வரும் பிப்ரவரி 3- ஆம் தேதி அன்று போராட்ட ஆயத்த மாநாடு மற்றும் பிப்.21 ஆம் தேதி அன்று சென்னையில் தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பெருந்திரள் முறையீடு நடைபெறும் என தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிவித்துள்ளது
தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பாக செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சசிகலா தலைமையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள மூட்டா அரங்கத்தில் நடைபெற்றது.
செவிலியர்களுக்கு தமிழக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாக தொடர் இயக்கங்கள் நடத்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து மாநில தலைவர் சசிகலா கூறுகையில், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டது போல எம்.ஆர்.பி செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப என்.எம்.சி மற்றும் ஐ.பி.ஹெச்.எஸ் பரிந்துரைகளின் அடிப்படையில் நிரந்தர பணியிடங்கள் உருவாக்க வேண்டும்.
கொரோனா காலகட்டத்தின் போது இரண்டரை வருடங்கள் பணிபுரிந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
காலியாக உள்ள தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்.
மகப்பேறு விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் கோரிக்கைகள் மற்றும் பணி நியமன நிபந்தனைக்கு மாறாக 8 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பூதிய முறையில் பணி செய்யும் செவிலியர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி 27/01/2024 முதல் 29/01/2024 வரை அனைத்து செவிலியர்களும் முதல்வர் அவர்கள் மக்கள் நல்வாழ்த்துரை அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்புவது என்றும் 31/01/24 மற்றும் 01/02/2024 ஆகிய இரு தினங்கள் செவிலியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்வது என்றும், 03/02/2024 அன்று அனைத்து மாவட்டங்களிலும் போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது என்றும், 21/02/2024 அன்று சென்னையில் முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு வழங்கும் பெருந்திரள் முறையீடு நடத்துவது என்றும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்து தோழர்களும் போராட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து கோரிக்கையை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்
இதில் பொதுச்செயலாளர் சுபின், மாநில பொருளாளர் மைக்கேல் லில்லி புஷ்பம், துணைத்தலைவர்கள் விமலாதேவி, அஸ்வினி கிரேஸ், சுதாகரன், ஹேமசந்திரன், வினோதினி,ராகவன் இணைச்செயலாளர்கள் விக்னேஷ், ஜான்பிரிட்டோ, சுஜாதா,பெஜாக்சின், அசோக் மாதவன், சேசுடெல்குயின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பரவையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
மதுரை, ஜனவரி.21-
மதுரை மாவட்டம் பரவையில் மேற்கு தொகுதி அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பரவை பேரூர் கழகச் செயலாளர் சி.ராஜா மற்றும் பரவை பேரூராட்சி சேர்மன் கலாமீனா ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் செல்லூர் கே .ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் பா.குமார், மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் வி.பி.ஆர் செல்வகுமார், எம்.எஸ்.கே மல்லன், சக்திவிநாயகர் பாண்டியன், ஆர்.கே.ரமேஷ், எம்.ஜி.ராமச்சந்திரன், மார்க்கெட் மார்நாடு, விளாங்குடி முத்துமுருகன், பாவலர் ராமச்சந்திரன்,நிரஞ்சன், மாஸ்.மணி, மலர்விழி, சின்னச்சாமி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதி மய்யம் மதுரை தெற்கு தொகுதி நிர்வாகி குணாஅலி இல்ல திருமண விழா மதுரை வண்டியூர் பகுதியில் உள்ள திருமண மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன், மண்டல அமைப்பாளர் அழகர் மற்றும் நிர்வாகிகள் பூமிராஜா, சுந்தர், நாகேந்திரன், ஆசைத்தம்பி, பழனிமுருகன்,ரமேஷ், சமயபாண்டி, சித்தன், மணிகண்டன், மதியழகன், தர்மர், தங்கப்பாண்டி,ரமேஷ், செல்லப்பாண்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்கள் அசாருதீன், தவ்லத்பேகம் ஆகியோரை வாழ்த்தினர்.
பெரியாறு பாசனக் கால்வாய்களில் தாமதமாக தண்ணீர் திறந்ததால் மதுரை மாவட்டத்தில் எங்குமே விவசாயம் நடக்க வில்லை என்று மதுரையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டி பேசினர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
இதில் டி.ஆர்.ஓ சக்திவேல், கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அன்புச்செல்வன்,தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ரேவதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்கத்தின் மாநில தலைவர் விவசாயி ஆபேல் மூர்த்தி கலந்து கொண்டு பேசுகையில், திருமங்கலம். கள்ளந்திரி, மேலூர் பாசனக் கால்வாய்களில் ஒரே நேரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும் என்றுதான் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் வைகையில் 67 அடி தண்ணீர் இருந்தும், மூன்று முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பிறகும், பெரியாறு பாசன கால்வாய்களில் தண்ணீரை திறந்து விடவில்லை. 10 நாட்களுக்கு கால்நடைகளுக்காக கள்ளந்திரி கால்வாயில் மட்டும் தண்ணிரை திறந்தனர், மேலூர், திருமங்கலம் கால்வாய்களில் தண்ணீர் திறக்கவில்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராத காரணத்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் நீதிமன்றம் கேட்டபோது, அவர்கள் 2 குறிப்பிட்ட சங்க நிர்வாகிகள் கண்மாய்களில் தண்ணீர் இருப்பதால் தண்ணீர் திறக்க வேண்டாம் என கடிதம் தந்ததால் திறக்கவில்லை என்றனர். விவசாயிகளுடன் பேசிக் கொண்டே விவசாயிகள் சங்க நிரவாகிகள், விவசாயிகளுக்கு எதிராகவும், அதிகாரிகளுக்கு ஆதரவாகவும், பெரியாறு பாசன கால்வாய் தண்ணீர் திறப்பு விவகாரத்தில் செயல்பட்டுள்ளது தெளிவாகிவிட்டது.
விவசாயிகள் கருத்தை கேட்காமல் சங்க நிர்வாகிகள் கருத்தை அதிகாரிகள் எப்படி கேட்கலாம். இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர். எனவே அடுத்த முறை விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என பேசினார்.
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை பழங்காநத்தம் பகுதியில் 71 வது வட்டக் கழகச் செயலாளர் பழங்காநத்தம் ராஜாராம் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் பா.குமார், பரவை பேரூர் கழக செயலாளர் பரவை ராஜா, அவைத்தலைவர் அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் பைக்காரா கருப்பசாமி, சக்திவிநாயகர் பாண்டியன், முத்துவேல் மற்றும் வி.பி.ஆர் செல்வகுமார், மாஸ்.மணி, மலர்விழி, வட்டக்கழக துணைச் செயலாளர் ஜெயமணி, பிரதிநிதிகள் ஜெயராஜ், பூமிநாதன், அவைத்தலைவர் ஊருக்கு உழைப்பவன் பி.எம்.பாண்டி மற்றும் சரவணன், ராவுத்தராயன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
17.01.2024 கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டம், கூடலூர் கிராமம் பூசாரிபட்டியில் மூன்று மந்தை 84 ஊர் சோழிய வெள்ளாளர்கள் சமூக நலச் சங்கம் சார்பில் உழவர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் சங்கத்தின் தலைவர் திரு. கௌரிசங்கர், செயலாளர் திரு.சண்முகராஜ், பொருளாளர் திரு.ஜெய சரவண பாலாஜி மற்றும் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. ஜோதிமணி அவர்கள் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்ததோடு, அந்தப் பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று அவற்றை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
உடன் கூடலூர் பஞ்சாயத்து தலைவர் திருமதி. சாந்தி கோபால், குஜிலியம்பாறை ஒன்றிய துணை சேர்மன் திருமதி. மணிமேகலை தங்கராஜ், திமுக பிரமுகர் திரு.கர்ணன் மற்றும் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர்கள் திரு.சாமிநாதன், திரு.ரங்கமலை, திரு.முரளி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் திரு.பாலமுருகன், கரூர் மாவட்ட காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு.பாலமுருகன் கந்தசாமி, கரூர் நகர திமுக திரு.கிருபா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உட்பட ஏராளமான பிரமுகர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருமளவில் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு,மக்கள் நீதி மய்யம் மதுரை வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் கோமாதாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வண்டியூர் பகுதியில் பசு மாடுகளுக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்தி கோமாதாவை வணங்கினார்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் பூமிராஜா, ஆர்.சி.மணிகண்டன், சமூக ஆர்வலர் மகேந்திரன், முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எப்என்ஐ மற்றும் ஜி.பி.பி நெட் , அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக மாணவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா
மதுரை, ஜனவரி.15-
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் எப்என்ஐ, ஜி.பி.பி நெட் மற்றும் அன்னை வசந்தா டிரஸ்ட் மற்றும் திருமங்கலம் நகர் மக்கள் நலச்சங்கம் இணைந்து நடத்திய விவேகானந்தர் பிறந்த நாள் விழா மற்றும் மாலை நேர வள்ளலார் பயிற்சி பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அகத்தியர் சிலம்ப பயிற்சி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு செயலாளர் சித்ரா ரகுபதி, ஆசிரியர் பவித்ரா பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொல்காப்பியர் மன்ற தலைவர் இருளப்பன் வரவேற்று பேசினார்.
பயிற்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ருக்குமணி பரிசுகளை வழங்கி பாராட்டினார். சிலம்பம் பயிற்சி பள்ளியின் தலைமை ஆசான் மருதுபாண்டியன் பொங்கல் பரிசுகளை வழங்கினார்.
திருமங்கலம் நகர் மக்கள் நலச்சங்க தலைவர் இரா.சக்கையா, டிரஸ்ட் நிறுவனர் எஸ்.எம் ரகுபதி, வள்ளலார் பயிற்சி பள்ளி ஆசிரியர் சிவஜோதிகா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் நன்றி கூறினார்.நிகழ்ச்சியை ரோகுபாண்டி ஒருங்கிணைத்தார்.
பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான வளசை. முத்துராமன் ஜி பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :-
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சங்க காலத்திலிருந்து கொண்டாடப்படும் தமிழர்களின் தைப்பொங்கல் பல வரலாறு மிக்க தமிழன் கதிரவனின் ஒளியினால் தான் பயிர்கள் வளர்கின்றன என்றும் காய்கறிகள் காய்க்கிறது என்றும் துல்லியமாக கணித்தார்கள். அதனால்தான் கழனியில் விளைந்த கதிரை பறித்து கதிரவனுக்கு நன்றி செலுத்தினார்கள்.
மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் மிகவும் உணர்ச்சியாக கொண்டாடினார்கள் தை1 முன்தினம் போகி பன்டிகை ஆயர்கள் கொண்டாடினார்கள் என்ற வரலாறும் சொல்லப்படுகிறது.தை1 ஆம் நாள் சூரிய நாராயணன் என்ற பெயரில் நாமும் வழிபட காரணமானது. அந்தக் கால நெல் விதைகள் அறுவடை செய்ய குறைந்தது ஆறு மாத காலங்கள் ஆகும் அதாவது ஆடியில் விதைத்தால் மார்கழி அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் காலமே தைப்பொங்கல் ஆனது.
அதனால் தான் நம் தமிழ்நாட்டில் பழமொழி தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அரசருக்கு வரியாக செலுத்தியது நெல் போக மீதி இருக்கும் நெல்லை விற்பதற்கும் வீட்டுக்கு எடுத்து வந்து அரிசி ஆக்கி புது மண் பானையில் பச்சரிசி வெல்லம் பால் நெய் முந்திரி பருப்பு கலந்து பொங்கல் வைப்பது மட்டுமல்லாமல் கரும்பு இலை, மஞ்சள் அனைத்து பொருளுமே புதுசாக இட்டு பொங்கல் உருவாக்கி மனிதனுக்கும் மாட்டுக்கும் கொடுத்து மகிழ்ந்து வந்தார்கள் நம் தமிழர்கள்.
அது மட்டுமல்லாமல் போகி பண்டிகை அன்று பழையதை எரிக்கும் சடங்காக கொண்டாடினார்கள் அடுத்ததாக மாட்டுப் பொங்கல் ஊரில் ஒரு பழமொழி உண்டு. நன்றாக உழைக்கும் ஒரு மனிதனைப் பார்த்து மாடு போல் உழைக்கிறான் என்று சொல்வார்கள் அந்த காலத்தில் மனிதனுக்கு மேலாக மாடுகள் தான் உழைத்தன. உழைத்த மாட்டை பெருமை படுத்தும் விதமாக மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து சந்தனம் குங்குமம் சாத்தி கலப்பைகளையும் நன்றாக சுத்தம் செய்து அதற்கும் சந்தனம் குங்குமம் விட்டு உழவுக்கு உறுதுணையாக இருந்த அத்தனை பொருளையும் மதித்தார்கள்.
ஏறு தழுவுதல் மஞ்சு விரட்டு என்று கி.மு 2000 முன்பு இருந்த தமிழர்களின் வீர விளையாட்டை ஜல்லிக்கட்டு என்று மாற்றியவர்கள் நாயக்கர் மன்னர்கள். பழந்தமிழ் இலக்கியங்கள் பல இடத்தில் சொல்லப்பட்டுள்ளன அதுபோல் சொல்லால் தரப்பட்டவள் என்ற கலிப்பாடல்,
ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது. திவ்ய பிரபந்தத்தில் கூட திருமங்கை ஆழ்வார்.அம்பொனார் உலகம் ஏழும் அறிய ஆய்ப்பாடி தன்னுள் கொம்பனார் பின்னை கோலம் கூடுதற்கு ஏறு கொன்றான் நெம்பொனார் மதிள்கள் சூழ்ந்த தென் திருப்பேருள் மேவும் எம்பிரான் நாமம் நாளும் ஏத்தி நான் உய்ந்த வாறே” தன் மாமன் மகளான நப்பினையா பகவான் கிருஷ்ணன் ஏழு காளைகளை அடக்கி மணமுடித்தார் என்கிறார்.
தில்(புறம்:22) என்ற புறநானூற்றுப் பாடல் தைத்திருநாளில் செந்நெல்லினை அறுத்து கரும்பினைக் கட்டி அந்த இடத்தில் நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும்,கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன என்று கூறுகிறார் திருமங்கை ஆழ்வார்
வரலாற்றுச் சான்றுகள்:
பழங்காலப் பெண்கள் தை மாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் சில குறிப்பிட்டிருக்கின்றன. தை மாதத்தில் நோன்பிருந்து, வைகை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்கப்பெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாக ‘பரிபாடல்’ கூறுகின்றது. ‘தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ தாயருகா நின்று தவத் தைந்நீராடல் நீயுரைத்தி வையை நதி’
(பரிபாடல்:11)என்
தமிழர்களின் இந்த பாரம்பரியத்தை பொங்கல் தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் அறுவடை கர்நாடகா ஆந்திரா மகா சங்கராந்தி என்ற பெயரிலும் ஜனவரி 13 இல் பஞ்சாப் மற்றும் அரியானா லோஹ்ரி, ஜனவரி 14 15 அசாம் மாநிலத்திலும் மாஹ் பிகு என்ற பெயரில் நெல் அறுவடை திருவிழா நடைபெறுகிறது.
கிரேக் எகிப்து ரோம ஜப்பானியர்கள் டோரினோய்ச்சி என்றும் கொரியாவில் சூசாக் என்றும் ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் மூன்று நாள் திருவிழாவாகவும் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கட்கிழமை சீனாவில் நிலா விழா என்ற பெயரில் அறுவடை திருநாள் கொண்டாடப்படுகிறது.
உணவுக்கு இல்லாமல் உயிரினம் வாழ முடியாது என்பதை தெரிந்து தான் திருவள்ளுவர் உழவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் திருக்குறள் சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. பல தொழில் செய்து சுழலும் இவ்வுலகத்தில் ஏர்ப்பிடிக்கும் தொழிலை பின்பற்றி தான் உலகம் சுற்ற வேண்டியிருக்கிறது. துன்பங்கள் பலயானும் உழவுத் தொழிலே உலகத்தில் சிறந்தது என்பது வள்ளுவன் வாக்கு. இப்படி பல ஆழ்வார்களும் நாயன்மார்களும் தை திருநாளை போற்றி புகழ்ந்து கூறியுள்ளார் என்பது தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
அப்படிப்பட்ட தருணத்தில் தமிழ்நாட்டில் ஒரு எம்.பி கூட இல்லாத போதிலும் தமிழ்நாட்டுக்கு இரண்டு லட்சத்தி 70 ஆயிரம் கோடிய அளவுக்கு தமிழர்களின் முன்னேற்றத்துக்காக அள்ளி கொடுத்த நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சார்பாகவும், மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் சார்பாகவும், மத்திய அமைச்சர் டாக்டர் எல்.முருகன் அவர்கள் சார்பாகவும் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவர் வளசை முத்துராமன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம், கரிசல்பட்டியில் உள்ள அகத்தியர் அன்னதான அறக்கட்டளை அலுவலகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம்,கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனத் தலைவர் பா.முத்துப்பாண்டி தலைமையிலும், பில்டிங் காண்ட்ராக்டர் பூமிநாதன் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.
டிரஸ்ட் செயலாளர் திருமதி. மு.சகுந்தலாதேவி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பொருளாளர் மு.சக்திவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அன்னாள் நல காப்பகம் ஒருங்கிணைப்பாளர் யோகராஜ் பங்கேற்றார்.
இதில் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி பாக்கியலெட்சுமி, கவிதா,நாகஜோதி, சக்கரை, கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் துணைத்தலைவர் மாலா நன்றி கூறினார்.