Sunday , February 1 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வி.பி.ஆர் செல்வகுமார் நீர்,மோர் வழங்கினார்.
NKBB Technologies

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வி.பி.ஆர் செல்வகுமார் நீர்,மோர் வழங்கினார்.

முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ ஆணைக்கிணங்க, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அதிமுக செயல்வீரர் வி.பி.ஆர் செல்வகுமார் நீர் மோர் வழங்கினார்

தமிழகத்தில் வரலாறு காணாத வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அதிமுக நிர்வாகிகள் மக்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.

மதுரையிலும் 100 டிகிரியையும் தாண்டி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் காலை 11 மணியிலிருந்து 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் நீர்மோர் தண்ணீர் அதிகமாக பருக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் கடுமையான கோடை வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆணைக்கிணங்க, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம் முன்பு மாநகர் அதிமுக செயல்வீரர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர் மோர் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாஸ்.மணி, பாவலர் ராமச்சந்திரன், சின்னச்சாமி, மலர்விழி, இன்சூரன்ஸ் ராஜா‌, பிரித்திவிராஜ், கார்த்திக்,செல்வம் உள்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES