Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 36)

செய்திகள்

All News

மதுரையில் சாதனை படைத்த ஆகாஷ் எஜூகேஷனல் மாணவர்கள்..!

ஆகாஷ் எஜூகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் (ஏஇஎஸ்எல்) மதுரை மாணவன் கார்த்திக் அகர்வால் ஜேஇஇ மெயின்ஸ் 2024 தேர்வில் 99.91 சதவீதத்துடன் மதுரையில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார் ; 5 மாணவர்கள் 99 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றும்,
கார்த்திக் அகர்வால் வேதியியலில் 100 சதவிதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.
வி.எஸ் பிரணவ் என்ற மாணவர் இயற்பியலில் 100 சதவிதம் மதிப்பெண் பெற்றுள்ளார்

மற்ற 4 மாணவர்கள் 99 சதவிதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

தேர்வுத் தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (ஏஇஎஸ்எல்), கூட்டு நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) மெயின்ஸ் 2024 இரண்டாம் அமர்வில் மதுரையைச் சேர்ந்த மாணவனின் சிறப்பான சாதனையை பெருமையுடன் அறிவித்துள்ளது.
ஏஇஎஸ்எல்-இன் மாணவன் கார்த்திக் அகர்வால், 99.91 சதவிதத்துடன் மதுரையின் சிட்டி டாப்பராக வந்துள்ளார். முக்கிய பாடமான வேதியியலில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளார்.


கார்த்திக்கைத் தவிர மேலும் 5 மாணவர்கள் 99 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்கள் நிதிஷ் மணி செந்தில், வி எஸ் ப்ரணவ், சஞ்சய் ராம் செளந்தராஜன், கனியமுதன் எஸ் மற்றும் சாய் கிரிஷ் எஸ் ஆவர்.
மாணவர்களின் சிறப்பான செயல்திறன் அவர்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுவது மட்டுமின்றி, இந்தியாவின் மிகவும் சவாலான தேர்வில் ஒன்றான ஜேஇஇ-ல் கடினமான பாடங்களில் அவர்களின் ஆழமான பிடியை முன்னுக்குக் கொண்டுவருகிறது.

தேசிய தேர்வு முகமை 24.04.2024 அன்று அவர்களின் அசாதாரண சாதனைகளை வெளியிட்டு சிறப்பான ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ளது.
ஆகாஷின் புகழ்பெற்ற வகுப்பறைத் திட்டத்தில் சேர்ந்த மாணவர்கள், உலகளவில் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட IIT JEE ஐ வெல்வதற்கான கடுமையான பயணத்தை மேற்கொண்டனர்.

⅞அடிப்படைக் கருத்துகளைப் பயின்று தேர்ச்சி பெற்று, ஒழுக்கமான ஆய்வு முறையைக் கடைப்பிடித்தது மாணவர்களின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த மாணவர்கள், “எங்கள் வெற்றிக்கு நாங்கள் என்றும் ஆகாஷிற்கு கடமைப்பட்டுள்ளோம். ஆகாஷின் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட உள்ளடக்கம் மற்றும் பயிற்சி எங்களின் இந்த பயணத்தில் மிக முக்கிய பங்காற்றியுள்ளது. அவர்களின் அசைக்க முடியாத வழிகாட்டுதல் இல்லாமல், சுருக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏராளமான பாடங்களில் தேர்ச்சி பெறுவது ஒரு தீர்க்கமுடியாத சவாலாக இருந்திருக்கும்” எனக் கூறினார்.


ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) இன் முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் மிஸ்ரா, மாணவர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் பேசுகையில் “மாணவர்களின் குறிப்பிடத்தக்க செயல்திறனானது, விரிவான பயிற்சி மற்றும் புதுமையான கற்றல் தீர்வுகளை மாணவர்களுக்கு வழங்கி போட்டித் தேர்வுகளில் சிறந்து விளங்க அவர்களை தயார்படுத்துவதில் AESL இன் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும். அவர்களின் எதிர்கால முயற்சிகள் தொடர்ந்து வெற்றியடைய வாழ்த்துகிறோம்” என்றார்.

அழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கிய சமூகசேவகர் அண்ணாநகர் முத்துராமன்..!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை அண்ணாநகர் யானைக்குழாய் பகுதியில் கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு, மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் தலைமையில்
39-வது ஆண்டு மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது.

வைகை ஆற்றில் எழுந்தருளி விட்டு கள்ளழகர் வண்டியூருக்கு செல்லும் நாளான செவ்வாய்க்கிழமை அன்றும், மீண்டும் ராமராயர் மண்டகப்படியை நோக்கி செல்லும் நாளான புதன்கிழமை அன்றும் இரண்டு நாளாக புளியோதரை, லெமன் சாதம், தயிர் சாதம், பாயாசம், சுண்டல் பயறு, படாடாணி பயறு போன்ற பத்து வகையான உணவுகள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் பாத்திரக்கடை நாகராஜ், குணா அலி, நாகேந்திரன், தர்மர், பூமிராஜா, அழகர், ரத்தினம், இ.பி.கண்ணன், மகேஷ்குமார், அம்மா கண்ணன், சேது, பரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம் சார்பாக அன்னதானம் நீர்,மோர் வழங்கப்பட்டது

உலக பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு மதுரை கலெக்டர் அலுவலக சாலை திருவள்ளுவர் சிலை அருகே தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்கம், அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் மற்றும் சர்வதேச சட்ட உரிமைகள் மனித நீதி சபை சார்பில் மாபெரும் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தமிழ்நாடு உழைக்கும் செய்தியாளர்கள் சங்க மாநில தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமை தாங்கினார்.மாநில பொதுச் செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார்.அனைத்து மகளிர் மேம்பாட்டு கழக மாநில தலைவர் மஞ்சுளா தேவி,மாநில பொதுச் செயலாளர் கவிதா, துணை செயலாளர் கள்ளியம்மாள், மாவட்ட தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் வரவேற்றனர்.

விழா ஏற்பாடுகளை மாநில துணைத் தலைவர்கள் சமய செல்வம்,ஜான் ஜெயராமன், மாநில துணை செயலாளர்கள் பாண்டியன், முருகேசன், மாநில இணை செயலாளர்கள் ராஜேஸ் கண்ணன், கார்த்திக், மணிகண்ட ராஜா, அல்லா பக்ஸ், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மூர்த்தி, நாகேந்திரன், ஜான்சுந்தர், மணிகண்டன், சேவுகன்,மாநில செய்தி தொடர்பாளர்கள் அஜித் குமார், ராமசாமி உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

விழா முடிவில் மாநில பொருளாளர் புஷ்பராஜன் நன்றி கூறினார்.

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் சார்பாக நீர்,மோர் வழங்கப்பட்டது

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகரை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆப் இந்தியா குளோபல் மாநில தலைவர் டாக்டர் ஆர் பிச்சைவேல் தலைமையிலும்,
மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் எஸ்.மாணிக்கராஜ், மாநில இளைஞரணி தலைவர் எம்.ஜெ.ஜீவனா ரோஸ் ஆகியோர் ஆலோசனைப்படி, தல்லாகுளம் பகுதியில் மாபெரும் அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில இளைஞரணி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முருகன் சிறப்பாக செய்திருந்தார்.

இதில் அமைப்பின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து தமிழ்நாடு விஸ்வகர்மா மகாஜன மத்திய சங்கம் சார்பாக தீவிர பிரச்சாரம்..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கோ.புதூர் பேருந்து நிலையம் பகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்க தலைவர் தங்கராஜ், பொதுச்செயலாளர் எஸ் என் பொன்ராஜ், மாநில பொருளாளர் எஸ் வி.கே ஆறுமுகம், மதுரை மாவட்ட தலைவர் டி.ராஜேந்திரன் உட்பட மாநில,மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தனர்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மற்றும் வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோருக்கு பி.ஆர்.சி திருமுருகன் வரவேற்பு..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து பெத்தானியாபுரம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோரை 63-வது வட்டக் கழக பொருளாளர் மற்றும் மதுரை மண்டல அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் பி.ஆர்.சி திருமுருகன் ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

மதுரை மாநகர் வடக்கு 2-ஆம் பகுதி அதிமுக செயலாளர் வி.கணேசன் தலைமையில் வீடு,வீடாக சென்று வாக்கு சேகரிப்பு..!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நரிமேடு, கட்டபொம்மன் நகர், மருதுபாண்டியர் நகர்,பீ.பீ.குளம், காலாங்கரை போன்ற பகுதிகளில் பகுதி கழகச் செயலாளர் வி. கணேசன் தலைமையில் வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறும் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

இந்நிகழ்வில் பொறுப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ், அவைத்தலைவர் முருகன் வட்டச் செயலாளர்கள் பால்பாண்டி, உதயா, சுரேஷ், மகேந்திரன் மற்றும் முத்துக்குமார், எஸ்.ரவி, என்.கோபால் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில் வடக்கு 2-ஆம் பகுதி அதிமுக செயலாளர் வி.கணேசன் தலைமையில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பு..!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பிரச்சாரம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து நரிமேடு, பீ.பீ.குளம், கட்டபொம்மன் நகர், மருதுபாண்டியர் நகர், காலாங்கரை போன்ற பகுதிகளில் மாநகர் வடக்கு 2-ஆம் பகுதி கழகச் செயலாளர் வி.கணேசன் தலைமையில் வீடு,வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறும் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

இந்நிகழ்வில் பொறுப்பாளர் வழக்கறிஞர் சுரேஷ், அவைத்தலைவர் எஸ்.முருகன், வட்டச் செயலாளர்கள் பி.பால்பாண்டி, உதயா, சுரேஷ், மகேந்திரன் மற்றும் கே.எஸ்.முத்துக்குமார், எஸ்.ரவி,கோபால், எம்.மணிபிரபு உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ விற்கு 20-வது வார்டு வட்டக் கழக பொருளாளர் முரளி மாலை அணிவித்து வரவேற்பு..!

மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மக்களின் மருத்துவர் டாக்டர் சரவணனை ஆதரித்து 20- வது வார்டு விளாங்குடி பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரிப்பதற்காக வருகை தந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ அவர்களுக்கு மேற்கு 6-ஆம் பகுதி கழக செயலாளர் கே.ஆர்.சித்தன் தலைமையில் 20- வது வார்டு வட்டக் கழக பொருளாளர் முரளி ஆளுயர மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இந்நிகழ்வின் போது 20- வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகஜோதி சித்தன், வட்டக் கழகச் செயலாளர்கள் பி.என்.சுந்தர்ராஜன், சி.கேசவன் மற்றும் ஐ.டி.விங் கந்தன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

மதுரை ஆத்திகுளத்தில் பனியாரம் சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்..

டீ கடையில் பணியாரம் சுட்டு வாக்காளர்களை அசத்திய மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பா. சரவணன்

மதுரை, ஏப்ரல்.14-

மதுரை நாடாளுமன்ற டாக்டர் பா. சரவணன் ஆத்திகுளம், ரிசர்வ்லைன், இ.பி.காலனி, கண்ணேந்தல், மேனேந்தல் ஆகிய பகுதியில் தீவிரமாக வாக்குகளை சேகரித்தார் அப்போது ரிசர்வ்லைன் பகுதியில் ஒரு டீக்கடையில் தீவிர வாக்கு சேகரித்தார்.

அங்கிருந்த மூதாட்டி ஒருவர் டாக்டர் சரவணன் வெற்றி பெற வாழ்த்தினார், தொடர்ந்து அங்கிருந்து வாக்காள பெருமக்களை நலம் விசாரித்து இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார் .

அதனைத் தொடர்ந்து டீக்கடையில் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த பணியாளர்களிடம் நலம் விசாரித்து, தானே பணியாரம் சுட்டு,  இந்த பணியாரத்தை திருப்பி போடுவது போல மதுரையையும் திருப்பி போட வேண்டும் அதற்கு இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்காளர்களை அசத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய டாக்டர் பா. சரவணன் கூறுகையில்,

இன்றைக்கு மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சமையல் பொருட்கள் உயர்வு இவைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

 கடந்த முறை வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ட்விட்டர் அரசியலைத்தான் நடத்துகிறார், மக்களுக்கு நன்றி சொல்ல வரவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

 வெங்கடேசன் தனக்கு ஒதுக்கப்பட்ட 17 கோடி ரூபாய் நிதியில் வெறும் 4.25 கோடி தான் செலவு செய்துள்ளார், மீதி பணம் 13 கோடியை செலவு செய்யவில்லை அந்த பணம் இருந்திருந்தால் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்திருக்கலாம்.

 வெறும் கதை எழுதிவிட்டு, சினிமா நடிகர்களை கீழடிக்கு அழைத்துச் சென்று கேக் வெட்டுகிறார், ஆனால் அங்கே வந்த பிள்ளைகளை எல்லாம் வெயிலில் காக்கவைத்தார்.

தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது, மதுரை ரயில் நிலையத்தில் கூட போதைப் பொருள் பிடிபட்டபோது கம்யூனிஸ்ட் சேர்ந்த யாரும் குரல் கொடுக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வெங்கடேசன் கூட அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பவில்லை.

 ஆனால் நாடாளுமன்றத்தில் செந்தில் பாலாஜி கைதுக்கு கேள்வி எழுப்புகிறார் போராட்டம் செய்கிறார், மக்களுக்காக என்ன போராட்டம் செய்தார்? மக்களுக்காக உழைத்த லீலாவதியை படுகொலை செய்த திமுக கட்சியுடன் இன்றைக்கு கூட்டணி வைத்துள்ளார்கள். கம்யூனிஸ்ட் பாதை மாறிவிட்டது அன்று உண்டியல் குலுக்கினார்கள் இன்றைக்கு சூட்கேஸ் தாங்கி செல்கிறார்கள்.

எடப்பாடியார் மதுரைக்கு 5000 கோடி அளவில் திட்டங்களை செய்துள்ளார், அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுரையில் அதிக அளவில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கொண்டுவர திட்டங்களைத் தான் தற்போது முதலமைச்சர் ரிப்பன் வெட்டி திறக்கிறார்.

 இந்த 3 ஆண்டுகளில் புறநகர் பகுதிகளில் எந்த திட்டங்களும் கொண்டுவரவில்லை  தமிழகம் முழுவதும் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள், அதே போல் மதுரையில் மாற்றத்தை நீங்கள் உருவாக்கிட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் .நிச்சயம் உங்கள் குரலாக டெல்லியில் ஒலித்து உங்களுக்கு வேண்டிய திட்டங்களை பெற்றுத்தர நான் உழைப்பேன் என கூறினார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES