Wednesday , December 11 2024
Breaking News
Home / செய்திகள் (page 90)

செய்திகள்

All News

மதுரை தவிட்டுச்சந்தையில் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அ.தி.மு.க 51-ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, மதுரை தவிட்டுச்சந்தை பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட கழக செயலாளர், அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ கலந்து கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 85-வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சிக்கு மாநகர் 5-ஆம் பகுதி கழகச் செயலாளர் ஜோசப் தனுஷ்லாஸ் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ் பாண்டியன், அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், பகுதி செயலாளர்கள் சக்தி விநாயகர் பாண்டியன், ஞானசேகரன், இலக்கிய அணி மாநில துணைச்செயலாளர் ஆர்.கே.ரமேஷ், மகளிரணி இணைச்செயலாளர்கள் பாண்டிச்செல்வி ஞானசேகரன், ராணி நல்லுசாமி உள்பட சார்பு அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

பார்வையற்றோருக்கு உதவுவது கடவுளுக்கு செய்கிற சேவை: நடிகர் பயில்வான் ரங்கநாதன் மதுரையில் பேச்சு.!

பார்வையற்றோர் மற்றும் ஆதரவற்றோருக்கு சேவை செய்வது கடவுளுக்கு செய்கிற சேவை என மதுரையில் நடைபெற்ற விழாவில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசினார்

மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 100 பேர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஹோட்டல் தமிழ்நாடு அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் அழகுராம் ஜோதி தலைமை தாங்கினார். மதுரை மெட்ரோ ஹெரிடேஜ் ரோட்டரி சங்க தலைவர் சி. ஆர். வெங்கடேஷ் மதுரை கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரபு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பங்கேற்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு அரிசி மற்றும் இனிப்பு மற்றும் பிற பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:- சேவை ஒன்றுதான் உலகத்தில் சிறந்தது நாம் எவ்வளவுதான் பல காரியங்கள் செய்தாலும் வாழ்க்கையிலே பிறருக்கு உதவுகிற போது கிடைக்கிற சந்தோஷம் வேறு எதிலும் கிடையாது. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் . அதுவும் குறிப்பாக வரியோர்கள் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவு கொடுப்பது நிவாரண பொருட்களை கொடுப்பது என்பது மிக சிறந்ததாகும். இப்படி சேவை உள்ளம் படைத்த மனிதர்களை நோக்கி தான் கடவுள் அருள் காட்டுவார்.

மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் 500 நாட்களுக்கு மேலாக உணவு வழங்கி வருவது பாராட்டுதலுக்கு உரியது உலகத்தில் உள்ள பெரும் தலைவர்கள் இன்றைக்கு அவரவர்கள் செய்த சேவையினாலேதான் உயர்ந்து இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் வாழ்க்கையில் குறிப்பாக தினமும் ஏதாவது ஒரு சேவை நல்ல காரியங்கள் செய்ய வேண்டும் என்கிற வைராக்கியத்தை கொள்ள வேண்டும். ஆதரவற்றோருக்கு செய்கிற சேவை கடவுளுக்கு செய்கிற சேவையாக கருதப்படும் இவ்வாறு நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் ஆதரவற்றோர்களுக்கு இனிப்பு வழங்கிய அண்ணாநகர் முத்துராமன்.!

தீபாவளி திருநாளை முன்னிட்டு, மதுரை காந்தி மியூசியம் பகுதியில் சாலையோரமாக வசிக்கும் ஆதரவற்றோர்களுக்கு மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் சமூக சேவகர் அண்ணா நகர் முத்துராமன் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பூமிராஜா, நாகேந்திரன், குணா அலி, அழகர், கரிசல்குளம் முருகன், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை சென்ட்ரல் தியேட்டரில் எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன் திரையிடப்பட்டதை முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த ரிக்சாக்காரன் திரைப்படம் மதுரை சென்ட்ரல் தியேட்டரில் திரையிடப்பட்டதை முன்னிட்டு திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுக்கு எம்ஜிஆர் தீவிர பக்தர்கள் குழுவைச் சேர்ந்த தமிழ்நேசன் அவர்கள் எம்ஜிஆர் படம் பொறிக்கப்பட்ட முக கவசங்களை வழங்கினார்.

மேலும் அதிமுக 51- வது வட்டக்கழக துணைச்செயலாளர் ஜெகதீஷ் பாஸ்கர் ஏற்பாட்டில், ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் திரைப்பட விநியோகஸ்தர் கலைமதி வெங்கடேஷ், ஜான்சிராணி பூங்கா கல்பாலம் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் தீபாவளி கொண்டாட்டம்.!!

மதுரை பாத்திமா நகரில் உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் தீபாவளி திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

நடிகர் சங்க பொதுச் செயலாளர் சி.எம்.வினோத் துணை நடிகர்கள் அனைவருக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

இவ்விழாவில் குறும்பட இயக்குனரும், நடிகரும், நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், பன்னீர்செல்வம், மணி, பாலா, ராணி, வாசுகி, சுமதி, பாண்டிச்செல்வி, மஞ்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பாக,தேவர் ஜெயந்தி அழைப்பிதழ் வழங்கப்பட்டது

அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவின் அழைப்பிதழை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனீஷ்சேகர் அவர்களுக்கு, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநிலச் செயலாளர் பள்ளம் பசும்பொன் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் சிவபாண்டி ஆகியோர் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரத்தில் ROYAL SOUCO சவுராஷ்டிரா கல்லூரியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா.!!

சிவகங்கை மாவட்டம் எமனேஸ்வரம் ஈஸ்வர விலாஸ் ஆரம்பப் பள்ளியில் ROYAL SOUCO சவுராஷ்டிரா கல்லூரியின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு ஏழை,எளிய பள்ளி குழந்தைகளுக்கு தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா ROYAL SOUCO ஸ்தாபகர் & தலைவர் கே.என்.கே ரகுநாத் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு உப தலைவர் சாந்தமூர்த்தி முன்னிலை வகித்தார். ஸ்தாபகர் & செயலாளர் மற்றும் முன்னாள் கவுன்சிலருமான ஆர்.கே.பாலயோகி வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் டாக்டர் டி என் குப்புசாமி சந்திரசேகரன் எமனேஸ்வரம் சௌராஷ்ட்ரா சபைத் தலைவர் சேஷய்யர், சேனாதி பிலேந்திரன், மாருதிராஜன், சுஜாதா,விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே ஆப்பிள் மெட்ரோ ஷாப்பிங் திறப்பு விழா.!

மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் அருகே ஆப்பிள் மெட்ரோ ஷாப்பிங் திறப்பு விழா நடைபெற்றது.

பயாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்விழாவிற்கு வருகை தந்தவர்களை உரிமையாளர் பாரூக் வரவேற்றார். இவ்விழாவில் ஷாஜகான் உள்பட குடும்பத்தினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பாரூக் நம்மிடம் கூறுகையில்:-

1000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் பிளாஸ்டிக் வாளி இலவசம், 2000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் சில்வர் சம்படம் இலவசம், 3000 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால் பெரிய சில்வர் சம்படம் இலவசம்.

முதல் மற்றும் 2-வது கிளை கே.புதூர் பகுதியிலும், 3-வது கிளை அண்ணாநகரிலும், 4 வது கிளை காளவாசலிலும் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில் பாஜகவில் இணைந்த 500 இளைஞர்கள்.!!

மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பட்டியல் அணி மாநில செயலாளர் சிவாஜி தலைமையில், மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் முன்னிலையில், வழக்கறிஞர் கார்த்திகேயா 500 பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இந்நிகழ்வின் போது மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்திரன் உடன் இருந்தார்.

அதிமுக 51 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் 51 வது வட்டக்கழக செயலாளர் முனிச்சாலை சரவணன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.!

அதிமுக 51 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் 51 வது வட்டக்கழக செயலாளர் முனிச்சாலை சரவணன் தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது .

இவ்விழாவில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா ஏழை.எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக முன்னாள் முதல்வர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் முட்டை பிரியாணி வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் பா.குமார், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் எம்.எஸ்.கே மல்லன், தெற்கு 1.ம் பகுதி செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் முருகன், தர்மராஜ், நாகரத்தினம், மகேந்திரன், வேங்கையன், கண்ணன் மிட்டாய் பிரகாஷ், குணசேகரன், கமல், சாக்கு செல்வம், ரகுல், முத்து, மரக்கடை கணேசன், வேணுகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES