Tuesday , January 27 2026
Breaking News
Home / செய்திகள் (page 104)

செய்திகள்

All News

இந்தியாவில் சிறந்த தரவரிசையில் உள்ள வணிகப் பள்ளியான IBS, MBA/PGPM திட்டத்தில் சேர்வதற்காக IBSAT 2022 கிட் மதுரையில் அறிமுகம்

இந்தியாவில் சிறந்த தரவரிசையில் உள்ள வணிகப் பள்ளியான IBS, MBA/PGPM திட்டத்தில் சேர்வதற்காக IBSAT 2022 கிட்டை அறிமுகப்படுத்தியது.

மதுரையில் நடந்த நிகழ்ச்சியின் போது டாக்டர் மனிஷா சிங் & பேராசிரியர் ஆனந்த் சீனிவாசன் ஆகியோர் அனைத்து IBS வளாகங்களைப் பற்றிய விரிவான பொது மற்றும் சேர்க்கை தொடர்பான தகவல்களைக் கொண்ட கருவியை முறையாக வெளியிட்டனர்.

வருங்கால மாணவர்கள், பெற்றோர்கள், பயிற்சி மையங்களின் தலைவர்கள், பிற புகழ்பெற்ற நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஐபிஎஸ் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய பெரிய கூட்டத்தில் உரையாற்றினார்.


அவரது உரையில், அவர் இந்திய மேலாண்மை கல்வி முறை பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார் மற்றும் IBS இல் வழங்கப்படும் படிப்புகள் பற்றிய காட்சிகளையும் வழங்கினார். “எம்பிஏ/பிஜிபிஎம் திட்டம் 100% கேஸ் அடிப்படையிலான கற்றல், அதிநவீன உள்கட்டமைப்பு, நடைமுறை திறன்களைப் பெறுவதில் முக்கியத்துவம், வலுவான தொழில் இடைமுகத்தை நிறுவுதல், இதன் விளைவாக அனைத்து எம்பிஏ/பிஜிபிஎம் பட்டதாரிகளுக்கும் சிறந்த இறுதி வேலை வாய்ப்புகளைப் பெறுதல் ஆகியவற்றுடன் தனித்துவமானது” என்று கூறினார்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் – மதுரையில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி முன்னிலையில் அரங்கேற்றம்

                                    

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அரங்கேற்றப்பட்டு வரும் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் இசையார்ந்த நாட்டிய நாடகத்தை, சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த வாரம் தொடங்கி வைத்தார் .

இதன் தொடர்ச்சியாக மதுரை, ராஜா முத்தையா மன்றத்தில் இன்று அரங்கேற்றப்பட்டது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நாட்டிய நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

இதனை கலை பண்பாட்டுத்துறை மூலம் ஓவிஎம் தியேட்டர்ஸ் நிறுவனம் அரங்கேற்றியது . இதில் 62 கலைஞர்கள் பங்கேற்றனர்.ஆங்கிலேயர்களுடனான போராட்டத்தில் ஜான்சி ராணி தோற்றார், ஆனால் வேலு நாச்சியார் வெற்றி கண்டார். அவரது மறைக்கப்பட்ட வரலாறை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறோம் என்ற வகையில் நாடகம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 1 மணி நேரம் நடந்த நாடகத்தை அமைச்சர்கள் கண்டு ரசித்தனர்.

பின்னர் நாடகத்தில் பங்கேற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததுடன் அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.தொடர்ந்து, வேலுநாச்சியார் நாட்டிய நாடகத்தின் இயக்குநர் ஸ்ரீராம் சர்மாவுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

இந்த நிகழ்வில் எம் எல் ஏக்கள் பூமிநாதன்,வெங்கடேசன், மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன்வசந்த்,மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்,மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல்,மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங்,மதுரை மாநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பொன்முத்துராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் பாஜக விவசாய அணி சார்பாக பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் ஜி, விவசாய அணி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையிலும், மாவட்ட பொதுச்செயலாளர் துரைபாஸ்கர் முன்னிலையிலும், அழகுராஜா ஏற்பாட்டில், மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் வீடு,வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து

மத்திய அரசின் திட்டங்களான பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் சந்தை திட்டம், மண்வள அட்டை, பிரதமரின் வேம்பு கலந்த யூரியா திட்டம், பிரதமரின் விவசாயிகளுக்கான ரூபாய் 6000 வழங்கும் திட்டம், கிசான் பயிர் காப்பீட்டு திட்டம் போன்ற நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட செயலாளர் சுரேஷ் விளக்கி பேசினார்.

மேலும் இந்நிகழ்வின் போது 150க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை மாநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்கள் வழங்கினார்.

பொய்க்காலில் நின்று இரண்டு மணி நேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மதுரை கௌசிகா நோபல் உலக சாதனை.!

75 வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மேலமடை பகுதியை சேர்ந்த தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாண்டியராஜன், தனலட்சுமி ஆகியோரின் மகள் ரிங் ரோட்டில் உள்ள நாராயணா இ-டெக்னோ பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி கௌசிகா (வயது 11) மூன்று அடி பொய்க்காலில் நின்று கொண்டு இடைவிடாது இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார்.

இந்த சிறிய வயதில் நோபல் உலக சாதனை படைத்த அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

பொய்க்காலில் நின்று மூன்று மணிநேரம் இடைவிடாது சிலம்பம் சுற்றி மதுரை கௌசிகா நோபல் உலக சாதனை.!

75 வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இந்துமதி மற்றும் பி.டி.ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் தனவேலன் ஆகியோர் முன்னிலையிலும், 18-ஆம் படி சிலம்பம் அகாடமியின் தலைமை ஆசான் சிலம்பு செல்வன் மாரிமுத்து மற்றும் நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் புரொபஷனல் எடிட்டர் தியாகராஜன் அவர்களின் தலைமையிலும் நோபல் உலக சாதனை முயற்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மேலமடை பகுதியை சேர்ந்த தேமுதிக மாநகர் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாண்டியராஜன், தனலட்சுமி ஆகியோரின் மகள் ரிங் ரோட்டில் உள்ள நாராயணா இ-டெக்னோ பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் மாணவி கௌசிகா (வயது 11) மூன்று அடி பொய்க்காலில் நின்று கொண்டு இடைவிடாது இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்தார்.

இந்த சிறிய வயதில் நோபல் உலக சாதனை படைத்த அவருக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பாக கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது

தமிழக முதல்வர் அறிவித்துள்ள காலை உணவுத் திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும்.

குழந்தைகளின் நலன் கருதி சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் முறையான கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல 6750 அகவிலைப்படி உடன் கூடிய ஓய்வு விதமாக வழங்கிட வேண்டும்.

இதுவரையிலும் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு பெறாத சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 வயதில் இருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் கௌரிஅம்மாள்,மாவட்ட பொருளாளர் முருகேஸ்வரி, அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

மதுரை சிந்தாமணியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக கிருஷ்ண ஜெயந்தி விழா.!

மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் ஸ்தாபன தினத்தை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாநில தலைவர் கதிர்வேலு தலைமை வகித்தார். ராமசுப்பிரமணியன், சக்திவேல், மணிகண்டன் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் கோட்டை பொறுப்பாளர் பாண்டியன், மதுரை மாவட்ட தலைவர் ஜெயகார்த்திக், துணைத்தலைவர் தங்கம் வெங்கடேஷ், செயலாளர் தங்கராமு, இணைச்செயலாளர் அற்புதராஜ், மாவட்ட பொறுப்பாளர் பெரியமருது, பங்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் சங்கிலி முருகன் மற்றும் பொறுப்பாளர்கள் சதீஸ்கண்ணன், பிரபாகரன், ஆனந்தராஜ், பார்த்திபன்,முத்து கருப்பசாமி,சுந்தரபாண்டி, வீரபாண்டி,சதீஸ்,சபரிநாதன், சோனைமுத்து, செல்லப்பாண்டி, முத்துப்பாண்டி, நாகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேனுக்கு தேசத்தின் அடையாள விருது.!

சென்னை காஸ்மோ பாலிடீன் கிளப்பில் நீதியின் குரல் அமைப்பின் தலைவர் சி ஆர் பாஸ்கரன் தலைமையில் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட திரைப்பட நடிகர் எஸ் வி சேகர், முன்னாள் காவல்துறை இணை ஆணையாளர் கருணாநிதி மற்றும் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் ஆகியோர், புலம்பெயர்ந்த இந்தியர்கள் மீட்பு மற்றும் நல அமைப்பு (mirawo) நிறுவனர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுக்கு வெளிநாட்டு சிறையில் சிக்கிய தவித்த அதிகமான இந்தியர்களை மீட்டு தாயகம் திரும்ப உதவி செய்தமைக்காக நீதியின் குரல் சார்பாக “தேசத்தின் அடையாள விருது” வழங்கி கௌரவித்தனர்.

மதுரை மாவட்டம் காமாட்சிபுரத்தில் பாஜக மாநகர் விவசாய அணி சார்பாக கிராம பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டம் குறித்து விளக்கம் 

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே நாகராஜன்  அவர்களின் அறிவுறுத்தலின்படி,மதுரை மாநகர் விவசாய அணி தலைவர்  முத்துப்பாண்டி அவர்களின்  தலைமையில், மாவட்ட  பொதுச்செயலாளர் துரைபாஸ்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் காந்திராஜன் ஆகியோர் முன்னிலையில், மேலமாத்தூர் ஊராட்சி, காமாட்சிபுரம் கிராமத்தில் வீடு, வீடாக சென்று  பொதுமக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டமான பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் சந்தை திட்டம், பிரதமரின் விவசாயிகளுக்கான ரூபாய் 6000 நிதி உதவி வழங்கும் திட்டம், மண்வள அட்டை, வேம்பு கலந்த யூரியா திட்டம், கிசான் பயிர் காப்பீடு வழங்கும் திட்டம் போன்ற  நலத்திட்ட உதவிகள் குறித்து கிராம மக்களுக்கு மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் எடுத்து கூறி விளக்கி பேசினார்.

மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி  வழங்கினார். இந்நிகழ்வின் போது பாஜக கிளை தலைவர் பாலாஜி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

அழகர் கோவில் சாலையை பசுமையாக்கும் முயற்சியில் இளம் மக்கள் இயக்கத்தினர்.!

மதுரையில் இருந்து அழகர் கோவில் செல்லும் சாலை முன்னர் மரங்களால் பசுமையாக காட்சியளிக்கும். தற்போது சாலை விரிவாக்கத்திற்காக சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் அனைத்தையும் வெட்டி வீழ்த்தி விட்டனர்.

தற்பொழுது மரங்களே இல்லாத அழகர்கோவில் சாலை வெறிச்சோடி காட்சியளிக்கிறது. யாராவது மரக்கன்றுகளை நட்டு வைத்து மீண்டும் இப்பகுதியை பசுமையாக மாட்டார்களா என அழகர் கோவில் செல்லும்போது மக்கள் அனைவருக்கும் மனதில் ஒரு கேள்வி எழும். அதை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் இளம் மக்கள் இயக்க நிர்வாகிகள்.!

இளம் மக்கள் இயக்கம் மற்றும் பார்வை பவுண்டேஷன் இணைந்து மதுரை மாவட்டம் கடச்சனேந்தல், அழகர்கோவில் சாலையில் மரம் நடும் நிகழ்ச்சியை இளம் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் சோழன் அ.குபேந்திரன் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில், இளம் மக்கள் இயக்கமும், பார்வை பவுண்டேசனும் இணைந்து இயற்கையை பேணி பாதுகாக்கும் விதமாக இதுவரை 48 ஆயிரம் மரக்கன்றுகள் மதுரை மாநகரின் சாலைகளில் ஓரங்களில் நடப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நட்டு வைப்பதோடு தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகிறோம். மரத்திற்குள் மதுரை, நம் பெயரில் ஒரு மரம் என்ற கொள்கையின்படி நமது இந்திய 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, எங்களது இயக்கத்தின் சார்பாக 75 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வைத்து அதை பராமரிப்பதென முடிவெடுத்துள்ளோம். அந்த வகையில் கடச்சனேந்தல் முதல் அழகர் கோவில் வரை சாலையோரங்களில் மரங்களை நடுவதற்கு முடிவு செய்துள்ளோம். ஒரு மனிதன் 10 மரங்களாவது வளர்க்க வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயாவின் கொள்கையை பின்பற்றி, எங்கள் இயக்கத்தின் சார்பாக மரத்தை நட்டு வைத்து அதை முறைப்படி பராமரித்து வருகிறோம். இந்தப் பகுதிகளை பசுமையாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் எனக் கூறினார். இந்நிகழ்வில் செய்தி தொடர்பாளர் அன்பு மற்றும் மேற்கு ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவ,மாணவியர், லதா மாதவன் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES