பாரத ரத்னா திரு.ராஜீவ்காந்தி அவர்களின் 80வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று (20.08.2024) சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டேன். மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கினேன். பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்கள் குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட ஊடக ஆளுமைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. விழாவில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவல்ல …
Read More »உபி-யில் சுட்டு கொல்ல பட்ட தலித் இளைஞர் அர்ஜுன் பாசியின் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல்…
உபி-யில் சுட்டு கொல்ல பட்ட தலித் இளைஞர் அர்ஜுன் பாசியின் குடும்பத்தினரை சந்தித்தார் ராகுல். தலித் இளைஞர் அர்ஜுன் பாசி பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவரது குடும்பத்தினர் தொடர்ந்து நீதி கேட்டு வருகின்றனர். இன்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி ரேபரேலியில் அர்ஜுன் பாசியை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தார். இந்த அநீதிக்கு எதிராக குரல் எழுப்பி தலித் குடும்பத்திற்கு நீதி வழங்குவோம் …
Read More »ஸ்ரீபெரும்புதூரை உருவாக்குவதே குறிக்கோள்-தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை
நிலையான ஸ்ரீபெரும்புதூர் முயற்சியானது ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத்தை அதன் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் கட்டமைப்பில் நிலையான வளர்ச்சி நடைமுறைகளை ஒருங்கிணைத்து மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.உள்ளூர் மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது, இந்த முயற்சி சமூக ஈடுபாட்டை வளர்க்கிறது மற்றும் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது. ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளுடன் (SDGs), குறிப்பாக SDG 13 (காலநிலை நடவடிக்கை) உடன் இணைவதன் மூலம், இந்த முயற்சி …
Read More »திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் சத்தியமூர்த்திபவனில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார்…
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 18) நடைபெற்ற விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். திமுக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி அவர்கள் இன்று (20.08.2024) சத்தியமூர்த்திபவனில் முத்தமிழறிஞர் கலைஞர் நாணயம் ஒன்றை நினைவு பரிசாக வழங்கினார். உடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இருந்தார்கள்.
Read More »கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட,விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட,விராலிமலை சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை துவங்கிவைத்து, ஐந்து நாட்கள் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும்,பேருராட்சிகளிலும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்த புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், அன்பிற்குரிய அண்ணன் திரு.KKசெல்லபாண்டியன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! இந்நிகழ்வை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து,வெற்றிகரமாக நடத்திக்கொடுத்த திமுக நகர,ஒன்றிய,பேரூராட்சி,ஊராட்சி செயலாளர்களுக்கும்,காங்கிரஸ் கட்சியின் வட்டார,நகர,பேரூராட்சி ,ஊராட்சி நிர்வாகிகளுக்கும்,இந்தியா கூட்டணி நிர்வாகிகளுக்கும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் …
Read More »பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சத்தியமூர்த்திபவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (20.08.2024) சென்னை, சத்தியமூர்த்திபவனில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தோம். பின்பு சமூக நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். பின்பு சத்தியமூர்த்தி பவனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமினை திறந்து வைத்தோம். நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.எம்.கிருஷ்ணசாமி அவர்கள், திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், தமிழ்நாடு …
Read More »நடமாடும் வாகனங்கள் சேவை….கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கான ஆணைகளையும் வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 200 நடமாடும் வாகனங்கள் சேவைகளை, முதல்-அமைச்சர் …
Read More »முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (20.08.2024) தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஏற்பாட்டில் சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தோம். பின்பு சமூக நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். அங்கிருக்கும் கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கொடியேற்றினோம். நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், …
Read More »பாரத ரத்னா திரு ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பெரும்புதூரில் அவரது நினைவிடமான தியாக பூமியில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மாரியாதை
இன்று (20.08.2024) இந்தியாவை உலக அரங்கில் தனித்துவமாய் காட்டிய இளம் பிரதமர் பாரத ரத்னா திரு ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பெரும்புதூரில் அவரது நினைவிடமான தியாக பூமியில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மாரியாதை செய்தோம். பின்பு நினைவிடத்தில் நுழைவு வாயில் அருகே அமைந்துள்ள இரும்பு பெண்மணி அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
Read More »ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சுக்கு கண்டனம்
ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சுக்கு கண்டனம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சுரேஷ்கோபி, முல்லைப் பெரியாறு அணை இடிந்தால் யார் பொறுப்பு ? நீதிமன்றம் பதில் சொல்லுமா ? அல்லது நீதிமன்றங்களில் இருந்து அத்தகைய முடிவுகளை பெறுபவர்கள் பொறுப்பேற்பார்களா ? என்று மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துகிற வகையில் விஷமத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். திரு.கு.செல்வப்பெருந்தகை தலைவர்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
Read More »