ஜவஹர்லால் நேரு. நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்களித்த அவர் இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றார்.

அவர் 1964 ஆம் ஆண்டு மே 27 அன்று காலமானார். நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்காக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

ரோஜாவின் ராஜவான முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் உள்பட பல மூத்த தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மாநிலங்களிலும் காங்கிரசார் நேருவின் போட்டோவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள கார்கே, ‘இந்தியாவை பூஜ்ஜியத்தில் இருந்து உச்சத்திற்கு கொண்டு சென்று நவீன இந்தியாவை உருவாக்கிய பண்டித ஜவஹர்லால் நேருவுக்கு அவரது பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். ஜனநாயகத்தின் மிகச்சிறந்த பாதுகாவலராக திகழ்ந்தவர். அவரது முற்போக்கு சிந்தனைகள் இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது. அனைத்து சவால்களுக்கு மத்தியிலும், நாட்டு மக்களை எந்தப் பாகுபாடும் இல்லாமல், எப்போதும் ஒன்றாக வாழ ஊக்குவித்தவர் ஜவஹர்லால் நேரு.’ என்று தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் கால்வாய், மேலூர் கால்வாயில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட கோரி செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மற்றும் எம்.பி.ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் மதுரை அண்ணாநகர் ரமேஷ் ஏஜென்ஸி இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி

மதுரை வண்டியூர் ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் மற்றும் அண்ணாநகர் ரமேஷ் ஏஜென்ஸி இணைந்து நடத்திய கட்டிட கலைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவிற்கு வருகை தந்தவர்களை ஏஜென்ஸி உரிமையாளர் ரமேஷ் வரவேற்று பேசினார்.

இதில் தெற்கு மண்டல அதிகாரி வெங்கடேசன், மதுரை மண்டல அதிகாரி மதுசூதனன், தெற்கு விற்பனை அதிகாரி முத்துப்பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு சங்கர் சிமெண்ட்டின் சிறப்புகள் குறித்து கட்டிட கலைஞர்களுக்கு விளக்கி கூறினர்.

மேலும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கட்டிட கலைஞர்களுக்கும் நினைவு பரிசை ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் வழங்கினார்.

அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கு திமுக நிர்வாகிகள் ஜான்,கவியரசு, மகாலிங்கம் ஆகியோர் தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்

தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரையில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்களுக்கு சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் எஸ்.எம்.ஜான், தொழிலாளர் அணி வடக்கு மாவட்ட அமைப்பாளர் கா.கவியரசு, துணை அமைப்பாளர் தொழிலதிபர் வி.மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை கூறினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார்.!

ஏழை எளியோர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை முத்துராமன் ஜி வழங்கினார்

மதுரை, நவம்பர்.12-

மதுரை பெத்தானியாபுரத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக ஏழை எளிய முதியோர்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேட்டிகள், சேலைகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழக தலைவரும், அகில இந்திய சிலம்பாட்ட கழக முன்னாள் பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவிற்கு வருகை தந்தவர்களை மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ்.பரமன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் பொருளாளர் திருஞானசம்பந்தம் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தென்மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பிறந்த நாள் விழா.!

தென்மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்க தலைவர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆளுயர மாலை அணிவித்தும், சால்வை வழங்கியும் ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இவ்விழாவில்
சங்க பொதுச்செயலாளர் மாஸ்.மணி நிர்வாகிகள் டாக்டர் சின்னச்சாமி, விஜயராஜா, இன்சூரன்ஸ் ராஜா பாம்சி.கண்ணன், மன்னாதி மன்னன், முருகேசன், கவிஞர்.மணிகண்டன்,வீரமணி பிரபு, ரமேஷ்காந்தி, ஆனந்தமேரி, ராஜேந்திரன், இளமி.நாச்சியம்மாள், மலர்விழி, திவ்யபாரதி, முத்துமணி, சுமதி, சிவா, திருமாறன், பெயிண்டர் மணி, அழகுசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES