5 மாதங்களுக்கு முன்னாள் அய்யலூர் பேரூராட்சி கிழக்கே கரூர் MP அக்கா ஜோதிமணி அவர்கள் மலைகிராமங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்கள். ஏழு பெண்கள் குடிநீர் தேவைக்காக அடிபம்பு மூலம் தண்ணீர் பிடித்து கொண்டு MP அவர்களிடம் பெண்களும் ஓடி வந்து மின் பவர் மோட்டார் வைத்து சின்க்டெஸ் வையுங்க ரொம்ப கஷ்டமா இருக்கு அக்கா என்றதும், பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் நிதி …
Read More »பெரியாறு பாசனக் கால்வாய்களில் தாமதமாக தண்ணீர் திறந்ததால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர்.மதுரையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு..!
பெரியாறு பாசனக் கால்வாய்களில் தாமதமாக தண்ணீர் திறந்ததால் மதுரை மாவட்டத்தில் எங்குமே விவசாயம் நடக்க வில்லை என்று மதுரையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டி பேசினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. இதில் டி.ஆர்.ஓ சக்திவேல், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன்,தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ரேவதி …
Read More »மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சமூக நலச் சங்கம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம்…
17.01.2024கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கூடலூர் கிராமம் பூசாரிபட்டியில் மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சமூக நலச் சங்கம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சங்கத்தின் தலைவர் திரு. கௌரிசங்கர், செயலாளர் திரு.சண்முகராஜ், பொருளாளர் திரு.ஜெய சரவண பாலாஜி மற்றும் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் நாடாளுமன்ற …
Read More »திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு…
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் செல்லும் வழியில் கிரசன்ட் ஆட்டோ வாகன புகை பரிசோதனை நிலையம் திறப்பு விழா 13 -1-2024 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் ஏ எச் எஸ் ஜியாவுர் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்த எல் எஸ் அப்துல் ஹை முன்னிலையில் உயர்திரு அப்துல் சமது சட்டமன்ற உறுப்பினர் மணப்பாறை அவர்கள் திறந்து வைக்க, தென்னக நுகர்வோர் மற்றும் …
Read More »அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு..!
மதுரை ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாவட்ட தலைவர் கணேஷ், செயலாளர் ரவிச்சந்திர பாண்டியன், பொருளாளர் கவிதா ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு …
Read More »“கரூர் மாவட்டத்துக்கு மோடி அரசு துரோகம் இழைத்துவிட்டது!” – குற்றம்சாட்டிய ஜோதிமணி
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில், தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி கல்வியறிவு மேம்பாடு குறித்து பயிலரங்கம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோதிமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சென்றுள்ளார். திருச்சி விமான நிலையம் யாருக்காக பிரதமர் மோடி திறந்து வைத்து சென்றுள்ளார் என்பதை பார்த்தால், விமான நிலையம் அதானிக்கு தாரைவார்த்து கொடுக்கத்தான் …
Read More »மோடியின் கனவு தமிழ்நாட்டில் நிறைவேறாது: கே.எஸ்.அழகிரி உறுதி
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி விழாவில் பிரதமர் மோடி திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றும் போது வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியிருக்கிறார். வெள்ள சேதத்தை பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு நிதி வழங்க பிரதமர் மோடியை நேரிலும், நேற்றைய கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். ஒன்றிய குழு வருகை புரிந்து அறிக்கை தாக்கல் செய்ததோடு, நிதியமைச்சர் …
Read More »காங்கிரஸில் இணைந்தார் ஒய்எஸ் ஷர்மிளா.. ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைப்பு..!
ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் நிறுவனர் ஒய்எஸ் ஷர்மிளா இன்று டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார். ஒய்எஸ் ஷர்மிளா நேற்று இரவே அரசியல் காரணங்களால் டெல்லி சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்குள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஒய்எஸ் ஷர்மிளா கட்சியில் இணைந்தார். இவருடன் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியின் தொண்டர்களும், ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சியும் காங்கிரஸில் இணைக்கப்பட்டது. முன்னதாக நேற்று இரவு …
Read More »போட்டியிடும் தொகுதிகள் எவை எவை ? காங்கிரஸ் இன்று எடுக்கும் முடிவு.. பரபரக்கும் டெல்லி வட்டாரம்.!
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பாஜகவுக்கு எதிராக உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணி தங்களின் அடுத்த கட்ட தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின் போது விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்த விவாதத்தின் போது பிராந்திய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் …
Read More »டிசம்பர் 26ல் பிறந்த நாள் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. இரா. நல்லகண்ணு…
டிசம்பர் 26ல் பிறந்த நாள் காணும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு. இரா. நல்லகண்ணு அவர்கள் இன்று போல் இன்னும் பல நூற்றாண்டுகள் வாழ்க வளமுடன் நலமுடன் என்று பஞ்சாயத்து ராஜ் சங்கதன் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ம. அண்ணாதுரை அவர்கள் சார்பாகவும் திருச்சி மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. மணிவேல் அண்ணாதுரை அவர்கள் சார்பாகவும் திருச்சி …
Read More »