Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 80)

செய்திகள்

All News

குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை முன்னிட்டு மதுரையில் பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!

குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதை முன்னிட்டு, மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் ஜெயவேல் ,மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்நிகழ்வில் பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி, ஓபிசி அணி மாநில பொருளாளர் மோகன்குமார்,மாவட்ட பொதுச் செயலாளர் பாலமுருகன், மீனவர் அணி மாவட்ட தலைவர் இளங்கோ மணி , மாவட்ட துணைத்தலைவர் குமார், 41 வது வார்டு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை மேற்கு மாவட்ட பாஜக விவசாய அணி சார்பாக நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள நதியில் மஹா தீப ஆராதனை விழா.!

பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பாக கார்த்திகை திருநாளை முன்னிட்டு, நீர் பெருக, நிலம் செழிக்க, தமிழகம் சிறக்க தமிழகத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளில் மஹா தீப ஆராதனை திருவிழா நடைபெற்றது.

அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன், மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, பாஜக பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மாநில மீனவர் பிரிவு சண்முகநாதன், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார் ஆகியோர் ஆலோசனைப்படி, விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையில் மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள புதுக்குளம் 1பிட் செல்லும் ரோட்டில் உள்ள நதியில் கார்த்திகை திருநாளை முன்னிட்டு தீப ஆராதனை விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி, பொதுச் செயலாளர்கள் தர்மர், ரத்தினசாமி, துணைத் தலைவர் மகாலிங்கம், செயலாளர்கள் பெருமாள், ரமேஷ்கண்ணன், மண்டல் பொதுச் செயலாளர் ஜெகதீஸ்வரி, இளைஞரணி மேற்கு மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மண்டல் தலைவர் இளையராஜா மற்றும் குபேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை தெற்கு, வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மதுரை தெற்கு வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்! – 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதனடிப்படையில் மதுரை தெற்கு வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் வரவேற்புரை ஆற்றினார்.
வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட தொகுதி முன்னணி அமைப்பினுடைய நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர்
நிஜாம் முகைதீன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.கனியமுதன்,
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் செ.வெற்றி குமரன்,
மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன்,
அ.தி.ம.மு.க தலைவர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இறுதியாக மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது நன்றியுரை ஆற்றினார்
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை செல்லூரில் சங்கேஸ்வரா அறக்கட்டளையின் சார்பாக பிரதோஷத்தை முன்னிட்டு சங்காபிஷேக பூஜை.!

மதுரையில் சங்கேஸ்வரா அறக்கட்டளையின் சார்பாக செல்லூர் பகுதியில் உள்ள சிவன்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு யாகபூஜை, சங்காபிஷேக பூஜை மற்றும் சுவாமிக்கு விபூதி அபிஷேகம், இளநீர் அபிஷேகம் போன்ற பல்வேறு அபிஷேகம் நடைபெற்றது.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து அறக்கட்டளையின் செயலாளர் ராதாகிருஷ்ணன் நம்மிடம் கூறுகையில் :-

மதுரையில் சங்கேஸ்வர அறக்கட்டளையின் மூலம் அனைத்து பிரதோஷ நாட்களிலும் அன்னதானம் மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள், கல்வி உதவித்தொகை, அரிசி,மளிகை பொருட்கள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.

இந்த உதவிகள் அனைத்தும் யாரிடமும் எந்த நன்கொடையும் வாங்காமல் எங்களின் சொந்த பணத்தை கொண்டு அறக்கட்டளை மூலம் இந்த உதவிகளை வழங்கி வருகிறோம்.

கொரோனா ஊரடங்கின் போது பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய நாங்கள் இந்த உதவிகளை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகிறோம்.

இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைவர் சீனிவாசன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் வீரபாண்டி, டிரஸ்டி ரவிசங்கர், துணைச் செயலாளர் பாண்டியன் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யது பாபு,துரை அரசன், ராஜா ஹசன், மாமன்ற உறுப்பினர்கள் தல்லாகுளம் முருகன், ஜெயந்திபுரம் முருகன் மற்றும் ராஜபிரதாபன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சைமன்பால் தேசிங், ரவி, விக்னேஷ், மகிளா காங்கிரஸ் தலைவி ஜானவாஸ் பேகம் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் வீ கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யது பாபு,துரை அரசன், ராஜா ஹசன், மாமன்ற உறுப்பினர்கள் தல்லாகுளம் முருகன், ஜெயந்திபுரம் முருகன் மற்றும் ராஜபிரதாபன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சைமன் பல் தேசிங் ரவி விக்னேஷ், மகிளா காங்கிரஸ் தலைவி ஜானவாஸ் பேகம் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!

சட்ட மாமேதை அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
சிபிஐ மதுரை மாநகர் மாவட்டசெயலாளர் எம்.எஸ்.முருகன், துணைச் செயலாளர் தாமஸ், பொருளாளர் இருளாண்டி, இஸ்கேப் ஜெயராமன், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜலெட்சுமி, மத்திய கிழக்கு பகுதி குழு செயலாளர் ரவிச்சந்திரன், ஏ.ஐ.டி.யு.சி துணைச் செயலாளர் இரா.முருகன், பஞ்சு ஆலை சங்கம் பாலகிருஷ்ணன், மணி, சித்திக், சித்தநாதன், வீரமாகாளி, முத்துராமலிங்கம், ஜெய்லானி, ராஜசேகர், வடக்கு பகுதி ரத்தினவேல், மணிமேகலை, சுகந்தி, ஏ.ஐ.ஒய்.எப் மாநகர் மாவட்டச் செயலாளர் பழனி முருகன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வைகை நதி மக்கள் இயக்கம் சார்பாக மதுரை வைகை ஆற்றில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து ஆய்வு.!

வைகை ஆற்றில் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் ஆற்றில் கொட்டும் கழிவுகள் குறித்து ஆய்வு நாள்.4.12.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இடம்: குருவிக்காரன் சாலை வைகை ஆற்றில் வைகை ஆற்றில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகள் குறித்து நேரடி ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் அருகில் இருக்கும் டாஸ்மாக் பிளாஸ்டிக் கிளாஸ் மற்றும் உடைத்து போடப்பட்ட கண்ணாடி பாட்டில்கள் ,நெகிழி குப்பைகள், இருசக்கர வாகன உடைந்த பிஸாஸ்டிக்கள்,தெர்மாக்கூள் , மருந்து குப்பிகள், பயண்படுத்தப்பட்ட ஊசிகள்,சிரஞ்சுகள்,பிஞ்ச செருப்புகள், பழைய தலையனைகள், மெத்தைகள், பழைய துணிகள், பழைய தகரங்கள், உடைந்த போன பொம்மைகள், பழைய சாமி புகைப்படங்கள் கண்ணாடியுடன்,அதிக அளவில் ஆனா மாத்திரைகள் உட்பட நிறுவனங்கள், டாஸ்மாக் பார் குப்பைகள், பொதுமக்கள் வீட்டு குப்பைகள் சுவரின் மேல் இருந்து வைகை ஆற்றில் கொட்டப்பட்டு இருந்தன.

ஆற்றில் சுவர்கள் எழுப்ப பட்டு இருந்ததால் மக்கள் கொட்டிய குப்பைகள் அப்படியே நிறம்பி கிடைக்கிறது. மதுரை மாநகராட்சி பராமரிப்பில் இருக்கும் மதுரை நகரில் எல்லா இடங்களிலும் குப்பைகள் உள்ளன.மாநகராட்சி பணியாளர்கள் ஆற்றில் உள்ளே இறங்கி தூய்மை பணி மேற்கொள்வது இல்லை. தற்போது தண்ணீர் செல்வதால் குப்பைகள் கொஞ்சம் அடித்து செல்கிறது. மற்றபடி நெகிழி பைகள் ஆற்றில் நிறைந்த கிடக்கிறது. இப்படியே அகற்றாமல் விட்டால் நெகிழி மலைபோல குவிந்து கிடக்கும். மதுரை மண் வளம் பெரிதளவில் பாதிக்கும். ஏற்கனவே கரையில் சுவர்கள் எழுப்ப தோண்டிய போது தோண்ட தோண்ட பாலீத்தின் பைகள் மக்காமல் இருந்தன மேலும் மேலும் குப்பைகள் கொட்ட ஆற்றில் அதிகம் பாலீத்தீன் பைகளே நிறைந்த இருக்கும்.

இந்த ஆய்வில் மதுரை நகரில் ஆற்றின் கரையில் வாழும் மக்கள் வைகை ஆற்றை மிகப்பெரிய குப்பை தொட்டியாக பயண்படுத்தி வருகின்றனர் என்பது தெரிகிறது. ஆற்றை மாசுப்படுத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையாளர் அவர்களை வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஆய்வில் கல்லூரி மாணவர்கள் வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் வைகை ராஜன், மணிகண்டன், ஆறுமுகம், இராஜசேகரன், அருன் , ஆகாஷ் உட்பட கலந்து கொண்டனர்.

கொரோனா ஊரடங்கின் போது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது.!

கொரோனா ஊரடங்கு காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சித்த மருத்துவருக்கு சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

கொரோனா தொற்று காலத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி நூற்றுக்கணக்கான நோயாளிகளை சித்த மருத்துவ ரீதியாகவும் உள ரீதியாகவும் குணமாக்கி மருத்துவம் என்பது இறையியலின் ஒரு பகுதி தான் என்பதை உணர்த்தும் வகையில் சேவையாற்றியதை பாராட்டும் வகையில் சிவகங்கை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றி வரும் சித்த மருத்துவரான காந்திநாதன் அவர்களுக்கு சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பாக சோழன் மறுபிறவி தந்த மருத்துவச் செம்மல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருதை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், தென்மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர், மதுரை மாவட்டத் தலைவர் சண்முகவேல், ஆயுஷ்யம் வர்ம சிகிச்சை மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஆர்த்தி மற்றும் மருத்துவர் பாலாஜி ஆகியோர் வழங்கிப் பாராட்டினார்கள்.

மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்.!

மதுரையில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை எஸ்.எஸ் காலனியில் அல்-நூர் பார்வையற்றோர் மதரஸா 5-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாவை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கௌரவ ஆலோசகர் முஸ்தபா, நிர்வாக பொருளாளர் சீனிரபீக் ராஜா, செயலாளர் நிஜாமுதீன், இணைச் செயலாளர் ராஜா (எ)நிஜாம் அன்சாரி, பொருளாளர் ஃபெரோஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES