தேவர் ஜெயந்தி முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு இந்து முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் ராஜாமதன், மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், சதீஷ்குமார், பாண்டிபிடாரன், செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், சண்முகவேல், எஸ்.எஸ் காலனி ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய முக்குலத்தோர் இளைஞர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் வெற்றி, ராஜாநாடார், கல்யாணி, மெக்கானிக் ராஜா, சுரேஷ்,சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இலக்கிய அணி மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக கோச்சடை பகுதியில் ஏழை எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் அவர் வழங்கினார்.
தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் தாமோதரன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் மகுடீஸ்வரன், பஞ்சவர்ணம், கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன்,மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர் சங்க செயலாளர் கே.டி.கே துரைக்கண்ணன், சி.ஐ.டி.யு மதுரை மாநகராட்சி அனைத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் தூய்மைப்பணி, தெருவிளக்கு பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் உள்ளது.
தற்போது வரி வசூல் பணி, தூய்மைப்பணி, தெருவிளக்கு பராமரிப்பு பணி, குடிநீர் வழங்கும் பணியை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்கும் நிலை ஏற்படுகிறது. இனிவரும் காலங்களிலும் இதுவே தொடரும் என அறிவிப்பு தமிழக அரசின் தனியார் மயப் போக்கினை ஆதரிக்கும் செயலாக உள்ளது .
இதனால் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத நிலை ஏற்படுவதுடன் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அரசு வேலை என்பது மறுக்கப்படுவதுடன் மாநகராட்சி ஊழியர்களின் வாரிசுதாரர்களின் கருணை அடிப்படை பணி நியமன வாய்ப்புகளும் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழக முதல்வர் மாநகராட்சிக்களுக்காக வெளியிடப்பட்ட அரசாணை எண் (152) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.7) துறை நாள் (20/10/2022) ஐ பரிசீலனை செய்து “டி”பிரிவு ஊழியர்களுக்கான பணியிடங்களை தோற்றுவிக்கவும், ஏற்கனவே பணிபுரியும் மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு பெறும் வகையில் புதிய அரசாணை வெளியிடுமாறு சங்கத்தின் சார்பாக தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுர் இப்ராஹிம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், சிறுபான்மையினர் அணி மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாநில செயலாளர் சாம் சரவணன் , தல்லாகுளம் மண்டல் தலைவர் அருண் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்
மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் சிவாவுக்கு கேடயம் பரிசு அமைச்சர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்
தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது, எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிச்சாமி வருவார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி மதுரை காந்தி மியூசியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் சிவாவுக்கு மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சச்சின் சிவாவுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து கேடயம் பரிசு வழங்கி பாராட்டினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் “வட கிழக்கு பருவ மழை நாளை முதல் தொடங்க உள்ளது, அரசின் மெத்தன போக்கினால் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார், வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் தமிழக அரசு முறையாக செய்ய வேண்டும், பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும், திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்குகிறது, கோவையில் 1998 ல் 11 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்ததில் இருந்தே மக்கள் மீளவில்லை, அதிமுக ஆட்சி காலங்களில் பயங்கரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது,
சோற்றில் பூசனிக்காயை மறைப்பது போல அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் ஒன்றும் நடக்கவில்லை என பேசி வருகிறார், கோவை சம்பவத்தை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது, அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, கோவை சம்பவம் குறித்து முதல்வர் மவுனம் கலைத்து பேச வேண்டும், தீவிரவாதம், பயங்கரவாதத்துக்கு எதிராக திமுக தலைமையிலான அரசு வேடிக்கை பார்த்தால் திமுக ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள், திமுக இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடை மாற்றும் செயல், தமிழுக்கு ஆபத்து என திமுக பேசி வருகிறது, தமிழை அதிமுக மட்டுமே பாதுகாத்து வருகிறது,
தமிழுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதிமுக முதலில் நிற்கும், அதிமுக ஆட்சியில் திமுக அர்த்தமில்லாமல் 40,000 போராட்டங்கள் நடத்தியது, எடப்பாடி பழனிச்சாமி தென் தமிழகத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மரியாதை செய்து உள்ளார், 2017 ல் தேவரின் தங்க கவசம் எடுப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி மதி நுட்பத்தோடு செயல்பட்டார், தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது, எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிச்சாமி வருவார், சலசலப்பு, சச்சரவுக்கு எதிராக எடப்பாடியார் அஞ்ச மாட்டார், ஒ.பி.எஸின் பலம் என்ன பலவீனம் என்ன என்பது மக்களுக்கு தெரியும், தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது இதுவே ஒ.பி.எஸின் செல்வாக்கு, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி ஒன்றரை இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்தது,
ஒ.பி.எஸ் எந்தவொரு தேர்தல்களிலும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை, ஒ.பி.எஸ் தன்னை முன்னிலைப்படுத்தும் யுக்திகள் தோல்வியில் முடியும், 50 ஆண்டுகளில் அதிமுக தோல்வியையும், வெற்றியையும் சந்தித்துள்ளது, அதிமுகவில் எதுவும் நிரந்தரமில்லை, விழ்வதும், வெல்வதும் தொண்டர்கள், மக்கள் கையில் உள்ளது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக புதிய வரலாறு படைக்கும்” என கூறினார்.
பக்கவாதத்திற்கு அடுத்த நொடியிலேயே சிகிச்சை தேவை என அப்போலோ மருத்துவமனை விழிப்புணர்வு கருத்தரங்கில் டாக்டர்கள் கூறியுள்ளனர்
பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளதாக பிரபல மருத்துவர்கள் வலியுறுத்தினர். பக்கவாதம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நிமிடத்திலும் சுமார் 19 லட்சம் நரம்புகளும், 10 நிமிடத்திற்குள் சுமார் 2 கோடி நரம்புகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதால் பக்கவாதத்திற்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் உணர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
மதுரை அப்போலோ மருத்துவமனையில் “பக்கவாதம் & முடக்குவாதம் : கண்டறிதல், சிகிச்சை மற்றும் தடுப்புக்கான விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
இந்தக் கருத்தரங்கில் டாக்டர்கள் மீனாட்சி சுந்தரம் – மூத்த நரம்பியல் நிபுணர், எஸ்.என்.கார்த்திக், சுரேஷ், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஷ்யாம், டாக்டர் கெவின் ஜோசப், நரம்பியல் நிபுணர் சுந்தர் ராஜன், கதிரியக்க நிபுணர் ஜான் ராபர்ட், எமர்ஜென்சி பிரிவு மருத்துவர் ஜூடு வினோத் அப்போலோ மருத்துவமனை மதுரைப் பிரிவின் சிஓஓ நீலகண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பக்கவாதம் மற்றும் முடக்குவாதம் குறித்த முக்கிய தகவல்களை விளக்கிப் பேசினர்.
வயது முதிர்வு மற்றும் பல்வேறு காரணங்களால் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாலும், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க முடியாததாலும், கெட்ட கொழுப்பின் அளவு இரத்தத்தில் அதிகரிப்பதாலும், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களினாலும், பரம்பரைக் காரணிகளாலும் பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்நோயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு வரும் இஸ்கீமிக் (ischemic) ஸ்ட்ரோக். 85 விழுக்காடு நபர்களுக்கு இதன் காரணமாகவே பக்கவாதம் ஏற்படுகிறது. இரண்டாவது இரத்தக்குழாய்களில் வெடிப்பு ஏற்படுவதால் வரும் ஹெமரேஜிக் (hemorrhagic) ஸ்ட்ரோக். எம்ஆர்ஐ ஸ்கேன் அல்லது சிடி ஸ்கேன் பரிசோதனைகள் மூலமாக எந்த அளவுக்கு பக்கவாதத்தின் பாதிப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பக்கவாதம் ஏற்பட்டு அதிகபட்சமாக 3 அல்லது 41/2 மணி நேரத்திற்குள் இந்நோய்க்குச் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளை அணுகுபவர்களுக்குத் த்ராம்போலைசிஸ் என்ற ஊசி மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. டினக்ட்டிப்ளேஸ், அல்டிப்ளேஸ் என்று இருவகை மருந்துகள் இத்தருணத்தில் உபயோகப்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தனர்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை அப்போலோ மருத்துவமனை சிஓஓ நீலக்கண்ணன், டாக்டர் பிரவீண் ராஜன், JDMS அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் கே .மணிகண்டன், நிர்வாக பொதுமேலாளர் டாக்டர் நிகில் திவாரி ஆகியோர் உடனிருந்தனர்.
இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக மதிப்பிற்குரிய திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், மதிப்பிற்குரிய அன்னை திருமிகு. சோனியா காந்தி,தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் முன்னிலையில் பதவியேற்ற நிகழ்வில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் குழு உறுப்பினர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு. செ. ஜோதிமணி அவர்கள் பங்கேற்றார்.
கருணை இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் கை கால்கள் செயலிந்தோருக்கு உணவுகளை ஊட்டி தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளரை சமூக சேவகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது.இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர்.
தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய நாயக்கனூர் காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமி சென்று பார்த்து அன்பாகவும் ஆதரவாகவும் பேசினார்.மேலும் கை,கால்கள் செயலற்று இருந்தோருக்கு உணவை ஊட்டினார்.
மேலும் அங்கிருந்த அனைவருக்கும் உணவு வழங்கி அவர்கள் அனைவருடனும் தீபாவளி வாழ்த்து பகிர்ந்து கொண்டார்.
சொந்த பந்தங்களை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் முதியோர்களுடன் தீபாவளி கொண்டாடிய காவல் ஆய்வாளர் சண்முகலட்சுமியை அனைவரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
பிரிட்டனை பிரதமராக ரிஷி சுனக் நல்லபடி ஆளட்டும், வாழ்த்துகள்!
இந்த நேரத்தில் மறைமுகமாக எம்பிக்களால் தேர்ந்தெடுக்கப்படும், பிரதமர் பதவியில் அமரும் இந்திய, இந்துப் பின்னணியைக் கொண்ட ரிஷி சுனக்கை மட்டும் அல்ல; நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் லண்டன் மேயர் பதவிக்கும் ஒரு வெளிநாட்டு பூர்வீகர் – பாகிஸ்தானைப் பின்புலமாகக் கொண்ட முஸ்லிம் சாதிக் கானை – பிரிட்டிஷார் தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்வோம்.
இந்தியர்களுக்கு இதில் உள்ள சேதி என்ன?
வெளியிலிருந்து வருவோரையும்கூட ஒரு சமூகம் எந்த அளவுக்கு அரவணைக்கிறது, மதிப்பளிக்கிறது, பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதுதான்!
இன்று ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக ஆவதையும், நேற்று கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர் ஆனதையும் கொண்டாடும் அதே வாய்கள்தான் கடந்த காலத்தில் சோனியா இந்திய பிரதமர் ஆவதை எதிர்த்து சுதேசி எதிர் விதேசி நியாயம் பேசிப் புறந்தள்ளின என்பதை மறக்க முடியுமா? இது தற்செயலா அல்லது இந்தியர்களுக்கே உரிய இரட்டை நாக்கின் இயல்பா?
அட, வெளிநாட்டுப் பின்னணி கொண்ட சோனியா இருக்கட்டும், இந்தியாவுக்குள்ளேயே பிறந்த முஸ்லிம்கள், தலித்துகள் என்றைக்கு இந்த நாட்டில் பிரதமராக முடியும்? இந்தி தெரிந்திராத ஒரு காஷ்மீரியோ, சிக்கிமியரோ பிரதமர் பதவியைக் கற்பனை செய்ய முடியுமா?
பெருமை கொள்ள ஏதும் இல்லை… 75 ஆண்டு கால சுதந்திரத்தில், ஒரு ஜனநாயக நாட்டின் சொந்த மக்கள் இடையே இன்னமும் இவ்வளவு பாகுபாட்டையும் ஏற்றத்தாழ்வையும் வைத்திருக்கும் நாம் இதுகுறித்து வெட்கப்பட வேண்டும்.
நமக்கு நாமே சுய பரிசீலனைக்குள்ளாக்கிக்கொள்ள வேண்டும்.