மதுரை மகபூபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், தேசிய மனித உரிமைகள் (சமூக நீதி கவுன்சில் இந்தியா) தமிழக பிரிவு சார்பாக, மதுரை மண்டலம் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் அனுமதி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகள் செய்த 30க்கும் மேற்பட்ட சமூக சேவகர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு மாநில தலைவர் பாரீஸ், மாநில பொதுச் செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேல் வரவேற்று பேசினார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக லயன்ஸ் கிளப் கவர்னர் கிரியேட்டிவ் ராதாகிருஷ்ணன், முன்னாள் டி.எஸ்.பி ராஜா முஹமது, மதுரை கோ.புதூர் காவல் நிலைய ஆய்வாளர் துரைப்பாண்டி, சமூக ஆர்வலர் லயன் சாதிக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் மாநில செயலாளர் முகமது ரிஸ்வான், சிக்கந்தர் ஷேக் நைனா முஹம்மது, சுரேஷ், இணைச் செயலாளர்கள் ரகுபதி, அகமது முஸ்தபா, ஜெகநாதன், மாநில துணைத்தலைவர்கள் மருத்துவர் கஜேந்திரன், துரைச்சாமி, திருமதி குருலட்சுமி கஜேந்திரன், ஆலோசகர் தசரதராமன், முகமது ஜியாத், ஷேக் அப்துல்காதர், ஜெயந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்