விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே “வெல்லும் சனநாயகம்” மாநாடு விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.
திருமாவளவனின் தேர்தல் அரசியல் “வெள்ளி விழா” திருமாவளவன் “மணிவிழா நிறைவு* இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி கால்கோள் விழா ” என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.க தலைவர் வீரமணி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டினை வி.சி.க கொடியை ஏற்றி வைத்து திருமாவளவன் தொடக்கி வைத்தார். வி.சி.க மாநாட்டிற்காக சென்னையிலிருந்து சமத்துவ சுடர், கீழ் வெண்மணியிலிருந்து சகோதர சுடர், மேலளவிலிருந்து சுதந்திர சுடர் மாநாட்டு திடலுக்கு வந்தது. அதனை திருமாவளவன் வரவேற்றார். இந்த மாநாட்டில் பாலஸ்தீன மக்களுக்கும், ஈழ தமிழர்களுக்கும் ஆதரவு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,
சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். ஜாதி வாரிய கணக்கெடுப்பை நடந்திட வேண்டும். ஒப்புகை சீட்டுகளின் அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்,ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை திரும்பப் பெற வேண்டும். ஆளுநர் பதவியை ஒழித்திட வேண்டும். ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் கைவிட வேண்டும்.மேலும், ஆணவக் கொலைகளை தடுத்திட சட்டம் இயற்றிட வேண்டும் உள்ளிட்ட 33 தீர்மானங்கள்,நிறைவேற்றப்பட்டுள்ளன.அந்த தீர்மானங்கள் அனைத்தையும் திருமாவளவன் வாசித்தார்.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்…
சட்ட கல்லூரி மாணவராக திருமாவளவன் தி.மு.க வில் இருந்த காலம் முதலே அவரை தெரியும்.எனக்கும் தோலோடு தோலாக நிற்பவர் திருமாவளவன். பெரியாரையும் அம்பேத்கரையும் யாராலும் பிரிக்க முடியாதை போல் தான் தி.மு.க வையும் வி.சி.க வையும் பிரிக்க முடியாது.நமக்குள் இருப்பது அரசியலுக்கும் , தேர்தலுக்குமான உறவல்ல இது கொள்கை உறவு.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தோம்.ஆதி திராவிடர் பழங்குடியினர் ஆணையம் புதுப்பிக்கப்பட்டது. அயோத்திதாசர் சிலை திறக்கப்பட்டது. சமூக நீதி, சமத்துவம் கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும் அமைப்பது தான் நம் நோக்கம்.வெல்லும் ஜனநாயகம் என்று கூறினால் மட்டும் போதாது நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.சர்வாதிகார பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் அதை இந்தியா கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.
இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி. இந்தியாவை கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.கூட்டாட்சியை குறிக்க நாம் பயன்படுத்தும் ஒன்றிய அரசு சொல்லை ஆங்கிலத்தில் கூறியவர் அம்பேத்கர் தான். தமிழ்நாட்டில் பா.ஜ.க என்பது பூஜ்யம் அதனால் தமிழ்நாட்டில் நாம் அவர்களை குறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால் மற்ற பகுதிகளில் அவர்களை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியை தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டணி என சுருக்கி விட முடியாது. இந்தியாவின் பன்முக தன்மை, மதச்சார்பின்மை ஆகியவற்றை காக்க தான் இந்தியா கூடணி உருவாக்கப்பட்டுள்ளது.பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி இருக்காது, நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்காது,மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக ஆகிவிடும்.ஜம்மு காஷ்மீர் போல் மற்ற எல்லா மாநிலங்களும் ஆகி விடும்.உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் ஆட்சியாக பா.ஜ.க ஆட்சி இருக்கிறது. இந்தியாவை சர்வாதிகார நாடா மாற்றி விட்டாலும் விடுவார்கள். மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் நிலை மாறுபடும் ஆனால் நடக்க உள்ளது நாடாளுமன்ற தேர்தல் அதில் பா.ஜ.க வை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணத்தில் கூட்டணி கட்சிகள் செயல்பட வேண்டும்.பகைவர்களையும் சேர்த்து துரோகிகளையும் நாம் அடையாளம் காட்டி வீழ்த்த வேண்டும்.
இந்தியா கூட்டணியால் பா.ஜ.க விற்கு பயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் பயத்தை இந்தியா கூட்டணி உணர்ந்தாக வேண்டும்.நாம் ஒற்றுமையாக இருந்தால் ஜனநாயகம் வெல்லும் அதை வரும் காலம் சொல்லும் என்றார்.