மதுரை மாவட்ட வலுதூக்கும் சங்கம், தமிழ்நாடு மாநில வலுதூக்கும் சங்கம் சார்பாக காமராஜர் சாலையில் வலுதூக்கும் போட்டி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அகில இந்திய மூவேந்தர் முண்ணனி கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் வேலுச்சாமி குத்துவிளக்கேற்றி போட்டியை தொடங்கி வைத்தார். பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் நடந்த நிகழ்ச்சியின் போது பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள் விசுராஜன், குமாரவேல், நெப்போலியன், மதுரை மாவட்ட தலைவர் கவுன்சிலர் ஜெயசந்திரன், சேர்மன் தனசேகரன் செயலாளர் பிரவீன், பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் காசிவிஸ்வம், ரமேஷ் உள்பட பங்கேற்றனர்
மதுரை ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு தனி அறை ஒதுக்கீடு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களிடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் மதுரை மாவட்ட தலைவர் கணேஷ், செயலாளர் ரவிச்சந்திர பாண்டியன், பொருளாளர் கவிதா ஆகியோர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு பத்திரிகை துறையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கின்ற பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தில் ஏற்கனவே செய்தியாளர்களுக்கு அறை ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த அறை முழுவதும் தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு மட்டும் போதுமானதாக உள்ளது.
அச்சு ஊடக செய்தியாளர்களுக்கு இடவசதி குறைவால் அந்த அறையை பயன்படுத்த முடியாத நிலையில் பழைய செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அருகில் உள்ள மரத்தடியில் நின்று செய்தி சேகரித்து வருகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் செய்தியாளர்கள் இடம் தேடி அலைய வேண்டி உள்ளது. எனவே அச்சு ஊடக செய்தியாளர்கள் பயன்படுத்துகின்ற வகையில் பழைய செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அல்லது புவியியல் கனிம வளத்துறை அலுவலகத்தை ஒதுக்கீடு செய்து தரும்படி கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் சங்கீதா தனி அறை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதில் துணைச் செயலாளர்கள் சுரேஷ், முருகேசன், புஷ்பராஜ், இணைச் செயலாளர் பாண்டியன், செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திக், நாகேந்திரன், ரமேஷ் மற்றும் உறுப்பினர்கள் மாயகிருஷ்ணன், அல்லா பக்ஸ்,, ராமர், மூர்த்தி, சண்முகவேல், உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், அன்னை வசந்தா டிரஸ்ட் இணைந்து குடிசையில் வாழ் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது
மதுரை, ஜனவரி.10-
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி.நெட், அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக பொங்கல் திருநாளை முன்னிட்டு குடிசையில் வாழும் ஏழை மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா மற்றும் தொடர்ந்து 600 வது நாள் உணவு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு செயலாளர் சித்ரா ரகுபதி முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருமங்கலம் நகர் மக்கள் மன்ற தலைவர் இரா.சக்கையா, தொல்காப்பியர் மன்ற தலைவர் இருளப்பன் ஆகியோர் பொங்கல் தொகுப்புகளை வழங்கினர்.
உ.பி.மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த கேத்ர டிரஸ்ட் சார்பாக மதுரை காமராஜர் சாலை அரசமரம் பிள்ளையார் கோவிலில் இருந்து கிருஷ்ணாபுரம், கான்பாளையம், பூந்தோட்டம், காமராஜர்சாலை பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ்,ஸ்ரீராம ஜென்ம பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஆலயத்தின் புகைப்படம் மற்றும் பிரசாதத்தை பொதுமக்களுக்கு வழங்கிய நிர்வாகிகள், பொதுமக்களாகிய நீங்களும் கும்பாபிஷேகத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
இந்நிகழ்வில் பாலரெங்காபுரம் பாஜக மண்டல் தலைவர் மணிமாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர் முன்னாள் கவுன்சிலர் பாலயோகி, துணைத்தலைவர்கள் பர்பத்சிங் & தினேஷ், கிளை தலைவர்கள் கோபால், குப்புசாமி, காசி விஸ்வநாதன், பிரபாவதி,மகளிரணி அமுதா,சாந்தி,மைதிலி, மற்றும் குமார் திருநாவுக்கரசு, சரவணகுமார், விஷ்ணுவர்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை கே.புளியங்குளம் வீரதண்ட கோயிலுக்கு செல்வதற்கு பொதுமக்கள் தங்களது செலவில் பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்க கோரி அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபேல் மூர்த்தி மனு வழங்கினார்
மதுரை, ஜனவரி.09-
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அப்துல் கலாம் அறிவியல் சங்க மாநிலத் தலைவர் ஆபேல் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசுகையில்,
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள கே.புளியங்குளம் வீரதண்ட கோயில் உள்ளது. இந்த கோயிலில் 800-க்கும் மேற்பட்டோர் தங்களது குலதெய்வமாக சுவாமியை வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் மிகப்பெரிய பள்ளம் உள்ளது.
அந்தப் பள்ளம் அரசாங்க புறம்போக்கு இடத்தில் வருகிறது. இந்த கோவில் செக்கானூரணியில் உள்ள கேரன் பள்ளியை ஒட்டி உள்ளது. பக்தர்கள் நடந்து செல்லும் இந்த பாதையில் பெரிய மெகா பள்ளம் உள்ளதால் தங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்ய போக முடியவில்லை.
எனவே பொதுமக்கள் தங்கள் செலவில் சிறு பாலம் கட்ட விரும்புகிறார்கள். எனவே இந்த பாலம் கட்டிக் கொள்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.
இக்கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மாவட்ட மாநாடு ஆரப்பாளையத்தில் உள்ள சிவபாக்யா திருமண மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட தலைவர் வி.எஸ்.மாரிமறவன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் ஒத்தக்கடை திருமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மதுரை மாவட்ட செயல் தலைவர் பி.எம்.ராஜாமாறன், ஐ.டி விங் மாநில தலைவர் விஜயராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்மாநாட்டில் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி பேசியதாவது :-
இந்திய நாட்டின் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களே வருவார்கள் என கருத்து கணிப்பு சொல்கிறது. எனவே மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவராக அண்ணாமலை அவர்கள் செயல்பட்டு வருகிறார். எனவே தமிழகத்தின் முதலமைச்சராக அண்ணாமலை அவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
எனவே பாஜக சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு நம் அனைவரும் பாடுபட்டு பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாயுடு சேம்பர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரீஸ் சார்பாக மாதாந்திர கூட்டம் மற்றும் ஆங்கில புத்தாண்டு விழா மதுரை பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலைவர் ராஜகோபால் நாயுடு தலைமை வகித்தார்.
செயலாளர் ஜெகன்மோகன், பொருளாளர் பாஸ்கர்நாயுடு, துணைத் தலைவர்கள் இராஜேந்திரபிரபு, ஜெயராம், சௌந்தரராஜன், இணைச் செயலாளர் சுப்புராஜ் உள்பட உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு முன்னதாக மறைந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் படத்திற்கு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் மாலை நேர வள்ளலார் பயிற்சி பள்ளியில் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்தநாள் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு டிரஸ்ட் பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வள்ளலார் பயிற்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் பவித்ரா பாண்டி அவர்கள் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக உதவும் உள்ளங்கள் மாநில தலைவர் சிவ.ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மக்களுடன் ஓமியோபதி செய்தி தொடர்பாளர்கள் டாக்டர் ரவீனா, டாக்டர் பவானி சுந்தரி, தமிழ் ஆசிரியர் விஜயா ஆகியோர் சிறப்புரையாற்றினர். வீரபாண்டிய கட்டபொம்மனின் பெருமைகள் குறித்து தொடக்கப் பள்ளி ஆசிரியர் சித்ரா பேசினார்.
டிரஸ்ட் நிறுவனர் எஸ்.எம் ரகுபதி, ஆசிரியர் சிவஜோதிகா, டிரஸ்ட் கௌரவ ஆலோசகர் அழகர்சாமி, டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் செயலாளர் சித்ரா ரகுபதி நன்றி கூறினார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலையில், தனியார் அமைப்பு சார்பில் பெண்களுக்கான நிதி கல்வியறிவு மேம்பாடு குறித்து பயிலரங்கம் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜோதிமணி, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்து சென்றுள்ளார். திருச்சி விமான நிலையம் யாருக்காக பிரதமர் மோடி திறந்து வைத்து சென்றுள்ளார் என்பதை பார்த்தால், விமான நிலையம் அதானிக்கு தாரைவார்த்து கொடுக்கத்தான் விரிவாக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது. ஏனென்றால், கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் ஒன்றிய அரசு 25 விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவாப்பதாக முடிவெடுத்துள்ளது. இதில், கோவை, சென்னை, திருச்சி ஆகிய மூன்று விமான நிலையங்களும் தனியாருக்கு வழங்கப்படுவதற்காக பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. தனியாருக்கு வழங்கும்பட்சத்தில் பிரதமர் மோடியின் நெருங்கிய கார்ப்பரேட் நண்பரான அதானிக்கு வழங்காமல் இருப்பார் என தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி உறுதி அளிப்பாரா என்று கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் உள்ள ஏழு விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. மும்பை, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், லக்னோ, பெங்களூர் உள்ளிட்ட விமான நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்களது வரிப்பணத்தில் கட்டப்பட்ட விமான நிலையங்கள் ஆகும். குறிப்பாக, அதிக வருவாய் ஈட்டக்கூடிய அதிக பயணிகள் செல்லக்கூடிய விமான நிலையங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது.திருச்சியில் மோடி, ஸ்டாலின்
தமிழகத்தில் சாக்கடை கட்டும் ஒப்பந்த முறைக்கு கூட, முறையான ஒப்பந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வழங்கப்படுகிறது. தனியாருக்கு வழங்குவதற்காகவே விமான நிலையங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்து, புதிய வசதிகளை வழங்கி வருகிறது என காங்கிரஸ் கட்சி நேரடியாக குற்றம் சாட்டுகிறது. வளரும் இந்தியா போன்ற நாடுகள் விமான நிலையங்கள், துறைமுகங்கள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதே நேரத்தில், சாதாரண ஏழை எளிய மக்களுக்கும் வளர்ச்சி வேண்டும். தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மத்திய அரசு எவ்வித நிதி உதவியும் அளிக்கவில்லை. தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தை பேரிடராக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், ‘அறிவிக்க முடியாது’ என்று நிர்மலா சீதாராமன் ஆணவமாக தெரிவித்தார்.`தமிழகத்துக்கு வந்து செல்லும் ஒவ்வொரு முறையும் புதிய சக்தி பெற்று செல்கிறேன்’ – திருச்சியில் பிரதமர்
ஏனென்றால், சுனாமியை கூட ஒன்றிய அரசு தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என தெரிவிக்கிறார். சுனாமி வந்த பொழுது தேசிய பேரிடர் ஆணையம் என்ற ஒன்று அப்போது இல்லை. தமிழ்நாட்டு மக்களையும் தமிழக அரசின் அவமதிக்கும் போக்கை ஒன்றிய அமைச்சர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். அதே போன்று, மத்திய அரசு வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதிகளை தமிழகத்திற்கு ஒதுக்கவில்லை. சாதாரண மக்கள், ஒன்றிய அரசின் திட்டத்தில் வீடு கட்டிவிட்டு, அதற்கான முழு தொகையை, இன்னும் பெற முடியாமல், ஊராட்சி பேரூராட்சி அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளுக்காக காங்கிரஸ் ஆட்சியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கிராமங்கள் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.ஜோதிமணி
ஆனால், நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த ஓராண்டில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மூடப்பட்டது. தவிர, தனியாக செயல்பட்டு வந்த ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைத்து, அதற்கு ஒதுக்கப்படும் நிதி அளவையும் ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. தமிழகத்தில் கரூர் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இருக்கிறது. இந்தியாவில் உள்ள ஏற்றுமதி நகரங்களில் நான்காவது மிகப் பெரிய தொழில் நகரமாக கரூர் உள்ளது. அதிகப்படியான வரியை செலுத்தக்கூடிய மாவட்டமாக கரூர் மாவட்டம் இருந்தும் ஒன்றிய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கரூர் நகரத்திற்கு வழங்கவில்லை. அதிக அளவில் இந்திய நாட்டுக்கு அன்னிய செலாவணியை ஈட்டி தரும், கரூர் மாவட்டத்திற்கு மோடி தலைமையிலான ஒன்றிய அரசு துரோகம் இழைத்து விட்டது” என்றார்.
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி விழாவில் பிரதமர் மோடி திட்டங்களை துவக்கி வைத்து உரையாற்றும் போது வெள்ள பாதிப்புகளில் இருந்து மீள தமிழக மக்களுக்கு துணை நிற்போம் என்று உறுதி வழங்கியிருக்கிறார்.
வெள்ள சேதத்தை பேரிடராக அறிவித்து தமிழகத்திற்கு நிதி வழங்க பிரதமர் மோடியை நேரிலும், நேற்றைய கூட்டத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். ஒன்றிய குழு வருகை புரிந்து அறிக்கை தாக்கல் செய்ததோடு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் தென்மாவட்ட வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்து இதுவரை தமிழகத்திற்கு நிவாரண நிதியாக எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பிரதமரின் பேச்சை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை. பிரதமர் மோடி சாதுர்யமான மேடை பேச்சின் மூலம் மக்களின் துன்பங்களையும், துயரங்களையும் திசைதிருப்பி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று பகல் கனவு காண்கிறார். அவரது கனவு தமிழகத்தில் நிறைவேறாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.