மதுரை மாநகராட்சி 20-வது வார்டு விளாங்குடியில் பாஜக மாநகர் மாவட்ட செயலாளர் வேங்கைமாறன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் தூய்மை பணி மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தூய்மை பணி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயவேல், பழனிவேல், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மருத்துவர் பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் முரளிபாஸ்கர், மக்கள் பணி மேற்கு தொகுதி பொறுப்பாளர் முனைவர் பிச்சைவேல், பரவை மண்டல் பார்வையாளர் ரமேஷ்கண்ணன், மீனவர் பிரிவு மாவட்டத் தலைவர் இளங்கோமணி, வர்த்தகர் பிரிவு மாவட்ட தலைவர் வடமலையான், மாநில செயற்குழு உறுப்பினர் பாரி ஜெயவேல், வார்டு தலைவர்கள் சேது, திருப்பதி, முருகேசபாண்டி, செல்வி கிருஷ்ணன் உள்பட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விளாங்குடி சபாராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்ரமணியம் தலைமையிலான மருத்துவர்கள் டாக்டர் கலையரசன், டாக்டர் கணேஷ்பாபு, மற்றும் விக்னேஷ், வேணுகோபால், கார்த்திக் மற்றும் செவிலியர்கள் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த மருத்துவ முகாமில் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரையைச் சேர்ந்த எம்.ஜி.பாலு தனது பிறந்த நாளை முன்னிட்டு மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு அன்னதானத்தை வழங்கினார்.
மதுரை மாவட்டம் கோவில் பாப்பாக்குடியைச் சேர்ந்த சேர்ந்த காவிரி கூட்டு குடிநீர் பராமரிப்பாளர் எம்.ஜி பாலு அவர்கள் தனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்று ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள், பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள், ஆதரவற்றோர் இல்லத்திற்கு நேரில் சென்று அன்னதானம் வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்தவகையில் இன்று செவ்வாய்க்கிழமை தனது 57-வது பிறந்த நாளை முன்னிட்டு அருள்தாஸ்புரம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மையத்திற்கு நேரில் சென்ற அவர் அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்வில் பாலமுருகன், துரைப்பாண்டி, முருகேசன், சரவணன், பூங்குன்றன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு!உடன் நடவடிக்கைகள் எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முறையாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும் என்பதே அரசின் முதன்மையான குறிக்கோள் ஆகும். ஆனால்மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏற்கனவே வழங்கப்படும் குறிப்பிட்ட அளவு கோதுமை வழங்கப்படுவதில்லை, மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியமான உணவுப் பொருட்கள் இலவசமாகவும் குறைந்த விலைக்கும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாகஒரு வேளைகூட உணவு இல்லாமல் இருப்போரே இல்லை என்னும் நிலையை உருவாக்கவே அரசு முயற்சிகள் செய்து வெற்றியும் பெற்றுள்ளது என்று கூறலாம்.அதனடிப்படையில் ரேஷன் பொருட்களைக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏழை,எளிய நடுத்தர குடும்ப மக்கள் தங்கள் உணவு தேவையை நிறைவேற்றி வருகிறார்கள்.
ரேஷன் கடைகளில் இருந்த குறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தனிக்கவனம் செலுத்தி சரிசெய்து தற்பொழுது தரமான அரிசி, பருப்பு. எண்ணெய் வகைகள் வழங்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்ற நிலையில், கோதுமை மட்டும் அனைத்து குடும்பஅட்டை தாரா்களுக்கும் தடையின்றி முறையாக கிடைப்பதில்லை என்னும் குற்றச்சாட்டு மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள 350-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் இருந்து வருகிறது.
இத்தகைய சூழல் கடந்த மூன்று மாதங்களாக நீடித்து இருப்பதாகவும் உடனடியாக ரேஷனில் கோதுமையையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோருகின்றனர். மேலும் மாநிலம் முழுவதும் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு காரணம் என்ன என்று கேட்டால் மத்திய அரசு வழங்க வேண்டிய கோதுமையின் அளவினை தமிழ்நாடு உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு வழக்கமாக வழங்குவதை விட பல மடங்கு குறைவாக அனுப்புவதாக அரசின் வழங்கல் அலுவலர்கள் தெரிவிக்கின்றார்கள். கோதுமை அளவை குறைக்காமல் தமிழ்நாட்டுக்கு பெற்று தருகின்ற பொறுப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கவர்னர் ஆர்.என். ரவி போன்றோர் ஏற்க வேண்டும்.
தமிழகத்தின் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்கள் என்பது இதன்மூலம் நிரூபிக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட கோதுமையை வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும் என்றும், அரிசியோடு நார்சத்து அதிகமுள்ள கோதுமையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் கனிசமாக அதிகரித்து வருவதாலேயே அனைத்து ரேஷன் கடைகளிலும் கோதுமை தேவையும் ஏற்பட்டுள்ளது என்றும், ஆகவே இச்சூழலை உணர்ந்து மக்களின் நலன்கருதி கோதுமை தட்டுப்பாட்டை நீக்கி வழங்கிட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் தேசிய மனித உரிமை சமூகநீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் அமைப்பின் சார்பாக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார கடிதம் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்வின் போது
மதுரை மாநகர் மாவட்ட செயலாளராக டி முருகேச பாண்டி அவர்களை நியமனம் செய்யப்பட்டு மாவட்ட தலைவர் முனைவர் ஆர். பிச்சைவேல் முன்னிலையில் அதற்கான அடையாள அட்டை அங்கீகாரச் சான்று மாநில நிர்வாகிகள் வழங்கினார்கள்
National Human Rights Social Justice Counsil of India – Jammu & Kashmir, (All India – New Delhi)
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, ஜம்மு காஷ்மீர் பிரஸ் கிளப் உள்ளரங்கில் NHR-SJC OF INDIA – விழா நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர், மாநில அமைச்சர், மத்திய மாநில அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
விழாவில், NHRSJC சார்பாக, 2022 ம் ஆண்டிற்கான மிக சிறந்த மனிதநேய விருது, (Excellent Humanity Award) இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மத்திய, மாநில அமைச்சர் உள்பட 12- பேர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது..
அதில், தேசிய மனித உரிமைகள் – சமூகநீதி கவுன்சில் ஆஃப் இந்தியா – தமிழக பிரிவின் மாநில தலைவர், டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களின் பல்வேறு சமூக சேவையை பாராட்டி Excellent Humanity ) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விருதை பெற்றுக் கொண்ட டாக்டர் நம்புதாளை பாரிஸ் அவர்களுக்கு மதுரை மாவட்ட தலைவர் பிச்சைவேல் மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மதுரையில் “தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு சார்பாக புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் விழா ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது புதிதாக நியமனம் செய்யப்பட்ட மதுரை வடக்கு மாவட்ட தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் தலைவராக வி.பி.ஆர் செல்வகுமார் அவர்களுக்கு, தேசிய தலைமையில் இருந்து வழங்கப்பட்ட நியமனம் செய்வதற்கான அங்கீகார கடிதம் மற்றும் அடையாள அட்டையை மாவட்ட தலைவர் பிச்சைவேல் முன்னிலையில் மாநில நிர்வாகிகள் வழங்கினர்.
மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு சமூக சேவைகள் செய்தோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, தேசிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரையில் திருக்கார்த்திகையை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கும், சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் நிறுவனத்திற்கு குவியும் பாராட்டுக்கள் மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோய்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தினமும் உணவு வழங்கி வருகிறார். தினமும் பசியால் வாடி நிற்கும் சாலையோர வாசிகளை கண்ட இவர் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த நிலையிலும் தினமும் உணவு வழங்கின்றார். இன்றுடன் 580 நாள் நிறைவடைந்த இந்நாளில் கார்த்திகை தீப திருவிழா என்பதால்பூங்கா முருகன் கோவில் வந்த பக்தர்களுக்கும், சாலையோ வாசிகளுக்கும், மதுரை ராஜாஜி மருத்துவமனை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல பிரிவின் அருகே நோயாளிகளின் உறவினர்களுக்கும் உணவினை வழங்கினார்.
அட்சய பாத்திர டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு கூறும்போது உலகத்தில் மனதிற்கு இன்பம் அளிப்பது கொடுப்பதில் தான் இருக்கிறது. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார். அந்த வகையில் மதுரையின் அட்சய பாத்திரம் மூலம் வறியவர்களுக்கும், மனநலம் பாதித்தவர்களுக்கும் சாலையோர வாசிகளுக்கும் தொடர்ச்சியாக 580 நாட்களுக்கும் மேலாக மதிய உணவு வழங்கிறோம் என்றும், இன்று கார்த்திகை திருவிழா என்பதால் கோவில் கொண்ட பக்தர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது என்றும், இந்த அட்சய பாத்திரம். தொடர்ந்து உணவு தானம் வழங்கிட தொழிலதிபர்கள், நிறுவனர்கள், மேலாளர்கள், அலுவலர்கள் உதவ வேண்டும் என்றார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் அறிவுறுத்தலின்படி, மதுரை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சசிக்குமார், விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி ஆகியோர் ஆலோசனைப்படி, மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி ஒன்றியத்தில் மேற்கு மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பொதுச் செயலாளர்கள் தர்மர்,சுரேஷ், ரத்தினசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். இந்நிகழ்வில் செயலாளர்கள் பெருமாள், ரமேஷ்கண்ணன், மகாலிங்கம்,Ex Army சந்திரசேகர் உள்பட நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் மண்டல் தலைவர் வேல்முருகன் நன்றி உரை கூறினார் மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மதுரையில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசெஞ்சர் மற்றும் “பெட்கிராட் அமைப்பு இணைந்து, குமாரம் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு இலவசமாக சணல் லேப்டாப் பை தயாரிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு, அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி எஸ்.எஸ்.காலனியில் உள்ள “பெட்கிராட்” அலுவலகத்தில் நிர்வாக இயக்குனர் சுப்புராம் தலைமையில் நடைபெற்றது.
செயலாளர் சாராள்ரூபி வரவேற்று பேசினார். தலைவர் சுருளி,பொதுச் செயலாளர் அங்குசாமி, பொருளாளர் கிருஷ்ணவேணி, செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட அலுவலர் கார்த்திகேயன் பேசுகையில், பயிற்சி பெற்றதோடு நிறுத்திக் கொள்ளாமல் சுயதொழில் துவங்குவதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை பெற்று தரப்படும் என கூறினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேங்க் ஆப் பரோடா வெங்கடேஷ் சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஸ்ரீ சக்ரா நிர்வாக இயக்குனர் சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியின் முடிவில் பெட்கிராட் துணைத் தலைவர் மார்ட்டின் நன்றியுரை கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் ரேவதி செய்திருந்தார்.
குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று 7-வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளதை முன்னிட்டு,மதுரை மூன்றுமாவடி நான்கு ரோடு சந்திப்பு அருகே பாஜக வண்டியூர் மண்டல் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் மண்டல் தலைவர் திருப்பதி, பொதுச்செயலாளர் சந்தோஷ் சுப்பிரமணியம், பிரச்சார பிரிவு மாநில தலைவர் பாஸ்கரன், விவசாய அணி மாநில பொறுப்பாளர் பால்ச்சாமி,ஊடக பிரிவு தலைவர் செல்வமாணிக்கம், மண்டல் பொதுச் செயலாளர் கோகிலா, மகளிரணி போதும்பொன்னு, பொன்னம்மாள் இளைஞரணி சுரேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.