மதுரை விளாங்குடியில் உள்ள ராயல் வித்யாலயா பள்ளியில் 37 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர் ஜெயராம், இந்தியன் கிரிக்கெட் வீரர் விஜயசங்கர் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் பள்ளியின் சேர்மன் ராஜாராம், தாளாளர் ஷகீலாதேவி ராஜாராம், இயக்குனர்கள் தீபிகா பிரேம்குமார், கெவின் குமார், மஹிமா விக்னேஷ் மற்றும் 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதி சித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
மதுரை விரகனூரில் உள்ள சி.ஆர்.திருமண மஹாலில் எஸ்.என்.பி.டெய்ரி மில்க் உரிமையாளர் ராஜேந்திரபாபு இல்ல திருமண விழா நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு நாயுடு பேரவையின் மதுரை மாவட்ட அவை தலைவர் வாசுமலை பெருமாள் நாயுடு, மண்டல் துணைத் தலைவரும்,பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவருமான செந்தில்குமார் நாயுடு,மாவட்ட இளைஞரணி செயலாளர் காசிராஜன் நாயுடு கலந்து கொண்டு, மணமக்கள் நித்யா-சுதிர்குமார் ஆகியோரை வாழ்த்தினார்கள்.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர் பழங்காநத்தம் மண்டல் பாரதிய ஜனதா கட்சி 62வது வார்டு சார்பாக பொன்மேனி புதூர் 2- வது தெருவில் விநாயகர் சதுர்த்தி முதலாம் ஆண்டு விழா முன்னிட்டு பிள்ளையார் திருவுருவச் சிலை சிறப்பு பூஜை நடைபெற்றது.
மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகர் மாவட்ட பொறுப்புத் தலைவர் மகா சுசீந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர் வேங்கை மாறன், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை 62 ஆவது தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் மற்றும் ஆர்.கே பிரகாஷ், பொன்முருகன், டாக்டர் கஜேந்திரன், அசோக், சிவவடிவேல், 68 வது வார்டு தலைவர் சசிகுமார், போத்திராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை அண்ணாநகர் ஆலமரம் ஸ்ரீ பிள்ளையார் கோவில் 52 வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மேலும் மதியம் நடந்த மாபெரும் அன்னதானத்தை கோவில் விழா கமிட்டி தலைவர் மதன்குமார் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பாண்டிமணி, பெருமாள், பன்னீர்செல்வம், தமிழரசன் ஆட்டோ செல்வம், கோபால், பழனிச்சாமி (எ) பட்டாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கேந்திர வித்யாலயா பள்ளி மாணவ/மாணவிகளுக்கிடையே 26-08-2022 அன்று சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் 40-42 கிலோ எடைப்பிரிவில் சிவகங்கை கேந்திர வித்தியாலயா பள்ளியில் 8ம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவன் KS.பிரணவ் குமார் முதலிடம் பெற்று சாதனை படைத்தார்.
இவர் சோழன் குத்துச்சண்டை கழகத்தில் பயிற்சி பெறும் மாணவன் என்பதும் கடந்த
மூன்று வருடங்களுக்கு முன்னர் அப்போதைய சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் முன்னிலையில் ஒரு நிமிடத்தில் 110 ஜம்பிங் ஜாக்ஸ் செய்து சோழன் உலக சாதனை படைத்து ஆட்சியர் கைகளால் உலக சாதனைக்கான சான்றிதழைப் பெற்றவர் என்பதும் மேலும் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய சுதந்திர தின நிகழ்விலும் குடியரசு தின விழா நிகழ்விலும் பாராட்டுச் சான்றிதழ் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கீரைத்துரையில் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விபிஆர் செல்வகுமார் அன்னதானம் வழங்கினார்.
மதுரை,ஆக.31:
தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70- வது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் விதமாக,மதுரை மாநகர் வடக்கு மாவட்டம், தெப்பக்குளம் பகுதிக்கு உட்பட்ட 86-வது வட்டக்கழக செயலாளர் நல்லமருது அவர்களின் ஏற்பாட்டில், இன்று புதன்கிழமை கீரைத்துரையில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் உள்ள பெரியோர்களுக்கு,மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,வி.பி.ஆர் செல்வகுமார் அவர்கள் தலைமையேற்று அன்னதானம் வழங்கினார்.
முன்னதாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார் சிலைக்கு மாலை அணிவித்து நிர்வாகிகளுடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கீரைத்துரை ரயில்வே கேட் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இந்நிகழ்ச்சிக்கு தெப்பக்குளம் பகுதி செயலாளர் கோல்டு முருகன் முன்னிலை வகித்தார்.இதில் மாவட்டகழக துணை செயலாளர், பா.மானகிரியார், பொதுக்குழு உறுப்பினர்,புரட்சி செல்வம், பகுதி கழக செயலாளர், தெய்வேந்திரன், மாணவரணி துணை செயலாளர், மணிகண்டபிரபு, நெசவாளரணி செயலாளர், பிரகாஷ், அண்ணாநகர் பகுதி அவைத்தலைவர் கவிஞர் மணிகண்டன்,ஜெயபாண்டி, 42வது வட்டகழக செயலாளர், நாகராஜன் மற்றும் 86வது வட்டக் கழக நிர்வாகிகள், அவைத்தலைவர் கதிரேசன், நல்லுச்சாமி,முரசு அழகர், முத்துமணி, தனபாலன், மாரிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் ஜி, விவசாய அணி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையிலும், மாவட்ட பொதுச்செயலாளர் துரைபாஸ்கர், மாநில திட்ட பொறுப்பாளர் அழகுராஜா ஆகியோர் முன்னிலையிலும், பாஜக பரவை மண்டல் துணைத்தலைவர் கண்ணன், மற்றும் விவசாய அணி பரவை மண்டல் தலைவர் சந்திரசேகர், பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயலாளர்கள் விஜி, ராமகிருஷ்ணன் ஆகியோர் ஏற்பாட்டில், இன்று (30/08/2022) மதுரை துவரிமான் கிராமத்தில் வீடு,வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து விவசாயிகளுக்கான மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட செயலாளர் சுரேஷ் விளக்கி பேசினார்.
மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை விவசாய அணி மாநகர் தலைவர் முத்துப்பாண்டி அவர்கள் வழங்கினார்.
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் இந்துமதி,உடல் கல்வி இயக்குனர் வசந்தி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் முன்னிலையில், பதினெட்டாம்படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்புச்செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் ரெக்கார்டு புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் தலைமையிலும், நடந்த நோபல் உலக சாதனை முயற்சியில், மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன், வசந்தி ஆகியோரின் மகள் ரிங் ரோட்டில் உள்ள அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவி பவித்ரவேலா 2 1/2 அடி உயரம் கொண்ட பொய்க்காலில் நின்று இடைவிடாமல் நடந்து கொண்டே ஒற்றை சிலம்பத்தை 2 மணி நேரம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்துள்ளார். மேலும் பவித்ரவேலாவின் இளைய சகோதரி அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவி காவ்யாஸ்ரீ யும் இரண்டு மணி நேரம் இடைவிடாது ஒற்றை சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார். சாதனை படைத்த சகோதரிகள் இருவருக்கும் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கடந்து 25 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை ஏற்றுப் பணியாற்றியிருக்கேன். எல்லாவற்றையும் விட தலைவர் ராகுல்காந்தி தலைமையில், காங்கிரஸ் கட்சி முன்னெடுக்கும் #இந்தியஒற்றுமைப்பயணம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஒருங்கிணைக்கும் இந்த வாய்ப்பு மகத்தானது.
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் நமது தேசம் எதிர்நோக்கியிருக்கும் வாழ்வா? சாவா? போராட்டம். ஆர்எஸ்எஸ்/ பாஜகவின் மோடி ஆட்சி இந்த தேசத்தின் ஆன்மாவை மதம்,சாதியின் அடிப்படையில் கூறுபோட்டுள்ளது. விலைவாசி உயர்வு,வேலைவாய்ப்பின்மை.விவசாயம்,சிறு,குறு,நடுத்தர தொழில்கள் பேரழிவை சந்தித்துள்ளன.
காயம்பட்டுக் கிடக்கும் இந்த தேசத்தின் ஆன்மாவை மீட்டெடுக்கவும், வெறுப்பால் பிரிந்துகிடக்கும் இதயங்களை ஒருங்கிணைத்து,அன்பை விதைக்கவும்,அழிந்துபோன பொருளாதாரத்தை மறுகட்டமைப்பு செய்யவும் காங்கிரஸ் கட்சி இந்த இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை நடத்துகிறது.இது மக்களுக்கான ஒரு மாபெரும் இயக்கம்.
இந்த மாபெரும் மக்கள் இயக்கம், தொன்மையும்,பெருமையும் மிக்க தமிழ் மண்ணில், கன்னியாகுமரியில் இருந்து துவங்குகிறது.
இப்படியொரு வரலாற்று சிறப்புமிக்க வாய்ப்பை வழங்கிய அன்னை திருமிகு.சோனியா காந்தி,தலைவர் திரு.ராகுல்காந்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு.திக்விஜயசிங் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த நடைபயணம் சிறப்பாக நடைபெற வேண்டும் என்கிற ஒற்றை நோக்கோடு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ,தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் பணியினை சிறப்பாக செய்துமுடிப்போம். இந்தியாவை மீட்டெடுப்போம்.
மதுரையில் காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில பொதுச்செயலாளர் பி.ஜே.காமராஜ் அவர்களின் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி நினைவு அஞ்சலியை செலுத்தினர். இந்நிகழ்வில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், மாநில பொதுச்செயலாளர் எஸ்.பி.வரதராஜன், ஊடகப்பிரிவு மாநில பொதுச்செயலாளர் பால்ஜோசப், பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், கவுன்சிலர் தல்லாகுளம் முருகன், தொழிலதிபர் சந்திரபோஸ், பகுதி தலைவர் பூக்கடை கண்ணன், மாவட்ட பொதுச்செயலாளர் போஸ், இராஜராஜ சோழன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.