மதுரையில் சுட்டெரித்து வரும் கோடை வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைப்படி,கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு மேற்கு 6-ஆம் பகுதி கழகத்தின் சார்பாக பகுதி செயலாளர் விளாங்குடி கே.ஆர்.சித்தன் ஏற்பாட்டில் நீர்,மோர்,தர்பூசணி பழங்கள் வெள்ளரிக்காய் ஆகியவை வழங்கப்பட்டது.
வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன்,மலைச்சாமி, நாராயணன், விஜயகுமார், ஜஸ்டஸ் ராஜா, இளைஞரணி எஸ்.கண்ணன்,ஐ.டி விங் மாவட்ட துணைச் செயலாளர் கந்தன் மற்றும் கூடல்நகர் பிரேம்குமார், கார்த்தி, 20 வது வார்டு நிர்வாகிகள் முரளி, ஜெயசித்ரபாண்டி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை ஆழ்வார்புரத்தில் உள்ள சுப்பராயலு நினைவு நடுநிலைப் பள்ளியில், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் வழியில் நண்பர்கள் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
சிலம்புக்கலை, ஓவியப்பயிற்சி, யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
5-வயது முதல் 13-வயது வரை உள்ள குழந்தைகள் இருபாலர்களும் கலந்து கொள்ளலாம் எனவும், பயிற்சி முடிந்தவுடன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும் என அமைப்பின் தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார்.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக மே 3 உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில தலைவர் சரவணன் வழிகாட்டுதலின்படி மதுரையில் ஊடகம் மற்றும் பத்திரிகை துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மற்றும் மருத்துவர் ஆசிரியர் சமூக சேவை உள்ளிட்ட பணிகளில் தொடர்ந்து களப்பணியாற்றி வருபவர்களை ஊக்குவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் மதுரை மாவட்ட தலைவர் கணேஷ் தலைமையில், மாவட்டச் செயலாளர் மாயகிருஷ்ணன் முன்னிலையில் துணைத் தலைவர்கள் சிவ கதிரவன், பாலா, இணைச் செயலாளர்கள் பிரேம், சிதம்பரம், செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், கார்த்திக், சுரேஷ் உறுப்பினர்கள் பிரபாகரன், சமய செல்வம், பழனிக்குமார், பாலா, ராஜ்குமார், சந்திரசேகரன் உள்ளிட்ட செய்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி இறுதியில் பொருளாளர் கவிதா அனைவருக்கும் நன்றி கூறினார் மேலும் சிறப்பாக தங்கள் துறையில் களப்பணியாற்றிய சுகாதார உரிமைகள் மற்றும் ஆர்டிஐ ஆர்வலர் வெரோனிகா மேரி, அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் தென்னவன், மதுரை மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் கதிரியக்க இயற்பியல் துறை டாக்டர். செந்தில்குமார் மற்றும் செய்தியாளர்கள் எம்.எஸ்.பி.தம்பி, அழகர்சாமி, பழனிக்குமார் ஊடகச் செய்தியாளர்கள் கூடலிங்கம், சல்மான் பாரிஸ், பாலமுருகன், ராஜ்குமார், ராமலிங்கம் உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல் அணிவித்து கௌரவிக்கப்பட்டது
முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ ஆணைக்கிணங்க, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அதிமுக செயல்வீரர் வி.பி.ஆர் செல்வகுமார் நீர் மோர் வழங்கினார்
தமிழகத்தில் வரலாறு காணாத வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் அதிமுக நிர்வாகிகள் மக்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.
மதுரையிலும் 100 டிகிரியையும் தாண்டி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் காலை 11 மணியிலிருந்து 5 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் நீர்மோர் தண்ணீர் அதிகமாக பருக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் கடுமையான கோடை வெயிலில் மக்களின் தாகம் தீர்ப்பதற்காக முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆணைக்கிணங்க, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகம் முன்பு மாநகர் அதிமுக செயல்வீரர் டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நீர் மோர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாஸ்.மணி, பாவலர் ராமச்சந்திரன், சின்னச்சாமி, மலர்விழி, இன்சூரன்ஸ் ராஜா, பிரித்திவிராஜ், கார்த்திக்,செல்வம் உள்பட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் கே ராஜூ எம்.எல்.ஏ ஆசியுடன், மதுரை மேற்கு 6-ம் பகுதி அதிமுக செயலாளர் கே.ஆர் சித்தன் தனது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
அவருக்கு 20-வது வார்டு கவுன்சிலர் நாகஜோதி சித்தன், முக்குலத்தோர் வாழ்வுரிமைக் கட்சி தலைவர் ஜெயக்குமார் தேவர், வட்டக் கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், கேசவன்,மலைச்சாமி, நாராயணன், விஜயகுமார், ஜஸ்டஸ் ராஜா, ஐ.டி விங் மாவட்ட துணைச் செயலாளர் கந்தன் மற்றும் பில்டர் கண்ணன், கூடல்நகர் பிரேம்குமார், கார்த்தி உள்பட அதிமுக நிர்வாகிகள் ஆளுயர மாலை அணிவித்தும் சால்வைகளை வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் சங்கம் கோவை சார்பாக பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் சார்பாக 4-ஆம் ஆண்டு வண்ணத் திருவிழா நடைபெற்றது.
மேலும் இலப்பைக்குடிக்காடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
இந்நிகழ்விற்கு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பி கிட்டு என்ற கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேசு மற்றும் தீயணைப்பு மீட்பு பணி நிலைய சிறப்பு அலுவலர் அங்கமுத்து, மாநில ஒருங்கிணைப்பாளர் யோகதாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் மாவட்ட கவுரவத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணி, மாவட்ட செயலாளர் ரமேஷ் அர்ஜுனா, மாவட்ட பொருளாளர் காமராஜ், மாவட்டத் துணைத் தலைவர் ராம்குமார், மாவட்ட துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், நகரத்தலைவர் செந்தில்குமார், நகர செயலாளர் ரமேஷ், வேப்பூர் ஒன்றிய துணைத் தலைவர் இப்ராஹீம் பாஷா, ஒன்றிய செயலாளர் தாஜுதீன், ஒன்றிய பொருளாளர் அஹமது மற்றும் மகளிரணி நிர்வாகிகள் ராஜேஷ்வரி, புவனேஸ்வரி, ஸிபியா, ரஹமத் நிஷா, ஆசியா பேகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரையில் 100 டிகிரியை தாண்டி கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது மதியம் 12 மணியிலிருந்து 5 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் எனவும் வேலை நிமித்தமாக வெயிலில் செல்பவர்கள் நீர்மோர் இளநீர் மேலும் தண்ணீர் அதிகமாக பருக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதை செயல்படுத்தும் விதமாக மதுரை மாநகர் முழுவதும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்எல்ஏ நீர் மோர் பந்தல்களை திறந்து வருகிறார்.
அந்த வகையில் இன்று புதன்கிழமை மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ முன்பு அண்ணா தொழிற்சங்கம் பி.ஆர்.சி மண்டலம் சார்பாக மண்டல செயலாளர் மகாலிங்கம் தலைமையிலும், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் முன்னிலையிலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நீர் மோர் பந்தலை திறந்து வைத்து நன்னாரி சர்பத், இளநீர், வெள்ளரிக்காய், ரோஸ்மில்க் போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார், சக்திமோகன், எம்.எஸ்.கே.மல்லன், வி.பி.ஆர்.செல்வகுமார்,பரவை ராஜா, பழங்காநத்தம் ராஜாராம்,மார்க்கெட் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜாங்கம், மூவேந்திரன், உசிலை தவசி, அனுப்பானடி பாலகுமார்,பி.ஆர்.சி திருமுருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நீர் மோர் பந்தல் தொடர்ந்து 15 நாள் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்
மதுரை பழங்காநத்தம் பி.ஆர்.சி டிப்போ முன்பு அண்ணா தொழிற்சங்கம் பி.ஆர்.சி மண்டலம் சார்பாக மண்டல செயலாளர் மகாலிங்கம் தலைமையிலும், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் முன்னிலையிலும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம்.எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, பா.குமார்,சக்திமோகன், எம்.எஸ்.கே.மல்லன், வி.பி.ஆர்.செல்வகுமார், பரவை ராஜா, மார்க்கெட் செந்தில்குமார், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜாங்கம், மூவேந்திரன்,உசிலை தவசி, அனுப்பானடி பாலகுமார்,பி.ஆர்.சி திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நீர் மோர் பந்தல் தொடர்ந்து 15 நாள் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்
ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அதன் மதுரை மாவட்ட நிர்வாகிகள் பெத்தானியாபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.
ஜனநாயக மக்கள் ராஜ்ஜியம் என்ற கட்சியை சென்ற வருடம் நிறுவனத்தலைவர் குணசேகரன் நாயுடு தொடங்கினார்.
இந்நிலையில் கட்சி 2-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் எவர்கிரீன் ஜி.வி பாலமுருகன் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை பெத்தானியாபுரம் நாயுடு சங்க செயலாளர் பொம்மை ரவிச்சந்திரன் வரவேற்று பேசினார்.
இதில் நிர்வாகிகள் ஜெ.கண்ணன், நாகராஜ், டி.எம் நாயுடு, கஜேந்திரன், டெய்லர் ரெங்கராஜ், அழகுராமானுஜம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் கட்சியின் இளைஞர் அணி தலைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
மதுரையில் நாயுடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி இணைந்து நடத்திய 4-ஆம் ஆண்டு தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி குடும்ப விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சேர்மன் இராஜகோபால் நாயுடு தலைமை வகித்தார்.நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விழா குழு உதவி தலைவர் ஜி.வி சௌந்தரராஜன் நாயுடு வரவேற்று பேசினார்.
உதவித்தலைவர்கள் ஆர்.ஜெயராமன் நாயுடு, லயன் ராஜேந்திரபாபு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர்கள் ஜெகன்மோகன் நாயுடு, விஜயராகவன் நாயுடு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் நபார்டு வங்கி தனி இயக்குனர் பேராசிரியர் இராம.சீனிவாசன் மற்றும் முனைவர் ஜகந்நாத் நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவிற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு மன்னர் கல்லூரி பொருளாளர் ஆழ்வார்சாமி நாயுடு, சேம்பர் ஆஃப் காமர்ஸ் பொருளாளர் பாஸ்கரன் நாயுடு, இணைச் செயலாளர் சுப்புராஜ் ஆகியோர் சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில் வேணுகோபால் நன்றி கூறினார்.
விழாவில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு நாயுடு சேம்பர் ஆஃப் காமர்ஸ் உறுப்பினர் பொம்மை ரவிச்சந்திரன் பொது அறிவு வினா புத்தகம், சித்த மருத்துவ குறிப்புகள் அடங்கிய புத்தகம், திருக்குறள் உள்ளிட்ட புத்தகங்களை வழங்கினார். மேலும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் விழா குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சௌந்தர்ராஜன், மோகன்ராஜா, புருஷோத்தமன், சங்கர் கணேஷ், செல்வராஜ், சௌரிராஜன், வெங்கடேசன், சுரேஷ்பாபு, சந்திரன், வெங்கட ஆனந்த் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்