Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 49)

செய்திகள்

All News

தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக கட்டிட இன்ஜினியர்களுக்கான ஐசிபிஎல் சீசன் 2 கிரிக்கெட் போட்டி

தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக கட்டிட இன்ஜினியர்களுக்கான ஐசிபிஎல் சீசன் 2 கிரிக்கெட் போட்டி மதுரையில் உள்ள மதுரா கல்லூரியில் மைதானத்தில் தொடங்கியது.

இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து கட்டிட இன்ஜினியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவை கட்டிட பொறியாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக ராஜேஷ் மற்றும்  இந்தியா சிமெண்ட்ஸ் மாநில மார்க்கெட்டிங் துறை தலைவர் இனியவன்,மண்டல மேலாளர் மதுசூதனன் மற்றும் விற்பனை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தினர்.

கட்டிட பொறியாளர்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என கட்டிட பொறியாளர்கள் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் விற்பனையாளர்கள் தங்களது விருப்பத்தை  தெரிவித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வி.பி.ஆர் செல்வகுமார் சால்வை வழங்கி வரவேற்றார்

மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமையில் அச்சம்பத்து பகுதியில் அளித்த வரவேற்பின் போது அதிமுக நிர்வாகி வி.பி.ஆர் செல்வகுமார் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.

இதில் டாக்டர் சின்னச்சாமி, மாஸ்.மணி, சோமசுந்தரம்,மணிகண்டபிரபு, சாமிநாதன், கார்த்திக்,டாக்டர் மலர்விழி, மலைச்செல்வி, சுமதி, திவ்யபாரதி, முத்துமணி, மங்கையர் திலகம், கௌசல்யா தேவி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திமுகவையும், திருமாவளவனையும் யாராலும் பிரிக்க முடியாது – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

திமுகவையும், திருமாவளவனையும் யாராலும் பிரிக்க முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சிறுகனூர் அருகே “வெல்லும் சனநாயகம்” மாநாடு விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது.

திருமாவளவனின் தேர்தல் அரசியல் “வெள்ளி விழா” திருமாவளவன் “மணிவிழா நிறைவு* இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி கால்கோள் விழா ” என முப்பெரும் விழாவாக இந்த மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி, தி.க தலைவர் வீரமணி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டினை வி.சி.க கொடியை ஏற்றி வைத்து திருமாவளவன் தொடக்கி வைத்தார். வி.சி.க மாநாட்டிற்காக சென்னையிலிருந்து சமத்துவ சுடர், கீழ் வெண்மணியிலிருந்து சகோதர சுடர், மேலளவிலிருந்து சுதந்திர சுடர் மாநாட்டு திடலுக்கு வந்தது. அதனை திருமாவளவன் வரவேற்றார். இந்த மாநாட்டில் பாலஸ்தீன மக்களுக்கும், ஈழ தமிழர்களுக்கும் ஆதரவு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். ஜாதி வாரிய கணக்கெடுப்பை நடந்திட வேண்டும். ஒப்புகை சீட்டுகளின் அடிப்படையில் தேர்தல் நடத்த வேண்டும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்,ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை திரும்பப் பெற வேண்டும். ஆளுநர் பதவியை ஒழித்திட வேண்டும். ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் கைவிட வேண்டும்.மேலும், ஆணவக் கொலைகளை தடுத்திட சட்டம் இயற்றிட வேண்டும் உள்ளிட்ட 33 தீர்மானங்கள்,நிறைவேற்றப்பட்டுள்ளன.அந்த தீர்மானங்கள் அனைத்தையும் திருமாவளவன் வாசித்தார்.

இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்…

சட்ட கல்லூரி மாணவராக திருமாவளவன் தி.மு.க வில் இருந்த காலம் முதலே அவரை தெரியும்.எனக்கும் தோலோடு தோலாக நிற்பவர் திருமாவளவன். பெரியாரையும் அம்பேத்கரையும் யாராலும் பிரிக்க முடியாதை போல் தான் தி.மு.க வையும் வி.சி.க வையும் பிரிக்க முடியாது.நமக்குள் இருப்பது அரசியலுக்கும் , தேர்தலுக்குமான உறவல்ல இது கொள்கை உறவு.

தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தோம்.ஆதி திராவிடர் பழங்குடியினர் ஆணையம் புதுப்பிக்கப்பட்டது. அயோத்திதாசர் சிலை திறக்கப்பட்டது. சமூக நீதி, சமத்துவம் கொண்ட ஆட்சியை இந்தியா முழுமைக்கும் அமைப்பது தான் நம் நோக்கம்.வெல்லும் ஜனநாயகம் என்று கூறினால் மட்டும் போதாது நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.சர்வாதிகார பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் அதை இந்தியா கூட்டணி கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து செய்ய வேண்டும்.

இங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மக்களால் நிறைவேற்றப்படும் என்பது உறுதி. இந்தியாவை கூட்டாட்சி நாடாக மாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.கூட்டாட்சியை குறிக்க நாம் பயன்படுத்தும் ஒன்றிய அரசு சொல்லை ஆங்கிலத்தில் கூறியவர் அம்பேத்கர் தான். தமிழ்நாட்டில் பா.ஜ.க என்பது பூஜ்யம் அதனால் தமிழ்நாட்டில் நாம் அவர்களை குறித்து கவலைப்பட தேவையில்லை. ஆனால் மற்ற பகுதிகளில் அவர்களை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தான் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணியை தனிப்பட்ட ஒரு கட்சிக்கு எதிரான கூட்டணி என சுருக்கி விட முடியாது. இந்தியாவின் பன்முக தன்மை, மதச்சார்பின்மை ஆகியவற்றை காக்க தான் இந்தியா கூடணி உருவாக்கப்பட்டுள்ளது.பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கூட்டாட்சி இருக்காது, நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்காது,மாநிலங்களை கார்ப்பரேஷன்களாக ஆகிவிடும்.ஜம்மு காஷ்மீர் போல் மற்ற எல்லா மாநிலங்களும் ஆகி விடும்.உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் ஆட்சியாக பா.ஜ.க ஆட்சி இருக்கிறது. இந்தியாவை சர்வாதிகார நாடா மாற்றி விட்டாலும் விடுவார்கள். மாநிலத்திற்கு மாநிலம் அரசியல் நிலை மாறுபடும் ஆனால் நடக்க உள்ளது நாடாளுமன்ற தேர்தல் அதில் பா.ஜ.க வை வீழ்த்த வேண்டும் என்கிற எண்ணத்தில் கூட்டணி கட்சிகள் செயல்பட வேண்டும்.பகைவர்களையும் சேர்த்து துரோகிகளையும் நாம் அடையாளம் காட்டி வீழ்த்த வேண்டும்.

இந்தியா கூட்டணியால் பா.ஜ.க விற்கு பயம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் பயத்தை இந்தியா கூட்டணி உணர்ந்தாக வேண்டும்.நாம் ஒற்றுமையாக இருந்தால் ஜனநாயகம் வெல்லும் அதை வரும் காலம் சொல்லும் என்றார்.

ஆழ்வார்புரம் பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் குடியரசு தின விழா

மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அறக்கட்டளை அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது..

மேலும் மாநில பொதுக்குழு உறுப்பினர் பூக்கடை கண்ணன், தமிழ்நாடு சிறுபான்மை பிரிவு மாநிலத்தலைவர் அசலாம் பாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் கார்மேகம், கருப்பாயூரணி மாரிக்கனி ஆகியோர் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பின்னர் ஏழை எளிய மக்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக பிறந்தநாள் கொண்டாடும் நிர்வாகிகள் நோய் நொடி இன்றி நீடூடி வாழ வேண்டும் என அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலில் சிறப்பு தீபாராதனை மற்றும் அர்ச்சனை செய்யப்பட்டது.

இவ்விழாவில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன் மீர்பாஷா, கே ஆர் சுரேஷ் பாபு, வீரவாஞ்சிநாதன், மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ் தொழிற்சங்க மாவட்ட தலைவர் பாலாஜி பஞ்சாயத்து ராஜ் மதுரை மாவட்ட தலைவர் முத்துக்குமார் மற்றும் கலை இலக்கிய பிரிவு கரண் மற்றும் வார்டு தலைவர்கள் கண்ணன், பாலமுருகன், ராஜராஜசோழன், கணேசன், மொக்கச்சாமி மனோகரன் நாகேந்திரன், கந்தவேல்,செல்வம் கோவிந்தராஜூ வர்த்தக அணி மாவட்ட தலைவர் வேல்பாண்டி மற்றும் அப்துல்லா இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் குருபிரசாத், முத்துக்குமார் கனகராஜ் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பாக குடியரசு தின விழா…!

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தின விழா மயிலாடுதுறை மாவட்டம் வள்ளாலகரம் ஊராட்சி குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில், விஜய் நர்சரி பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு, Rtn S. சத்யபால், Rtn கார்த்திகேயன், Rtn உதயகுமார் சார்பில் நோட் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்பு தலைவர் அய்யா சாமி செல்வம் தலைமையில் , செயலாளர் R.R. பாபு வரவேற்பு ஆற்றினார்.
மயிலாடுதுறை உதவி காவல் ஆய்வாளர் இராகவ சிவா தலைமையில் விழா நடைபெற்றது.


விழாவில் பசுமை நேச கரங்கள் அறக்கட்டளை சார்பில் மகத்தான பூமியை காக்கும் பணியில் ஞாயிறு தோறும் மரக்கன்றுகள் வைத்த 60,சமூக ஆர்வலர்களும் இயற்கை காவலர்
என்ற பட்டம் சூட்டி சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கப்பட்டது.

கூட்டமைப்பு மேலாண்மை குழு உறுப்பினர், பேராசிரியர்.துரை. குணசேகரன் சிறப்புரை ஆற்றினார்.
ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா ராபர்ட் ஜெயகரன் மற்றும்
ஒருங்கிணைப்பாளர் அன்பழகன், பொருளாளர் உதயகுமார்,
மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் மேலாண்மை குழு , செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அனைத்து நகர் நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


முடிவில் செய்தி தொடர்பாளர் G.B. கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார்.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக குடியரசு தின விழா…!

இந்திய குடியரசு தின விழாவை முன்னிட்டு மதுரை கீழமாசி வீதியில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டலம் சார்பாக, தெற்கு பகுதி தலைவர் செந்தில்நாதன் தலைமையில், மண்டல தலைவர் டி.எஸ் மைக்கேல் ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில அமைப்பு செயலாளர் தங்கராசு, இளைஞரணி மாவட்ட தலைவர் சில்வர் சிவா, மண்டல துணைத் தலைவர்கள் வாசுதேவன், கரண்சிங் மற்றும் சேது ராமச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா : டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பங்கேற்பு..!

மதுரை டி.ஆர்.ஓ காலனியில் செந்தமிழ் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் பிஸ்மில்லாகான் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் துணைத்தலைவரும், அதிமுக நிர்வாகியுமான டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் விஜயராஜா, செயலாளர் சாமுவேல் என்ற சரவணன், பொருளாளர் அசோக்குமார், துணைத்தலைவர் ராஜசேகரன், துணைச் செயலாளர்கள் விஜய் சீனிவாசன்,சண்முகம் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் குடியரசு தின விழா..!

மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள ஜெகம் சாரிட்டபிள் டிரஸ்ட் அலுவலகத்தில் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் ராணுவ வீரர் ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்விற்கு மேனேஜிங் டிரஸ்டி சோலை எஸ் பரமன் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை டிரஸ்டி திருஞானசம்பந்தம் வரவேற்று பேசினார்.டிரஸ்டிகள் முத்துலட்சுமி சுரேஷ் மற்றும் அபூர்வ கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள், ஏழை முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் டிரஸ்டி செந்தில்குமரன், பரந்தாமன், தேன்மொழி, சக்திவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில் 75 ஆவது குடியரசு தின விழா…

கரூர் நாடாளுமன்றம் அரவக்குறிச்சி வட்டாரத்தில், ஐயா சதாசிவம் அவர்களின் மகன் திரு. தமிழ்மணி அவர்கள் தலைமையிலும், அரவக்குறிச்சி வட்டாரம் திரு. காந்தி மற்றும் செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில், அரவக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த ஐயா சதாசிவம் அவர்களது மணிமண்டபத்தில் 75 ஆவது குடியரசு தின விழாவில் வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் முகமது அலி தேசிய கொடியேற்றி மரியாதை செய்தும், ஐயா சதாசிவம் அவர்களது திரு உருவ சிலைக்கு கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் திரு. பாலமுருகன் கந்தசாமி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தும் மற்றும் அரவக்குறிச்சி பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலைக்கு வழக்கறிஞர் திரு. முகம்மது பஜ்லுல் ஹக் அவர்கள் முன்னிலையில், அரவக்குறிச்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் திருமதி பஜிலா பானு அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கர் ஜெயந்தி விழா

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம், ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சி மற்றும் பெத்தானியாபுரம் நாயுடு சங்கம் இணைந்து மாமன்னர் திருமலை நாயக்கரின் 441 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பொது மருத்துவ முகாம், ஏழை, எளியோர்களுக்கு வேட்டி,சேலை மற்றும் மாணவ மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் எவர்கிரீன் ஜி.வி பாலமுருகன் தலைமை வகித்தார்.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தலைமை நிலைய செயலாளர் டி.எம் நாயுடு முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை இந்து கவரா நாயுடு அறக்கட்டளை தலைவர் பொம்மை பி.ரவிச்சந்திரன் நாயுடு மற்றும் ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் குணசேகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மருத்துவ முகாமை அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் துணைத் தலைவர் டாக்டர் சி.எம் கிஷோர் தொடங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் நிறுவன தலைவர் கே.சி திருமாறன் ஜி மற்றும் டாக்டர் சிட்டிபாபு ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

பின்னர் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் சிலைக்கும், மஹாலில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் தேனி கவுன்சிலர் கிருஷ்ணபிரபா, அய்யப்பன், அமைதிப்புயல் ரெங்கராஜ், பெத்தானியாபுரம் நாயுடு சங்க பொருளாளர் ரவிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

என்.டி.சி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சியின் முடிவில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் மாவட்ட இளைஞரணி தலைவர் பார்மா. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES