Tuesday , February 3 2026
Breaking News
Home / கரூர் / தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மனு…
NKBB Technologies

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் மனு…

வணக்கம் இன்று காலை தமிழ்நாடு இளைஞர் கட்சி, நமது கரூர் மாவட்டத்தின் சார்பில் கல்லுமடை பகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் கல்லுமடை பகுதி மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நமது கட்சியின் மாவட்ட செயலாளர் முனைவர் அ. அபுல் ஹசேன் அவர்களும் கரூர் நகர தலைவர் திரு சபீர் அவர்களும் வழக்கறிஞர் அணி தலைவர் திரு ஜெகதீசன் அவர்களும் சமூக ஊடக துறை தலைவர் திரு ஆன்டனி கேப்ரியல் அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் பொதுமக்கள் சார்பாக மனு அளித்துள்ளனர். பின்னர் பொது மக்களின் குறைகளை கேட்டறியும் போது கல்லுமடை காலனி 6வது வார்டு பிஸ்மி நகர் பொது மக்கள் அனைவரும் நமது கட்சிக்கு பெரும் ஆதரவு அளிப்பதாகவும் மேலும் நமது கட்சிக்கு அனைவரின் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர்திரு மாவட்ட ஆட்சியர் திரு.அன்பழகன் அவர்கள் இப்பிரச்சனைக்கு கள ஆய்வு செய்து மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். நமது மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நமது தமிழ்நாடு இளைஞர் கட்சியின் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளோம்.

– தமிழ்நாடு இளைஞர் கட்சி

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES