Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் :மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.!!
NKBB Technologies

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் :மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் கோரிக்கை.!!

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் நக்கீரன் முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் போட்டோகிராபர் அஜித்குமார் ஆகியோர் மீது நடந்த கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும், மதுரை மாவட்ட செய்தியாளர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் கதிரவன் தலைமை வகித்தார்.

“தமிழ்நாட்டில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களைத் தாக்குபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். பத்திரிக்கையாளர் பாதுகாப்புச் சட்டம் உடனடியாக இயற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது பத்திரிகையாளர்கள் வலியுறுத்தி பேசினர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES