Tuesday , July 1 2025
Breaking News
Home / செய்திகள் (page 67)

செய்திகள்

All News

ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசிய சம்பவத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜக திட்டம்: கி.வீரமணி

ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசிய சம்பவத்தின் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜக திட்டம்: கி.வீரமணி

புதுச்சேரி: தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வெடித்த சம்பவத்தில் ஆழமாக விசாரித்து பார்த்தால் இதன் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜகவின் திட்டமாக இருக்கக்கூடிய அளவிற்கு இரண்டு மூன்று ஆதாரங்கள் சிக்கி இருக்கின்றன என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

குலக்கல்வி திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் மத்திய பாஜக அரசை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளர் சிவா உள்பட காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, “தமிழ்நாடு எப்போதுமே ஓர் அமைதிப் பூங்கா. அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபரை அழைத்துக்கொண்டு வந்தவர் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் தான். தமிழக ஆளுநர் மாளிகை முன்பு நடைபெற்ற தாக்குதலில் பாஜகவுக்கும் தொடர்பு உள்ளது. பாஜகவினர் இதே போன்று பல நேரங்களில் செய்து தங்களுக்கு பெருமை உண்டாக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

தமிழக ஆளுநர் மாளிகை முன்பு குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ஆழமாக விசாரித்து பார்த்தால் இதன் பின்னணியில் முழுக்க முழுக்க பாஜகவின் திட்டமாக இருக்கக்கூடிய அளவிற்கு இரண்டு மூன்று ஆதாரங்கள் தெளிவாக சமூக வலைதளங்களில் வந்துள்ளன. எனவே அந்த கோணங்களில் மட்டுமே தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

ஆளுநர் பல இடத்திற்குச் சென்றுள்ளார். அப்போது கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளனரே தவிர இது போன்ற சம்பவங்கள் ஏதும் நடைபெற்றதில்லை. பாஜகவினர் அரசியல் திருப்பங்களை உண்டாக்கவும், தமிழக அரசு மீது பழி போடலாம் என்றும் நினைக்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது.” எனத் தெரிவித்துள்ளார்.

பெரும் குழப்பங்களை ஏற்படுத்திய ‘பெட்ரோல் குண்டு’.. இவரா? அவரா? அடித்துக் கொள்ளும் திமுக, பாஜக!

மேலும் பேசிய கி.வீரமணி, “பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை தருகிறோம் என்று கூறிவிட்டு அந்த இட ஒதுக்கீடு எப்போது வரும் என்று சொல்ல முடியாது என்ற நிலை இருக்கிறது. இதைவிட பெண்களை ஏமாற்றும் மோசடி குற்றம் வேறு ஏதும் இல்லை. பெண் இனம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. ஏமாற்றப்பட்டுள்ளது. அதற்கு ஒரே பதில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றதும் இவற்றை நிறைவேற்றுவோம் என சோனியா காந்தியே கூறியுள்ளார்.

பாஜக அரசு விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் குலத் தொழிலை ஊக்குவிக்க முயற்சித்து வருகிறது. சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை நாள்தோறும் அறிவிக்கும் பாஜக அரசுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகி விட்டது” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை வழங்கிட ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!!

சென்னை : தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய ரூ.2697 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கிய வேண்டும் என்று ஒன்றிய தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில்,”மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கிராமப்புறங்களில் உள்ள முதியோர்கள், ஆதரவற்ற பெண்கள், குடும்பத் தலைவிகள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு முக்கியமானதொரு வாழ்வாதாரமாகவும், குறிப்பாக விவசாயம் நலிவடைந்த பருவத்தில், கிராமப்புறங்களில் உள்ள பலருக்கு கூடுதல் வாழ்வாதார வாய்ப்பாகவும் கருதப்படுகிறது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்தத் திட்டத்தில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் பெண்களாக இருப்பதாலும், அவர்களின் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படுவதாலும், அவர்களின் நிதிநிலை மற்றும் வாழ்வாதாரம் பெரிதும் மேம்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில், 2023-2024 ஆம் ஆண்டில் 40 கோடி மனித நாட்கள் தேவைப்படும் நிலையில், இதுவரை, 28 கோடி மனித நாட்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 23-10-2023 வரை, 66.26 இலட்சம் குடும்பங்களைச் சேர்ந்த 76.06 இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியதன் மூலம், தமிழ்நாடு 31.15 கோடி மனித நாட்களை எட்டியுள்ளதாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். 2023-2024 நிதியாண்டில், 19-7-2023 வரை, தொழிலாளர்களுக்கு திறன்சாரா ஊதியத்திற்காக ரூ.4,903.25 கோடியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து 25-9-2023 அன்று 1,755.43 கோடி ரூபாய், திறன்சாரா ஊதியம் வழங்குவதற்காக ஒன்றிய அரசால் ஒப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், எனினும் அனுமதிக்கப்பட்ட தொகையில் ரூ.418.23 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.1,337.20 கோடி, தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு, அதற்குப்பிறகான வாரங்களுக்கான ஊதியத்திற்கான ரூ.1,359.57 கோடி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், 20-10-2023 நிலவரப்படி, தமிழ்நாட்டில் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை ரூ.2,696.77 கோடி என்றும் முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த 17-10-2023 அன்று, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு தான் ஆய்வுப் பயணம் மேற்கொண்டபோது, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டுமென்று பொது மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும், இதேபோன்ற கோரிக்கை திருவண்ணாமலை மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போதும் தமக்கு வந்ததாகவும் தனது கடிதத்தில் முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மேற்குறிப்பிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,696.77 கோடி மொத்த ஊதிய நிலுவைக்கான தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதோடு, திறன்சாரா தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து கூடுதல் நிதி விடுவிக்கப்பட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

உலக அமைதிக்காக 15 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உ.பி இளைஞருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு.!

உலக அமைதிக்காக
15 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உ.பி இளைஞருக்கு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்

மதுரை,அக்.26-

உலக அமைதி மற்றும் குடிபோதை இல்லா உலகம் உருவாக்குவதற்காக 12 ஜோதிர் லிங்க தரிசனத்திற்காக 15,000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் உத்திரப்பிரதேச இளைஞருக்கு மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் சந்தன மாலை சால்வை மற்றும் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்

உத்திரபிரதேச மாநிலம் ஜோன்பூரை சேர்ந்தவர் வீரேந்திர குமார் மோரியா (வயது 32.) உலக அமைதிக்காகவும், போதை பொருள் இல்லா உலகம் உருவாகவும் வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 12 ஜோதி லிங்க தரிசனம் சைக்கிள் பயணத்தை செப்டம்பர் 8-ஆம் தேதி உத்திரப்பிரதேசம் ஜோன்பூரில் துவங்கினார்.

இவர் வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில், ஜார்கண்ட் பாபா போல்நாத் ஒடிசா ஜெகநாத் பூரி கோவில், ஸ்ரீசைலம், திருப்பதி சிதம்பரம் தஞ்சாவூர் ராமேஸ்வரம் வழியாக மதுரை வந்தார். மதுரை வந்த சைக்கிள் இளைஞருக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சந்தன மாலை பூங்கொத்து மற்றும் சால்வை அணிவித்து பாராட்டினார்.

இந்நிகழ்விற்கு மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு முன்னிலை வகித்தார். சைக்கிள் இளைஞர் இங்கிருந்த அவர் கோவை ஈஷா பவுண்டேஷன் சென்று சத்குரு ஜக்கி வாசுதேவை சந்தித்து ஆசி பெறுகிறார்.

அங்கிருந்து மும்பை,குஜராத்,மத்திய பிரதேசம்,டெல்லி வழியாக ஏப்ரல் மாதம் கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தியா ஆகிய பகுதிகளுக்கு செல்கிறார். இதுவரை 4000 கிலோமீட்டர் தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள அவர் மொத்தம் 15 ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன்னில் வீர அஞ்சலி செலுத்த ரத்த கையெழுத்திட்டு உறவுகளை அழைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்

தேவர் ஜெயந்தி விழாவிற்கு பசும்பொன்னில் வீர அஞ்சலி செலுத்த ரத்தம் கையெழுத்திட்டு உறவுகளை அழைத்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

மதுரை,அக்.26-

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு வீர அஞ்சலி செலுத்த முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கழக தொண்டர்களுடன் ரத்தத்தில் கையெழுத்து போட்டு உறவுகளை அழைத்தார். அதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட கழக தொண்டர்களும் ரத்தத்தில் கையெழுத்து போட்டனர்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் :-ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு ரத்த சொந்தங்களை அழைக்கும் விதமாக இரத்தத்தில் கையெழுத்திட்டு குருபூஜைக்கு அழைக்கும் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்திருப்பதாகவும்,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆதிதிராவிட மக்களை ஆலய பிரவேசம் செய்ய வைத்தார் என்றும்

தெய்வ திருமகனாருக்கு விரோதிகள் என்று யாரும் கிடையாது துரோகிகள் உண்டு. இந்திய தேசத்திற்காக, நாட்டு மக்களுக்காக, குற்ற பரம்பரைச் சட்டத்தை ஒழிப்பதற்காக நான்காயிரம் நாட்கள் அதாவது வாழ்நாளில் ஐந்தில் ஒரு பங்கு சிறைச்சாலையிலே காலம் கழித்தவர். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் திருமகனார்.

முக்குலத்தோர் சமுதாயத்தில் பிறந்தவர்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திடும் சட்டம் அது திருமணம் என்றாலும் சரி தனது தாய் தந்தை இறந்த சாவு வீடு என்றாலும் சரி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற சட்டம் குற்றப் பரம்பரை சட்டத்தை ராம்நாட்டில் ஒழித்து வீர வரலாறு படைத்துள்ளார் தெய்வத்திருமகனார்.

திருமகனாரின் ஜெயந்தி விழாவானது 28ஆம் தேதி ஆன்மீக விழாவாகவும் 29ஆம் தேதி அரசியல் விழாவாகவும் 30ஆம் தேதி அரசு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நந்தனத்தில் வெண்கல திருவுருவ சிலையை அமைத்தார்கள். அவரின் வழித்தோன்றலாக எடப்பாடியார் மதுரை கோரிப்பாளையம் மற்றும் உசிலம்பட்டியில் உள்ள தெய்வ திருமகனார் சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தெய்வீகத் திருமகனாரின் திருக்கோவிலுக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 13.5 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பசும்பொன்னில் உள்ள தெய்வீகத் திருமகனார் திருக்கோவிலுக்கு எடப்பாடியாரை நேரில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்த மேற்கு மாவட்ட கழகம் சார்பில் ரத்த சொந்தங்களை ரத்த கையெழுத்திட்டு அழைப்பு விடுக்கும் விதமாக இந்த ரத்த கையெழுத்து இயக்கத்தை துவக்கியுள்ளோம்.

ரத்தக் கையெழுத்து முகாம் இன்று (நேற்று) துவக்கப்பட்டுள்ளது அனைவரிடத்திலும் இந்த கையெழுத்தைப் பெற்று அவரிடத்தில் கொடுத்து நேரில் அழைப்பு விடுக்க இருக்கிறோம்.

சாதி சமய வேறுபாடு இன்றி அனைவரும் அந்த குருபூஜைக்கு வர வேண்டும் என்றார்.

நீட் தொடர்பான கேள்விக்கு:
போகாத ஊருக்கு வழி சொல்லுகிறார் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்..

செங்கல்லை காட்டிய உதயநிதி தற்போது முட்டையை காட்டுகிறாரே என்ற கேள்விக்கு

இரண்டரை ஆண்டுக் காலம் திமுக ஆட்சிக்கு மக்கள் கொடுத்திருக்கிற மதிப்பு முட்டை என்றார்.

இந்த ரத்த கையெழுத்து முகாமில் பேரவை இணை செயலாளர் இளங்கோவன், செயலாளர் வெற்றிவேல், சட்டமன்ற உறுப்பினர் தவசி தமிழரசன், அதிமுக தொண்டர்கள் மற்றும் பாரதிய பார்வர்ட் பிளாக் செயலாளர் முருகன் ஜி உள்ளிட்டோர் ரத்த கையெழுத்து போட்டு முகாமை துவக்கி வைத்தனர்.

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் தங்க கவசம் ஓப்படைக்கப்பட்டது

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு
தங்க கவசம் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் நேற்று ஓப்படைக்கப்பட்டது

மதுரை,அக்.26-

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந் தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.

இதையொட்டி தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.84 கோடி ரூபாய் மதிப்பில் 78 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பாக வழங்கினார். விழா முடிந்த பிறகு இந்த தங்க கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

இதனை வருடந்தோறும் அ.தி.மு.க பொருளாளர் மூலம் பெற்று தேவர் ஜெயந்தி விழாவின் போது பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி அண்ணா தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அதனை பெற்று தேவர் குருபூஜை விழாக் குழுவினரிடம் வழங்கி வந்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணியினரிடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவின்படி
மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து தங்க கவசம் எடுத்து அ.தி.மு.க. பொருளாளர்
திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்ககவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.


தேவர் ஜெயந்தி விழா முடிந்த பிறகு மீண்டும் இதே வங்கியில் தங்க கவசம் ஒப்படைக்கப்பட்டு லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், மணிகண்டன், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்.ராஜ்சத்யன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாவட்ட துணைச்செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மருத்துவரணி மாநில இணைச்செயலாளர் டாக்டர் சரவணன், வி.பி.ஆர்.செல்வகுமார், தலைமை கழக பேச்சாளர் எம்.எஸ்.கே.மல்லன், இலக்கிய அணி மாநில இணைச் செயலாளர் ஆர்.கே.ரமேஷ், 85 வது வட்டக்கழக செயலாளர் ஜெயக்குமார், டாக்டர் சின்னச்சாமி, மாஸ்.மணி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் லிங்கத்துரை இல்ல திருமண வரவேற்பு விழா

மதுரை கருப்பாயூரணியில் உள்ள எம்.பி திருமண மகாலில் உயர்நீதிமன்ற சிறப்பு அரசு வழக்கறிஞர் லிங்கத்துரை அவர்களின் இல்ல திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக கோ.தளபதி எம்.எல்.ஏ கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் 10-வது வட்டக்கழக செயலாளர் புதூர் வி.சி.மாதவன், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து கணேசன், ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் கிருஷ்ணபாண்டியன், ராதா கிருஷ்ணன், மற்றும் வட்டச் செயலாளர்கள் பவர் மணிகண்டன், கருப்புராஜ், முத்துமோகன், ராஜேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிலம்பாட்ட போட்டி முத்துராமன் ஜி தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான மாபெரும் சிலம்பாட்ட போட்டி காஞ்சிபுரம் சிலம்பாட்ட கழகத் தலைவரும், முன்னாள் அகில இந்திய பொதுச்செயலாளருமான முத்துராமன் ஜி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் கலைச்சுடர் எஸ்.ஆர்.லட்சுமணன் வரவேற்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் கே.ஜி. முரளி கிருஷ்ணன் சிலம்பாட்ட போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதில் சென்னை மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சீனிவாசன், செங்கல்பட்டு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் சென்னகேசவலு, மற்றும் செல்வம், வெங்கடேசன், வேலு, காஞ்சிபுரம் மாவட்ட ஆலோசகர் மோகனரங்கன் மற்றும் எழுத்தாளர் பாலகிருஷ்ணன், கார்த்திக், திரவியன், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் காங்கிரஸ் நிர்வாகிகள் வீரவாஞ்சிநாதன், செல்வராஜ் ஆகியோர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டம்

மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை அலுவலகத்தில் மதுரை மாநகர காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் வீரவாஞ்சிநாதன் ஆகியோர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மேலும் இந்நிகழ்வின் போது ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவிக்கு
பெருந்தலைவர், நடிகர் திலகம் அறக்கட்டளை சார்பாக
10 ஆயிரம் ரூபாயை செல்வராஜ் வழங்கினார்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மீர்பாஷா, கே.ஆர் சுரேஷ் பாபு, பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் போஸ், மூவேந்திரன் மாவட்ட துணை தலைவர்கள் டாக்டர் ரவிச்சந்திரன், மாரிக்கனி மற்றும் வார்டு தலைவர்கள் பாலமுருகன், ராஜராஜசோழன், குமரகுரு, சுப்பு, மனோகரன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் குருபிரசாத், முத்துக்குமார் லெனின், கனகராஜ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர் பெருந்தலைவர் நடிகர் திலகம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்….

”5 மாநில தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் அல்ல”: மல்லிகார்ஜுன கார்கே

''5 மாநில தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் அல்ல'': மல்லிகார்ஜுன கார்கே

கலபுர்கி: அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனல் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் செய்தியாளர்களைச் சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே, ”5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 5 மாநில தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள். பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது. அளித்த வாக்குறுதி எதையும் பாஜக நிறைவேற்றவில்லை.

ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். அந்த மாநிலங்களில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. மத்தியப் பிரதேசத்தில் பிரச்சினை உள்ளது. மத்தியப் பிரதேச மக்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு எதிராக உள்ளார்கள். எனவே, 5 மாநிலங்களிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி ஃபைனலாக இருக்குமா என கேட்கிறீர்கள். அவ்வாறு இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினைகள் வெவ்வேறாக இருக்கின்றன. அதன் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் வித்தியாசமானது. உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் அனைத்திலும் தான் போட்டியிடுவதாகக் கருத வேண்டும் என வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுப்பார். அவர் என்ன முதல்வராக ஆகப் போகிறாரா? எனவே, உள்ளூர் அளவில் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய தலைவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் தொடங்கும்” என தெரிவித்தார்.

வாயை திறந்தாலே பொய்! வெட்கமே இல்லையா? ஆளுநரை விளாசிய டி.ஆர்.பாலு!!

வாயை திறந்தாலே பொய்! வெட்கமே இல்லையா? ஆளுநரை விளாசிய டி.ஆர்.பாலு!!

திருச்சி: திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சுதந்திர போராட்ட தியாகிகள் மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது எனவும் காந்தியின் உள்ளிட்ட சுதந்திர போராட்ட தியாகி தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவராக மாற்றி இருப்பார்கள் எனவும் தியாகிகளை சாதி தலைவர்களாக அடைய படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர் எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கு திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி ஆர் பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நிறைந்த தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்குச் சட்டமுன்வடிவு உள்ளிட்ட பல மசோதாக்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.

அந்தச் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் ஆர்.என் ரவி, தன் பொறுப்பை நிறைவேற்றாமல், மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராகச் சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிராகவும் தொடர்ந்து பேசி வருவது, அரசியல் சாசனத்திற்கு அவர் செய்கின்ற துரோகம்!

ஆளுநர் பொறுப்பேற்பவர்கள் அரசியல்வாதி போல செயல்படவோ, பரப்புரைச் செய்யவோ மாட்டார்கள். அந்த மரபுக்கு மாறாக, அப்பட்டமான ஆர்எஸ்எஸ் பிரதிநிதியாக, ஒன்றிய பாஜக அரசின் ஊதுகுழலாக ஆளுநர் ஆர்.என் ரவி செயல்படுவதோடு, தமிழ்நாட்டின் பண்பாடு, வரலாறு, நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் உயர்வு இவற்றுக்கு எதிராகத் தொடர்ந்து உளறிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாடு என்று சொல்லாதீர்கள், தமிழகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று உளறினார். சமஸ்கிருதத்தை முன்வைத்து தமிழைப் பின் தள்ளினார். வேதங்களைப் பார்த்து திருக்குறள் எழுதப்பட்டதாகச் சொன்னார். எவ்வித ஆதாரமுமின்றி இப்படி பச்சைப் பொய்களைச் சொல்வதுடன், திராவிடம் என்ற கருத்தியல் பற்றி அவர் உளறிக் கொட்டுவது ஒவ்வொரு மேடையிலும் வழக்கமாக இருக்கிறது.

வெள்ளையரை எதிர்த்து வீரப் போர் புரிந்து, உயிரைத் துச்சமென நினைத்து, மரணத்தை முத்தமிட்ட மாவீரர்கள் மருது சகோதரர்களின் தியாகத்தை தமிழ்நாடு அரசு போற்றிவரும் நிலையில், மருதிருவர் விழா ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ரவி பச்சைப் பொய்களை கொட்டி கடை விரித்திருக்கிறார். தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைத் தேடிப் பார்த்தாராம். அவருக்கு எதுவுமே கிடைக்கவில்லையாம். தமிழ்நாடு அரசு தியாகிகளை மறந்துவிட்டதாம். பாஜக தலைவர்கள் எப்படி அன்றாடம் பொய் பேசி, வதந்தி பரப்புகிறார்களோ, அவர்களுக்குப் போட்டியாக, தமிழ்நாட்டின் பாஜக தலைவராக வேண்டும் என்ற ஆசையில் ஆளுநரும் பொய்யாகவே பேசுகிறார்.

பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், வீரன் அழகுமுத்துக்கோன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி, திருப்பூர் குமரன் போன்ற எண்ணற்ற தியாகிகளை என்றென்றும் மதித்துப் போற்றுகின்ற அரசாகத் தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. மருதுபாண்டியர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றை சித்தரிக்கும் ஊர்திகளை டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் சேர்க்க முடியாது என மறுத்து மத்திய பாஜக அரசு திருப்பி அனுப்பிய போது இந்த ஆளுநர் ரவி எங்கே போனார்? அந்த ஊர்திகளை எல்லாம் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் ஓரணியில் நின்று அந்த ஊர்திகளை வரவேற்ற காட்சி ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருந்த ரவி மறந்து விட்டரா? அலுவலகத்தில் தேசியக் கொடியையே ஏற்றாமல் இருந்த ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக பவனி வரும் ரவி தனது திருவாயை ஏன் அப்போது திறக்கவில்லை?

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, இந்திய விடுதலையின் வெள்ளிவிழா ஆண்டில் விடுதலைக்காகப் பாடுபட்ட தமிழ்நாட்டுத் தலைவர்களில் அன்றைக்கு உயிருடன் இருந்த மூத்த தலைவர்களின் வீடு தேடிச் சென்று அவர்களுக்கு தாமிரப் பட்டயத்தை வழங்கினார் கலைஞர். தமிழ்நாடு முழுவதும் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு மதிப்பூதியம் (பென்ஷன்) வழங்கப்பட்டது. தற்போது அந்த மதிப்பூதியம் மாதம் 20,000 உயர்த்தி வழங்குகிறது திராவிட மாடல் அரசு. அது மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத் தியாகிகளின் குடும்பத்தாருக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், மாதம் 10,000 ரூபாய் என்பதிலிருந்து 11,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த ஆகஸ்ட் 15 அன்று விடுதலை நாளில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றியபோது முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி இருக்கிறார்.

விடுதலை நாள் உரையில் இந்திய விடுதலையில் தமிழ்நாட்டின் பங்கு முதன்மையானது, முக்கியமானது என்பதை மிகத் தெளிவாகப் பட்டியலிட்டுக் குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர்.விடுதலை வீரர்களைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல.

விடுதலைப் போராட்ட வீரர்களை நாம் ஏன் இந்தளவுக்குப் போற்றுகிறோம் என்றால் தமிழ்நாடுதான் விடுதலைப் போராட்டத்துக்கான விதையை முதலில் விதைத்தது. விடுதலை தாகத்தில் விடுதலை வேகத்தில், நாட்டுப்பற்றில் நம் தமிழ் இனம் இந்தியாவில் உள்ள எந்த இனத்திற்கும் எந்தவிதத்திலும் குறைந்தது அல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் முழக்கங்கள் வீரம் விளைந்த தமிழ் மண்ணில் தோன்றியவைதான் என்பதை நாம் பெருமிதத்தோடு நினைவு கூரமுடியும் என்று விடுதலை நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் உரையாற்றினார்.

முதலமைச்சர் தமிழில் ஆற்றிய உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பை கேட்டு வாங்கிப் படித்திருந்தால் ஆளுநர் ரவிக்கு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர்களைப் பற்றிய அரிச்சுவடியாவது தெரிந்திருக்கும். ஆதாரமற்ற பொய்களை வாட்ஸ்அப் வதந்திகள் போல பரப்புவதையாவது நிறுத்திக் கொண்டிருக்கலாம். பாஜகவின் ஊதுகுழலாகப் பச்சைப் பொய்களை மட்டுமே பேசும் ஆளுநர் ரவியின் அடிவயிற்று எரிச்சல் திராவிடம் என்ற சொல். அந்த சொல் நிலத்தைக் குறிக்கும், இனத்தைக் குறிக்கும். மொழிக்குடும்பத்தைக் குறிக்கும். இந்தியா முழுவதும் திராவிட மாடல் பற்றிப் பேசப்படுகிறது.

அந்த வயிற்றெரிச்சலில், திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணத்தை எழுதிய இராபர்ட் கால்டுவெல் அதிகம் படிக்காதவர் என்று விமர்சித்திருக்கிறார். கால்டுவெல் என்ன படித்தார் என்பதைவிட எத்தகைய ஆராய்ச்சி மேற்கொண்டார், அதன் விளைவு என்ன என்பதைத்தான் கவனிக்க வேண்டும். ஒருவரின் செயலும் அதன் விளைவும்தான் மக்களிடம் செல்வாக்கைத் தரும். ஆளுநர் ரவியின் பார்வைப்படி, அவர் பெருந்தலைவர் காமராசரையும் கொச்சைப்படுத்தி இருக்கிறார்.

தமிழ்நாட்டில் PHd ஆய்வுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட தலைப்புகள் குறிப்பாக திராவிடத்தைப் பற்றிய தலைப்புகள் அவருக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பித்தம் ஏறச் செய்திருக்கிறது. விடுதலைப் போராட்டத்தைப் பற்றி ஆய்வுகள் இல்லையாம். மகாகவி பாரதியைப் பற்றி, வ.உசி. பற்றி, விடுதலைப்போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றி ஏராளமான ஆய்வுகள் உண்டு. பி.ஹெச்.டியாக மட்டுமல்ல, வெகுமக்கள் வாங்கிப் படிக்கக்கூடிய புத்தகங்களாகப் பல பதிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அதுபோலவே, திராவிட இயக்கப் படைப்புகள் – படைப்பாளிகள் பற்றிய ஆய்வுகளும் நிறைந்திருக்கின்றன. இதைக் கண்டு ஆளுநர் வயிறெரிந்திருக்கிறார்.

விடுதலை நாளை துக்க நாளாக அறிவித்தவர்களைக் கொண்டாடுகிறார்கள் என்று நீலிக்கண்ணீர் வடித்துள்ளார் ஆளுநர் ரவி. துக்க நாள் என்று தந்தை பெரியாரும், இன்ப நாள் என்று பேரறிஞர் அண்ணாவும் ஒரே இயக்கத்தில் தங்கள் உள்ளத்துக் கருத்துகளை வெளியிட்டார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் வரலாறு.

விடுதலையின் பயன் யாருக்குக் கிடைக்கும் என்பதை விளக்கிய பெரியார், ஆளுநர் ஆர்.என்.ரவி போன்ற பிற்போக்குவாத பத்தாம்பசலிகளின் கைகளில் அதிகாரம் சிக்கி நாசமாகும் என தொலைநோக்குப் பார்வையுடன் சொன்னார். அந்த தந்தைப் பெரியார்தான், மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது, இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ என்று பெயர் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், விடுதலை நாட்டின் முதல் பயங்கரவாதச் செயலாக, மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றது கொடியவன் கோட்சே கும்பல். அந்த கோட்சேவையும் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு நீதிமன்றக் கூண்டில் ஏறியவர்களையும் கொண்டாடுகிற ‘பண்பாட்டை’கடைப்பிடிக்கும் இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு மேடையிலும் திருவாய் மலர்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் கோப்புகளிலும், தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களிலும் கையெழுத்திடாமல் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ஊர்சுற்றித் திரியும் ஆளுநர் ரவிதான் அந்த குறளுக்குப் பொருத்தமானவர்! தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் சுகம் அனுபவித்துக் கொண்டு – தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்வதை கைவிட்டு- திருக்குறளுக்கு ஏற்ப நடக்க வேண்டும்! இல்லையென்றால் ஆளுநர் பதவியை விட்டு விலகி- அரசியல்வாதியாக- ஏன் பா.ஜ.க.வின் தலைவராகவோ- ஆர்.எஸ்.எஸ்.-ஸின் தலைவராக ஆகட்டும்! என சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES