Friday , November 22 2024
Breaking News
Home / தமிழகம் (page 8)

தமிழகம்

“உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி”.? இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு. பரபரப்பில் அரசியல் வட்டாரங்கள்.!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வருகிற 27ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். இதை முன்னிட்டு இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தின் போது பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்க இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் என்பது வந்து கொண்டிருக்கிறது. இதனை அமைச்சர்கள் சிலர் கூட மறைமுகமாக கூறுகிறார்கள். இதன் காரணமாக இன்று நடைபெறும் …

Read More »

வினேஷ் போகத்துக்கு அநீதி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னை:மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம், செய்து அநீதி இழைக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் விளையாட்டு துறையின் சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் விளையாட்டு துறையின் தலைவர் பெரம்பூர் நிசார் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாநில துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், …

Read More »

சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்!!

சென்னை: சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட உள்ளார். தமிழகத்தில் 5 முறை முதல்வராகவும், 13 முறை சட்டப்பேரவை மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி முதல் ஓர் ஆண்டுக்கு கொண்டாட முடிவு செய்யப்பட்டது.இதை முன்னிட்டு தமிழக அரசின் தலைமை …

Read More »

தமிழக அரசின் அசத்தலான திட்டங்கள்! மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்!!

உலகையே வாட்டி வதைத்த கொரோனா கால தடுப்பு பணிகளைப் பாராட்டி தமிழக அரசானது காவல் துறையினருக்கு ரூ.58.50 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 என்ற அடிப்படையில் 1.17 லட்சம் கொரோனா தடுப்பு பணியாற்றிய காவல் துறையினருக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாக தமழ்நாடு அரசு கூறியுள்ளது. இதையடுத்து போக்குவரத்து துறையினருக்கும் தமிழக அரசு ஒரு பொன்னான செய்தியைக் கூறியுள்ளது. லட்சக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் பயன் பெறும் விதமாக ரூ.38 கோடி …

Read More »

துணை முதல்வர் ஆகிறார் உதயநிதி. செல்வப்பெருந்தகை ஆதரவு.!!!

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விவகாரம் தற்போதைய தமிழக அரசியலில் முக்கிய விவாதங்களில் ஒன்றாக மாறிவிட்டது. மக்களவைத் தேர்தல் வெற்றியை தொடர்ந்து உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வண்ணம் உள்ளது. ஆனால் அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார் உதயநிதி. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு பிறகு துணை முதல்வர் …

Read More »

போதைப்பொருள் ஒழிப்பு: முதல்வர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி

சென்னை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து உறுதிமொழியை முதலமைச்சர் முன்னிலையில் மாணவ, மாணவிகள் எடுத்துக் கொண்டனர். போதைப் பொருட்கள் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள், அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கினார்

Read More »

தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: தமிழ்நாடு அடைந்த முன்னேற்றங்களை பட்டியலிட்டு வரலாற்றை சொன்னால் கலைஞர் பெயர் உயர்ந்து நிற்கும்; உயிரென நிற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞரின் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (07.08.2024) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு திமுகழகம் சார்பில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கலைஞர் செயலாற்றிய திட்டங்களால் பயன்பெற்ற பல்வேறு தரப்பினரும் தங்கள் நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கலைஞரின் …

Read More »

அரவை ரோட்டரி உறுப்பினர்கள் நிவாரண பொருட்களை வயநாடு கொண்டு சேர்த்த பொழுது…

பண உதவி மற்றும் களப்பணியில் இருந்தவர்கள்: செந்தில், ரவீந்திரன், சதீஷ், ஆனந்த், பாலமுருகன், ஜெயக்குமார், விஜயன், பாரி, பாலகுமார், மணிகண்டன், பிச்சைமுத்து, அருண்… #aravakurichirotary #senthil #ravindran #sathish # anand #balamurugan #jeyakumar #vijayan #paari #balakumar #manikandan #pichaimuthu #arun #balamurugankandasamy #ilangyarkural

Read More »

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாடு காங்கிரஸ் ரூ. 1 கோடி நிதியுதவி!

வயநாடு நிலச்சரிவால் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நேற்று இரவும், அதிகாலையிலும் கொட்டித்தீர்த்த வரலாறு காணாத அதி கடும் கனமழையின் காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவின் பாதிப்பால் 167 …

Read More »

கேரளாவுக்கு இன்னும் உதவி தேவைப்பட்டால் செய்யப்படும்: முதல்வர் ஸ்டாலின் பேட்டி

சென்னை: ‘வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பினராயி விஜயனிடம் நான் உறுதியளித்துள்ளேன்.’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வயநாட்டில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-ஐ கடந்துள்ளது. இந்நிலையில், சென்னை கொளத்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் வயநாடு நிலச்சரிவு குறித்து பேசினார். அப்போது, ‘வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES