Friday , November 22 2024
Breaking News
Home / செய்திகள் (page 83)

செய்திகள்

All News

மதுரை காளவாசல் தங்கம் கிராண்ட் ஹோட்டல் எதிரே KLB FISH POINT திறப்பு விழா.!

மதுரை காளவாசல் தங்கம் கிராண்ட் ஹோட்டல் எதிரே KLB FISH POINT திறப்பு விழா நடைபெற்றது. முதல் விற்பனையை உரிமையாளர் கோழிக்கடை L.சுந்தரம் தொடங்கி வைத்தார். விழாவிற்கு வருகை தந்தவர்களை உரிமையாளர்கள் மோகன்குமார், மணிராஜ் வரவேற்றனர்.

பின்னர் உரிமையாளர் மோகன்குமார் நம்மிடம் கூறுகையில் :- இதுவரை மதுரை துவரிமான் மெயின் ரோட்டில் உள்ள “KLB COLD STORAGE” ல் மீன்கள் மொத்த வியாபாரம் செய்து வந்த நாங்கள் முதன்முறையாக மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு தங்கம் கிராண்ட் ஹோட்டல் எதிர்புறம் மக்களுக்கு சுத்தமான மீன்களை மிக குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக “KLB FISH POINT” என்ற சில்லறை வியாபாரம் செய்யும் கடையை திறந்துள்ளோம்.

இங்கு மீன்கள் முதல் நாள் கடலில் பிடிக்கப்பட்டு மறுநாள் எங்கள் கடைக்கு விற்பனைக்கு வந்து விடும். எனவே மக்களுக்கு பிரஷ்ஷான மீன்கள் கிடைக்கும். எங்களின் நோக்கம் மிக குறைந்த விலையில் தரமான மீன்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே. மதுரை மக்கள் எங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

51 வயது நபருக்கு மாற்று கல்லீரலை வெற்றிகரமாக பொருத்திய மதுரை அப்போலோ மருத்துவர்கள்.!


மதுரை அப்போலோ மருத்துவமனையில் 51 வயது நபருக்கு மாற்று கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது
விரைவாக செயல்பட்ட டாக்டர்கள் பணியாளர்கள், குழுவினர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் சிகிச்சைக்காக வைக்கப்பட்டு இருந்து மூளைச்சாவு ஏற்பட்ட நபரிடம் இருந்து கல்லீரல் பெறுவதற்கான வாய்ப்பு குறித்த தகவல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கிடைத்தது.

உடனடியாக பணிகளை தொடங்கிய மருத்துவ குழுவினர் மூளை சாவு அடைந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலின் ஏற்புத்தன்மை மற்றும் செயல் திறன் உறுதி செய்யப்பட்டு சரியாக காலை 10.00 மணிக்கு பெறப்பட்டது. மேலும் மாற்று கல்லீரலை வேகமாகவும் பாதுகாப்பாகவும் கொண்டு வருவதற்கு போக்குவரத்து காவலர்கள் உதவியுடன் 2 1/2 நிமிடத்திற்குள் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு மாலை 3-மணிக்குள் நோயாளிக்கு மாற்று கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.

இதையடுத்து அவர் மாற்று உறுப்பு தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் இருந்தார்.மாற்று கல்லீரல் நன்றாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டு தற்போது புதிய கல்லீரலுடன் நோயாளி நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் கூறுகையில்:- பொதுவாக இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இரண்டு வாரத்திற்கு மருத்துவமனையில் இருக்க வேண்டும். தற்பொழுது இவர் நல்ல உடல் நிலையில் உள்ளதால் தற்பொழுது ஒரு வாரத்திலேயே டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தெரிவித்தனர்.

இந்த மாற்று அறுவை சிகிச்சையில் டாக்டர்கள் சஞ்சய் கோவில்,மதுசூதனன்,கார்த்திகேயன்,மஞ்சுநாத்,ராஜேஷ்பிரபு,பிரவீன்குமார்,ஐயப்பன், கணேஷ் ஆகியோர்அடங்கிய மருத்துவ குழுவினர் இந்த மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டனர்.

தலைமை செயல்பாட்டு அதிகாரி நீலக்கண்ணன், உதவி இயக்குநர் டாக்டர்பிரவீன்ராஜன்,பொது மேலாளர் நிகில்திவாரி மற்றும் மாற்று உறுப்பு ஒருங்கிணைப்பாளர் பொன்முருகன் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சை துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதில் முக்கிய பங்கு வகித்தனர். மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்து முடித்த டாக்டர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்

மதுரையில் திமுக கவுன்சிலரின் கணவரை கண்டித்து பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

பிரதமர் மோடி திட்டத்தில் வீடு கட்டும் பயனாளியை மிரட்டிய 42 வது வார்டு திமுக கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகத்தை கைது செய்யக்கோரி மதுரை முனிச்சாலையில் மதுரை தெற்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை நகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மகா சுசீந்திரன் பேசுகையில் :-

மதுரை மாநகராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை .ஆனால் திமுக கவுன்சிலரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது .அவர்கள் பொதுமக்களை மிரட்டி பணம் சம்பாதிப்பதில் குறியாக இருந்து வருகின்றனர்.

மதுரை நகர் 41வது வார்டில் பிரதமர் மோடி திட்டத்தின் கீழ் வீடு கட்டுகின்ற ஏழைத் தொழிலாளி கமலா, அவரது கணவர் கருப்பையா ,மகன் மணிகண்டன் ஆகியோரை 42 வது வார்டு  திமுக கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அவரது அராஜக போக்கை காவல்துறையினர் இதுவரை கண்டிக்கவில்லை .

.இதுபோன்று 41வது வார்டு திமுக கவுன்சிலர் செந்தாமரைக்கண்ணன் மாநகராட்சி மின் பொறியாளரை தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் அவர் ஒரு கோடியே 38 லட்சம் செலவு செய்து கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளேன் என்று வீடியோவில் கூறியிருக்கிறார் .ஆனால் காவல்துறை எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக உள்ளது.

இதே நிலை நீடித்தால் மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் பாரதிய ஜனதா கட்சி திமுக கவுன்சிலரை கண்டித்து மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது .மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்துள்ளனர். திமுக கவுன்சிலர்கள் அராஜக போக்கை கைவிட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்..

ஆர்ப்பாட்டத்தில் மாநகர் மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயவேல்,  குமார், வினோத்குமார், விளையாட்டு பிரிவு மாவட்ட தலைவர் வாலிபால் செந்தில்குமார், மகளிரணி மாவட்ட தலைவி தனலெட்சுமி, மண்டல் தலைவர் கள் அருண்குமார், பாலமுருகன், 41வதுவார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன், வார்டு தலைவி செல்வி கிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டி, முன்னாள் கவுன்சிலர் பாலயோகி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.. 

சங்கர் சிமெண்ட் 75-வது ஆண்டு பவள விழாவில் மதுரை ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் பங்கேற்பு.!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சங்கர் சிமெண்ட் 75-வது ஆண்டு பவள விழா நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன் அவர்கள் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் எல்.முருகன், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தமிழக முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கிரிக்கெட் வீரர் தோனி உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


இவ்விழாவில் சங்கர் சிமெண்ட் மதுரை நம்பர் ஒன் ஸ்டாக்கிஸ்ட் ரமேஷ் ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் அவர்கள் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக சென்னை செய்தியாளர் குமார்

மதுரையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் மூர்த்திக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு.!

மதுரை விமான நிலையம் சாலை நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் முழு உருவ வெங்கல சிலையை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அன்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.

பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து இந்த விழாவில் கலந்து கொள்ள திருமாவளவன் எம்.பி அழைப்பு விடுத்தார். அருகில் இரா அய்யங்காளை உள்ளார்.

மதுரையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ள அமைச்சர் மூர்த்திக்கு விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு.!

மதுரை விமான நிலையம் சாலை நுழைவு வாயிலில் நிறுவப்பட்டு உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் முழு உருவ வெங்கல சிலையை வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அன்று விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க உள்ளார்.


பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து இந்த விழாவில் கலந்து கொள்ள திருமாவளவன் எம்.பி அழைப்பு விடுத்தார். அருகில் இரா அய்யங்காளை உள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பாஜக விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


இதில் விவசாய அணி முன்னாள் மாவட்ட செயலாளர் சுரேஷ்,மாநில திட்ட பொறுப்பாளர் அழகுராஜா, செல்லம்பட்டி ஒன்றியம் தாமோதரன், விவசாய அணி பொறுப்பாளர் கலைச்செல்வன், சேடப்பட்டி ஒன்றியம் ராமசாமி, முனியாண்டி, சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை மல்லிகை லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது

மதுரை மாவட்டம் பொதும்பு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு
மதுரை மல்லிகை லயன்ஸ் சங்கத்தின் சார்பாக இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார தலைவர் லயன் K.M.முருகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் லயன் பாலமுருகன், செயலாளர் லயன் வீரக்குமார், லயன் விஜயேந்திரன்,லயன் வெற்றிமுருகன் லயன் பழனிமுருகன் லயன் நாகூர் ஹனிபா மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திண்டுக்கல் ஸ்ரீ நலம் மருத்துவமனை மற்றும் சாரா மெடிக்கல் இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம்.!

திண்டுக்கல் மாவட்டம் இடைய கோட்டை முஹையதீன் ஆண்டவர் மஹாலில் ஸ்ரீ நலம் மருத்துவமனையின் தலைமை எலும்பியல் மருத்துவர் சிவகுமார் தலைமையில் மாபெரும் எலும்பியல் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டனர்.

கலந்து கொண்ட பொது மக்கள் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்து மாத்திரைகள் கொடுக்கப்பட்டது.

இந்த முகாமில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், ஊர் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள்,
போன்றோர் பங்கேற்றனர்.

மருத்துவர் சிவகுமார் உடன், மருத்துவர்கள் சதாம் ஹுசைன், கோபி கிருஷாணா ராஜா, முகம்மது ரியாஸ்,ஆஷிகா பாபு, முகம்மது அம்ரின் ஆகிய மருத்துவ குழுவினர் பங்கேற்று சிறப்பான ஆலோசனைகள் வழங்கினர்.

ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து தன்னால் இயன்ற அளவு மருத்துவ உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வரும் திண்டுக்கல் ஸ்ரீ நலம் ஆர்த்தோ மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிவகுமார் அவர்களை பங்கேற்ற அனைத்து தரப்பினரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

அமைதி மனித வள சபையின் தமிழ்நாட்டின் மருத்துவத்துறை தலைவராக டாக்டர் கஜேந்திரன் நியமனம்.!!

நாகர்கோவிலில் அமைதி மனிதவள சபை முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நிறுவனர் ஜெபராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது அமைதி மனித வள சபையின் தமிழ்நாட்டின் மருத்துவத்துறை தலைவராக டாக்டர் கஜேந்திரன் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. மருத்துவ தலைவராக நியமிக்கப்பட்டதற்கான சான்றிதழை நிறுவனர் ஜெபராஜ் மற்றும் தமிழக NGO கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் ஆகியோர்
வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் தலைமை செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட்ராஜ், தமிழக கல்வித்துறை சஜீ, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏசுநேசன், தமிழக மருத்துவ துறை தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில துணைத்தலைவர் டாக்டர் முருகேசன்,மாநில செயலாளர் டாக்டர் முத்துக்குமார், மாநில பொருளாளர் டாக்டர் வீரலட்சுமி, மாநில துணைச் செயலாளர் மருத்துவர் குருலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரமேஷ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கண்ணன், சட்ட ஆலோசகர் ராபின்சன்,
மாநிலச் செயலாளர் ஸ்டீபன், கிரேஸ் சாரிடபிள் டிரஸ்ட் ஜாய்ஸ் மேரி, சேவை செம்மல் ராணி, தலைமை சட்ட ஆலோசகர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் தென் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நன்றியுரை கூறினார்.
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES