Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் (page 96)

செய்திகள்

All News

மதுரையில் காமராஜர் சிலைக்கு விசிக சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

கர்மவீரர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக மாலை அணிவித்து மரியாதை

காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விடுதலைச் சிறுத்தை கட்சி துணைப் பொதுச் செயலாளரும், அரசு வழக்கறிஞருமான வில்லவன் கோதை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கல்வி பொருளாதாரம் விழிப்புணர்வு இயக்கம் அய்யங்காளை,செல்லப்பாண்டி, ஜீவனா,வீரக்குமார்,பெரியவர் பங்கேற்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

போரிங் பவுடர் 2.5 லட்சத்துக்கு வாங்கிய கோடந்தூர் ஊராட்சி…

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கோடந்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் இனிதே நடந்து முடிந்ததது. கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்து அதிகாரிகள் அதற்கு தகுந்த பதில்களை அளித்தனர். ஒவ்வொருத்தரின் குறைகளையும் தனித்தனியாக கேட்டு பதில் அளித்தனர். கிராமத்தின் வரவு செலவு கணக்குகளை கிராம மக்கள் கேட்டு அறிந்தனர்.

இதுபோல எல்லா கிராம சபைகளிலும் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமது கிராமத்திற்கு என்ன வேண்டும் என்ற கருத்துக்களை ஒருங்கிணைந்து கேட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தெளிவாகிறது.

இந்த கிராம சபை கூட்டத்தில் பெரும்பாலான கிராம மக்கள் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தை சிறப்பித்தனர்.

கோடந்தூர் ஊராட்சியின் சாதனைகள்:

  1. போரிங் பவுடர் 2.5 லட்சத்துக்கு வாங்கிய கோடந்தூர் ஊராட்சி…
  2. வரவு செலவு கணக்கு இல்லாமல் கிராம சபை கூட்டம்…
  3. கடந்த ஆண்டு வரவு செலவு பழைய பிளக்ஸ் பேனருடன் கோடந்தூர் கிராம சபை கூட்டம்…
  4. ஒரு கையெழுத்துக்காக 80 வயது முதியவரை இருபது முறை அலைய வைத்த கோடந்தூர் பஞ்சாயத்து…
  5. தெருவிளக்கு இல்லாமல் கிராமங்களை இருளில் மூழ்கடித்து திருட்டுக்கு வழிவகுக்கும் கோடந்தூர் பஞ்சாயத்து…
  6. ஒவ்வொரு செயலும் உள்நோக்கம் கருதி செயல்படுவதால் கோடந்தூர் ஊராட்சியில் சலசலப்பு…
  7. தகவல் ஆணையமே! உத்தரவிட்டும் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை கொடுக்க மறுக்கும் கோடந்தூர் ஊராட்சி…
YouTube player

வெட்டுக்காட்டு வலசு இளைஞர் மோகன்ராஜ் என்பவர் கோடந்தூர் ஊராட்சியில் கலந்து கொண்டு தங்களது கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்குமாறு பல கேள்விகளை அதிகாரிகளிடம் கேட்டார்.

கிராம சபை கூட்டங்களில் இளைஞர்கள் கலந்துகொண்டு கிராம முன்னேற்றத்திற்காக என்னென்ன வேண்டும் என்று கேட்டு அறிந்தால் கிராமம் முன்னேறும்…

கிராமங்கள் முன்னேறும் போது தான்… நாடும் முன்னேறும்…

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம்.!!

அக்டோபர் 2 தேச பிதா மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் பிறந்த நாள் மற்றும் கர்ம வீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டு, மதுரை பெத்தானியாபுரத்தில் சிவசக்தி டிரஸ்ட் சார்பாக வறுமையில் வாடும் முதியோர்களுக்கு மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் விளாங்குடி சபா ராம் மருத்துவமனை டாக்டர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.டாக்டர் ராகவன், சிவக்குமார், ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் உதயசூரியன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.

மாபெரும் அன்னதானத்தை டாக்டர் பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அறக்கட்டளை அறங்காவலர்கள் பூமிராஜன், சோலை பரமன், முருகன் மற்றும் போஸ், திருஞான சம்பந்தம், இர்வின் பார்க்கர், முத்துலட்சுமி, சதிஷ்கண்ணா, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் காதக்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம்.!!

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம், காதக்கிணறு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சேகர் அவர்களின் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆரோக்கிய ஜெயந்தி ஸ்டாலின், ஊராட்சி செயலர் செல்லப்பா, மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர்,அங்கன்வாடி, ரேசன் கடை பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மாணவர்களுக்கு பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் The King Rashid international College Of Aeronactics (KR College)

மதுரையில் அழகப்பா பல்கலைக்கழகத்தினால் அங்கிகரிக்கப்பட்ட The King Rashid international College Of Aeronactics (KR College) www.kricollege.com கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது.

Aeronautical என்றாலே பணக்காரர்கள் மட்டும் தான் படிக்கமுடியும் என்ற எண்ணத்தை மாற்றி ஏழைகளும் படிக்கவேண்டும் என்றதே KRI COllege யின் நோக்கமாகும். ஏழை மாணவர்களையும் விமானத்துறையில் பணியில் அமர்த்த வேண்டும் அவர்களும் விமானத்துறைக்கு சம்பந்தமான படிப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல ஸ்காலர்ஷிப்புகளை அவர்கள் அவர்களுடைய அறக்கட்டளை சார்பாக வழங்கி பல மாணவர்களை உருவாக்கியுள்ளார்கள்.

அதை தொடர்ந்து இந்த ஆண்டு 2022 செப்டம்பர் மாதம் Tha King Rashid international College நிறுவனரும், இயக்குனருமான Dr. K.ஜாபர் ஷெரீப் AME., அவர்களால் டெல்லியில் லேர்ஜெட் ஏர்கிராஃப்ட் மற்றும் பெனன்ஸா ஏர் கிராஃப்ட், ஹெலிகாப்டர்களில் EASA (European Union Aviation Safety Agency) வினுடைய பயிற்சிகள் எப்படி இருக்கும் என அதைப்பற்றிய SEMINAR முழுவதும் 20 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக வழங்கினார்கள். இதில் பல மாணவர்கள் பயின்று பல சாதனைகள் செய்ய வேண்டும் என்பதற்காகவும், உலகளவில் நமது தமிழ்நாட்டின் மாணவர்களை கொண்டு செல்ல வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக உள்ளது. இங்கு பயிற்றுவிக்கும் பாடங்கள்:- Courses available: B.SC (Aircraft maintenance ), B.SC (Aviation) , BBA ( Airline and airport management), Airhostess training, Ground staff, flight dispatcher, Radio Telephony , Aircraft maintenance Engineering, Pilot training.

மதுரையில் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்த முன்னாள் கவுன்சிலர் பாலயோகி.!

நவராத்திரி 6ஆம் நாள் முன்னிட்டு மதுரை கான்பாளையம் பூந்தோட்ட தெருவில், பிரம்மா குமாரிகள் இராஜயோக தியான நிலையம் சார்பாக, முன்னாள் கவுன்சிலர் ஆர்.கே பாலயோகி மற்றும் சி.பா.அமுதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்விற்கு சகோதரி கோமதி தலைமை தாங்கினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா.!!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 95 வது பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி மன்றம் சார்பாக பூமார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலை முன்பு பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

மேலும் ஏழை,எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றத்தில் சிவாஜி கணேசன் திருவுருவ படம் வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் சிவாஜி திருப்பதி, மாவட்ட செயலாளர் சிவாஜி வெங்கிடு, ஆலோசகர் வி.எல் டால்டன் மற்றும் சஞ்சய்குமார், மாரியப்பன், வடிவேலு முருகன், முத்துக்குமார், சத்தியன், கண்டிராஜன், கௌதம், திருமலைச்சாமி, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தங்கமயில் ஜூவல்லரி சார்பாக மின்மினி வைர நகைகள் மதுரையில் அறிமுகம்.!!

தங்கமயில் ஜூவல்லரி அறிமுகம் செய்யும் மின்மினி – வைர நகைகளின் தொகுப்பு


தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட் நிறுவனம், வர்த்தகத்தில் பாரம்பரியம் மிக்க நிறுவனம். இந்த நிறுவனம், பாலு ஜூவல்லரி பெயரில் நகை வர்த்தகம் மேற்கொண்ட தங்கள் தந்தையார் பாலுசாமி செட்டியார் அவர்களின் வழிவழியாக உருவானது. இந்த ஆபரண வர்த்தகம், 1991-தின் தொடக்கத்தில் தங்கமயில் ஜூவல்லரி என்ற பெயரில் புதிய வடிவில் தங்கள் பயணத்தை தொடங்கியது. தொடங்கிய நாளிலிருந்து வியத்தகு வளர்ச்சி பெற்ற இந்த நிறுவனமானது, 2010-ல் ஒரு பப்ளிக் லிமிடெட் நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றது.

50-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், 1800ூ மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் 7,000 தயாரிப்புகள் உடன் நேரடியாக விற்பனை நிலையத்தில் அல்லது அவரவர் இடத்திலிருந்து ஆன்லைனில் எந்த வகை ஆபரணங்கள் வாங்க விரும்புபவர்களின் ஒன் ஸ்டாப் ~hப் ஆக தங்கமயில் ஜூவல்லரி விளங்குகிறது. இதன் ஆபரணங்கள், மிகச் சிறந்த பொற்கொல்லர்களின் கைவண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு மிளிர்கின்றன.
வாடிக்கையாளர் மனம் விரும்பும் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப ஆபரண வடிவமைப்புகளையும் நிறுவனம் உருவாக்கி தருகிறது.

தங்கள் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, நிறுவனமானது, மின்மினி என்ற பெயரில் ‘மின்மினி டைமண்ட் ஜூவல்லரி” என்னும் புதிய பிராண்ட்டை இப்பொழுது அறிமுகம் செய்கிறது.
அறிமுக நிகழ்ச்சியில் தங்கமயில் நிறுவனத்தின் இணை இயக்குநர்கள் திரு. டீய.ரமேஷ் மற்றும்
Nடீ.குமார் ஆகியோர் கூறியதாவது:

எங்களுடைய ‘மின்மினி டைமண்ட்; ஜூவல்லரி” என்பது மாறி வரும் வாடிக்கையாளர்களின் லைப் ஸ்டைலுக்கு தனி மிடுக்கையும், அழகையும் அளித்திடும். இவை தனித்தன்மை வாய்ந்த வடிவமைப்பு உடன் ஒவ்வொரு விசேஷத்திற்கும் ஏற்ற வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் செடோய் அமைப்பு சார்பாக உறுதி மொழி ஏற்பு விழா.!!

மதுரையை தலையிடமாக கொண்டு செயல்படும் பிரபல செடோய் அமைப்பின் சார்பாக மதுரை மேரியாட் ஹோட்டலில் செடோய் மதுரையின் உறுப்பினர்களான தொழிலதிபர்கள் மக்களுக்கு சிறந்த வர்த்தக சேவையாற்ற உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம்.பி தலைமை வகித்தார். செடோய் அமைப்பின் நிறுவனர் டாக்டர் எ.எஸ்.ரியாஸ், மதுரை மண்டல இயக்குனர் சி.கே.எம் செந்தில், தலைவர் அஸ்ரப் அலி, துணைத் தலைவர் முகமது இட்ரிஸ் மற்றும் செயலாளர் சரவண சுந்தரம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை முன்னின்று நடத்தி வைத்தனர்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிலதிபர்களும், தொழில் முனைவோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை அப்பல்லோ மருத்துவமனை சார்பாக இருதய நோய் விழிப்புணர்வு நடை பேரணி.!

உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரையில் அப்பல்லோ சிறப்பு மருத்துவமனை சார்பாக “நெஞ்சார நடந்துக்குவோம்” என்ற தலைப்பில் மாபெரும் இருதய நோய் விழிப்புணர்வு நடை பேரணி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அப்பல்லோ மருத்துவமனையில் இருதய நோய்க்கான சிகிச்சை பெற்று பலன் அடைந்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவமனையை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் இருதய நோய்க்கான காரணிகள் அதை முன்கூட்டி தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டவர்களுக்கு எவ்வாறு முதலுதவி அளிக்க வேண்டும் என்பது பற்றியும் விழிப்புணர்வை மருத்துவமனையை சேர்ந்த மூத்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் மற்றும் இருதயவியல் துறை மருத்துவ குழு மூத்த மருத்துவர் டாக்டர் விவேக் போஸ், டாக்டர் சுப்பு ராமகிருஷ்ணன், டாக்டர் கருப்பையா, டாக்டர் செந்தில்குமார் மற்றும் டாக்டர் மணிகண்டன் மற்றும் அவசர சிகிச்சை துறையின் மருத்துவர் டாக்டர் ஜூடு வினோத், டாக்டர் மதன் ராஜா ஆகியோர் பேசினர். மேலும் சிகிச்சை பயனாளர்கள் தங்களது சிகிச்சை பலனில் அனுபவத்தையும், மற்றும் அதை எதிர் கொள்வதற்கான நடைமுறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது மதுரை மண்டல முதன்மை செயல் அதிகாரி நீலகண்டன், மார்க்கெட்டிங் பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாக பொது மேலாளர் நிக்கில் திவாரி ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் நெஞ்சார நடந்துக்குவோம் என்பது இருதய நோய்க்கு மட்டுமில்லாமல் நம் வாழ்வியல் முறையிலும் மற்றும் நெஞ்சார்ந்தவர்களுக்கு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று மூளை நரம்பியல் துறை டாக்டர் மீனாட்சி சுந்தரம் வலியுறுத்தி பேசினார்‌.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES