Saturday , December 20 2025
Breaking News
Home / செய்திகள் (page 98)

செய்திகள்

All News

மதுரையில் பாஜக விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் மோடி கபடி லீக் போட்டி.!!

பாரதப் பிரதமரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் பாஜகவின் விளையாட்டு( ம) திறன் மேம்பாட்டு பிரிவின் மாவட்ட தலைவர் S.செந்தில்குமார் அவர்களின் தலைமையில் மோடி கபடி லீக் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்கற்ற பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்கப்பெருமாள் இறுதி சுற்றை துவங்கி வைத்து பரிசுகளை வழங்கினர்.

மேலும் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர் பாஜகவின் கூடுதல் பொறுப்பாளர் மகா சுசீந்திரன், கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம், கபடி கழக மாநில தலைவர் சோலை ராஜா விளையாட்டுப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர்கள் சுரேஷ்குமார், பிரகாஷ், மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், கராத்தே செல்வகுமார், வர்த்தகப்பிரிவு மாவட்ட செயலாளர் கோல்டு பிச்சை, திருப்பரங்குன்றம் மேற்கு மண்டல் தலைவர் இளையராஜா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஐராவதநல்லூரில் பாஜக வார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!

மதுரை ஐராவதநல்லூரில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பாஜக வார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!



பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72 வது பிறந்தநாள் முன்னிட்டு, மதுரை மாநகர் 41 வது வார்டு ஐராவதநல்லூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாவட்ட தலைவர் மகா சுசிந்திரன் ஆகியோர் உத்தரவுபடி அனுப்பானடி மண்டல் பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் ரோஜா ராணி அறிவுறுத்தலின்பேரில் கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு வார்டு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமை வகித்தார். அனுப்பானடி மண்டல் பொதுசெயலாளர் ராம்தாஸ் முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயற் குழு உறுப்பினர் கோதண்டராமன், கிளைத்தலைவர் முருகன் ஆகியோர் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்..

மாவட்ட கூட்டுறவு பிரிவு சார்பில் மாவட்ட துணைத்தலைவர் மீசை முருகேசன் சுமார் 200 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினார்.

விழாவில் மாவட்ட மீனவரணி துணைத்தலைவர்கள் கார்த்திக்குமார், அருண், மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் வாசு, மகளிரணி செயலாளர் அம்பிகா, மண்டல் துணைத் தலைவர் ராஜீவ் காந்தி, செயலாளர் முருகன், மண்டல் கூட்டுறவு பிரிவு நிர்வாகிகள் மகேசுவரன், ராம் ராஜ், வெங்கடேசன், கிளைத்தலைவர்கள் சுந்தரபாண்டி, பன்னீர்செல்வம், மோகன், கார்த்திக்ராஜா, தசானம், செந்தில்குமார், பங்கேற்றனர்.

மதுரை மாவட்டச் செய்தியாளர் கனகராஜ்

தமிழக முதல்வருக்கு பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் கோரிக்கை.!!

சென்னை,செப்.19:-

பிரவாசி புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பின் நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழ்நாடு காவல்துறை தலைவர் டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறையின் இயக்குனர் ஆகியோர்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்.

அந்தக் கோரிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:-

போலி ஏஜெண்டுகளால் ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு சுற்றுலா விசாவில் வேலைக்கு சென்று குடிவரவு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட 4000 இந்தியர்கள் இந்திய தூதரக உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் 2500 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மீதம் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்திர பிரதேஷ், மகாராஷ்டிரா, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 15 பேர் மட்டும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏராளமானார் போலி ஏஜென்ட்களின் நயவஞ்சக வார்த்தைகளை நம்பி சுற்றுலா விசாவில் வேலைக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. இருப்பினும் மலேசியா குடி வரவு அதிகாரிகள் இவர்களை தஸ்தா வேஜ்கள் அடிப்படையில் கண்டறிந்து கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே Not To Land என்ற முத்திரையிட்டு வந்த விமானத்திலேயே தாயகம் திருப்பி அனுப்பி வைக்கின்ற சம்பவங்கள் தினசரி நடந்தேறிக் கொண்டிருக்கின்றது.

அதே நேரத்தில் மலேசியாவில் விசா இல்லாமல் இருக்கும் நபர்களை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் ஒப்புதலின்படி அவர்களை சிறையில் அடைக்கும் பணிகளையும் குடிவரவு அதிகாரிகள் சிறப்பாக செய்து வருகின்றனர். மலேசிய அரசாங்கம் பொது மன்னிப்பு வாய்ப்பை ஜூலை, 2022 மாதத்துடன் நிறுத்திக் கொண்டதால் விசா இல்லாமல் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப ரூபாய் 60 ஆயிரம் (3100 ரிங்கிட்) அபராதமாக செலுத்தி நாடு திரும்ப வேண்டும் என்ற சூழ்நிலை தற்பொழுது உள்ளது.

இதையெல்லாம் நன்கு அறிந்த போலி ஏஜெண்டுகள் ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கிலும் மற்றவர்களின் வாழ்க்கையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கிலும் நயவஞ்சகத்துடன் பணத்தைப் பெற்றுக் கொண்டு இந்தியாவில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு விமான மார்க்கமாக அழைத்துச் சென்று பிறகு தாய்லாந்து நாட்டிலிருந்து மலேசியா நாட்டிற்கு சட்டவிரோதமாக ஊடுருவச் செய்யும் வேலைகளை செய்து வருவது வேடிக்கையாக உள்ளது. எல்லையை கடக்கும் பொழுது குடிவரவு அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். சட்டவிரோதமாக எல்லையை கடப்பவர்களுக்கு வாழ்நாள் சிறை என்ற ஆபத்தை உணராமல் செயல்படுவது வருத்தத்தை அளிக்கின்றது. சில நேரங்களில் சட்டவிரோதமாக எல்லையை கடக்கும் பொழுது அந்நிய சக்திகள் ஊடுருவல் என்று அந்நாட்டு ராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தும் அபாயமும் உள்ளது.

அந்நிய நாட்டுச் சிறையில் இந்தியன் மற்றும் தமிழன் மண்டியிட்டு கிடக்க கூடாது. அதனால் இச்செயலை செய்யும் போலி ஏஜெண்டுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது பற்றி விரிவான விழிப்புணர்வுகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் கொச்சையான வசனங்களின் மூலம் காங்கிரஸ் தலைவர் மற்றும் குடும்ப உறவுகள், பெண்கள் புகைப்படங்களை பதிவிட்டு அவமானப்படுத்தி வரும் கரூர் மாவட்ட பாஜக வினர்….

சமூக ஊடகங்களில் கொச்சையான வசனங்களின் மூலம் காங்கிரஸ் தலைவர் மற்றும் குடும்ப உறவுகள், பெண்கள் புகைப்படங்களை பதிவிட்டு அவமானப்படுத்தி வரும் கரூர் மாவட்ட பாஜக வினர்.

திரு ராகுல் காந்தி அவர்களின் சொந்த சகோதரி மகளுடன் தனிப்பட்ட குடும்ப விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை எடுத்து அதற்கு கொச்சையான வசனங்களை இணைத்து அருவருக்கத்தக்க வகையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு பாஜக வினர் பரப்பி வருகின்றனர்.

இதனைக் கண்டித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அதன் முக்கிய நிர்வாகிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் தெரிவித்து அத்தகைய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மதுரை கே.புதூர் பகுதியில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை மாநகர் பகுதிகளில், மாநில தலைவர் அண்ணாமலை ஆணைக்கினங்க, பாஜக மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் ஆலோசனைப்படி, பேராசிரியர் ராம.சீனிவாசன் மற்றும் புதூர் மண்டல் பொறுப்பாளர் மற்றும் கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் பாஸ்கரன் ஜி ஆகியோர் வழிகாட்டுதலின்படியும், மண்டல் தலைவர் மாணிக்கம் தலைமையில்
கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம்,நீர் மோர் பந்தல், இலவச வேட்டி, சேலை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மாணிக்கம், மாவட்ட துணைத் தலைவர் ஜெயவேல், ஜோதி மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுரேஷ், மணிவண்ணன், மீனா,ராஜ்குமார், ஜனார்த்தனன், ராம்குமார், ஹரி, துரைமாறன், ஆதிஸ்வரன், கந்தன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

நண்பனுடன் மீண்டும் மாணவனாகிய நிகழ்வு…

இன்று கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் BSP பள்ளிக்கூடத்தில் Lead கான்ஃபரன்ஸ் நடந்தது. கூட்டத்தில் மாணவர்களுக்கான அறிவுரையும் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து பி எஸ் பி ஸ்கூல் மேனேஜ்மென்ட் நிறைவேற்றியது.

நண்பனின் மகனும் மகளும் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்களது தந்தை எனது நண்பன் முஸ்தாக்… வித்தியாசமாக எண்ணம் தோன்றியது போல இந்த பள்ளிக்கு… ஏன் பெற்றோர்களின் விருப்பத்தை தெரிந்து அதை நிறைவேற்ற கூடாது…? பள்ளியின் நிர்வாகம் பெற்றோர்களை தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்குமாறு வாட்ஸ் அப் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்…. அதற்கு எனது நண்பன் முஸ்தாக், மீண்டும் தனது நண்பர்களுடன் மாணவனாக வேண்டும் என்று அவரது ஆசையை சொல்லி இருக்கிறார்… பள்ளி நிர்வாகம் உடனடியாக அவனது நண்பர்களிடம் பேசி ஒரு நண்பனை வரவழைத்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து மற்ற பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் திகைக்க வைத்தனர்…

இது போன்ற வித்தியாசமான மகிழ்ச்சியான செய்திகளை பார்க்கும்பொழுது நாம் அனைவரும் பின்னோக்கி சென்று நமது படிக்கும் காலங்களை நினைக்க வைக்கிறது….

இளைஞர் குரல் சார்பாக பி எஸ் பி பள்ளியின் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– இளைஞர் குரல் பாலமுருகன்.

YouTube player

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் பாஜக விவசாய அணி சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகர் விவசாய அணி சார்பாக அதன் மாநகர் தலைவர் பி.முத்துப்பாண்டி அவர்களின் தலைமையில் துவரிமான், கீழமாத்தூர், காமாட்சிபுரம், மேலமாத்தூர் போன்ற கிராமங்களில் கட்சி கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

மேலும் காமாட்சிபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்து,பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வின் போது 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை மற்றும் பயன் தரும் மரக்கன்றுகளை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி வழங்கி பொதுமக்களிடையே மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கி சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்வில் விவசாய அணி மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் துரைபாஸ்கர், மாநில திட்ட பொறுப்பாளர் அழகுராஜா, மண்டல் தலைவர் கண்ணன், காமாட்சிபுரம் கிளை தலைவர் பாலாஜி, விவசாய அணி பரவை மண்டல் தலைவர் சந்திரசேகர் உள்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் இனிப்புகளை வழங்கியும், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.

அந்த வகையில் மதுரை மாவட்டம் சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகரில் உள்ள ஸ்ரீ வனகாளியம்மன் மற்றும் ஸ்ரீ கொண்டையம்மன் கோவிலில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பெயரில் பழங்குடியினர் கலாச்சாரப்படி சிறப்பு வழிபாடு ,பாஜக பழங்குடியினர் அணி மாவட்ட தலைவர் எம்.கே.முருகன் தலைமையில் நடைபெற்றது.

மேலும் பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் எஸ்.டி.அணி மாவட்ட துணைத்தலைவர் சின்னச்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்கிருஷ்ணன்,மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

மதுரை பழங்காநத்தம் ‌நேருநகரில் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில் நடந்த மாபெரும் அன்னதானத்தை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.

மதுரை பழங்காநத்தம் ‌நேருநகரில் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில் நடந்த மாபெரும் அன்னதானத்தை மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் மண்டல் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் தலைமையில், பழங்காநத்தம் அருகே உள்ள நேருநகர் பகுதியில் நடந்த மாபெரும் அன்னதானத்தை பாஜக மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் தொடங்கி வைத்தார்.

இவ்விழாவிற்கு பாஜக மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி துணைத் தலைவர் மாரி.சக்கரவர்த்தி, பழங்காநத்தம் மண்டல் தலைவர் மணிவண்ணன், ஐ.டி.விங் மாவட்ட செயலாளர் ஆர்.கே.பிரகாஷ், 62-வது வார்டு தலைவர் முனைவர் பிச்சைவேல், 74-வது வார்டு தலைவர் முருகேச பாண்டியன், 68-வது வார்டு தலைவர் சசிக்குமார், 72-வது வார்டு தலைவர் வயக்காட்டு சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்துக்கள் குறித்து தரக்குறைவாக பேசிய ஆ.ராசாவுக்கு பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி கடும் கண்டனம்!!

இந்துக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

திமுக துணை பொதுச்செயலாளரும் எம்பியுமான ஆ.ராசா கடந்த 6 ஆம் தேதி அன்று சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது, நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால்.. இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால் ..பெர்சியனாக இல்லாமல் இருந்தால்.. நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது.
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். இப்போது சொல்லுங்கள் எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? இந்த கேள்வியை உரக்கச் சொன்னால்தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்று இந்துக்கள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்துகின்ற வகையில் பேசினார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக விவசாய அணி மதுரை மாநகர் தலைவர் முத்துப்பாண்டி அவர்கள் ஆ.ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்:- இந்துக்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசிய ஆ.ராசா மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆ.ராசா உடனடியாக பதவி விலக வேண்டும். பதவி விலகாவிட்டால் மதுரை மாநகர் விவசாய அணி சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை பாஜக விவசாய அணி சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES