Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 86)

செய்திகள்

All News

மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை.!


மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் உலக கருணை தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை முன்னிட்டு தலா ஒரு அரிசி மூடை என மூன்று மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மூன்று அரிசி மூடைகளை வழங்கினார்.

இது குறித்து வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:
நமது அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்ட செயல்பாடுகளை யாரிடமும் நன்கொடைகள் பெறாமல் எனது தனிப்பட்ட சேமிப்பு மூலமாக அவ்வப்போது சேமிக்கும் சிறு சிறு தொகையை பொருத்து தொடர்ந்து பல உதவிகள் செய்து வருகிறேன்.

அந்த வகையில் உலக கருணை தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு குழந்தை, ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மற்றும் ஒரு தவழும் மாற்றுத்திறனாளி ஆகிய மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு அரிசி மூட்டையாக மூன்று அரிசி மூடைகள் வழங்கப்பட்டது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சிம்மக்கல் முதியோர் இல்லம் மேலாளர் கிரேசியஸ், உண்ணுங்கள் பருகுங்கள் வீணாக்காதீர்கள் அமைப்பின் நிறுவனர் ஷேக் மஸ்தான் மற்றும் மாற்றம் தேடி பாலமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நலத்திட்ட உதவிகளை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வழிகாட்டி மணிகண்டனுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம்.!

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு மதுரையில் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் காமராஜர் சாலை சௌராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் செய்திருந்தார்.

மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவில் “LYKA MULTI SPECIALITY PET HOSPITAL” திறப்பு விழா.!

மதுரை எஸ்.எஸ்.காலனி நாவலர் நகர் 1-வது தெருவில் “LYKA MULTI SPECIALITY PET HOSPITAL” திறப்பு விழா நடைபெற்றது. டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் பிரதியூஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட டாக்டர் விஜயலட்சுமி, கமலா, சுகன்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்,

விழாவிற்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை உரிமையாளர் டாக்டர் வெங்கடேஸ்வரன் மற்றும் திருமதி ஹரிபிரியா வெங்கடேஸ்வரன் வரவேற்றனர். இவ்விழாவில் நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரை 20-வது வார்டு விளாங்குடியில், அதிமுக பகுதி செயலாளர் கே.ஆர்.சித்தன், 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு தலைமையில் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம்.!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி தொடங்கியுள்ளது. வரும் டிச.8-ம் தேதி வரை ஒரு மாதம் வரை இப்பணி நடைபெறுகிறது.

இக்காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்கலாம்.

இதற்கிடையில், பணிக்கு செல்வோர் வசதிக்காக, தமிழகம் முழுவதும் இன்று நவம்பர்.12 ஆம் தேதி, நாளை நவ.13-ம் தேதிகளில் தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அந்த வகையில் மதுரை மாநகராட்சி 20-வது வார்டு விளாங்குடியில், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ ஆலோசனைப்படி, மேற்கு 6-ஆம் பகுதி செயலாளர் கே.ஆர்.சித்தன் மற்றும் 20-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மார்க்கெட் மார்நாடு ஆகியோர் தலைமையில் புதிய வாக்காளர் சேர்க்கை,பெயர் திருத்தம்,நீக்கம், சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதில் 1-வது வார்டு வட்டக்கழக செயலாளர் மலைச்சாமி, 20-வது அவைத்தலைவர் கரிசல்பட்டி சேகர், மேற்கு 6-ம் பகுதி எம்ஜிஆர் இளைஞரணி பகுதி செயலாளர் பில்டர் கண்ணன், 20- வது வார்டு நிர்வாகிகள் அழகர்,ராசு, மற்றும் 1-வது வார்டு அசோக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாவட்டம் கீழக்குயில்குடி அருகே உள்ள விவசாய அணி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!!

மதுரை கீழக்குயில்குடி நான்கு வழிச்சாலை அருகே சீனிவாசா காலனியில் உள்ள பாஜக விவசாய அணி அலுவலகத்தில், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன் மற்றும் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர் ஆகியோர் வழிகாட்டுதலின் படி, நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது அதிமுக வழக்கறிஞர் பிரிவு மதுரை புறநகர் மாவட்ட இணைச் செயலாளர் வக்கீல் தர்மர் பாஜக விவசாய அணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்நிகழ்வில் விவசாய அணி முன்னாள் மாநகர் தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் புறநகர் மாவட்ட தலைவர் பூமிராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே “Mega Steel Kitchen Equipments” திறப்பு விழா.!

மதுரை பழங்காநத்தம் டி.பி.கே மெயின் ரோடு அழகப்பன் நகர் பேருந்து நிறுத்தம் அருகே “Mega Steel Kitchen Equipments” திறப்பு விழா நடைபெற்றது.


திறப்பு விழாவிற்கு வருகை தந்தவர்களை நிறுவனத்தின் உரிமையாளர் நாகசெல்வம் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.

இவ்விழாவில் நிர்வாக மேலாளர் முகமது மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


இங்கு ஹோட்டல்களுக்கு தேவையான அனைத்து வகையான எஸ்.எஸ் கிச்சன் மெட்டீரியல்ஸ் அனைத்தும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில்       பாஜக வர்த்தக அணி சார்பாக கையெழுத்து இயக்கம் : மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு.!

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி காய்கறி மார்க்கெட்டில் மதுரை கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வர்த்தக அணி சார்பில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து வியாபாரிகளிடம் கையெழுத்து வேட்டை மாவட்ட வர்த்தக அணி தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்வில் பாஜக மாநில. தலைவர் அண்ணாமலை பங்கேற்று வியாபாரிகளிடம் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் பேசியதாவது :- விடியல் அரசு என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட திமுக விடியாத அரசாக செயல்பட்டு வருகிறது .தமிழகம் முழுவதும் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மின் கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் .தமிழக முழுவதும் ஆவின் பால் விலை உயர்வை கண்டித்து வருகிற 15 ஆம் தேதி 1200 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுகின்ற வகையில் அடிப்படை வசதிகள் செய்து வருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் .மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்

இந்நிகழ்வில் நகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன், மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன், ஊடகப்பிரிவு தலைவர் செல்வமாணிக்கம் உள்பட ஏராளமான மாவட்டம் /மண்டல் மற்றும் வார்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மாநகரின் 15 கி.மீ. சுற்றளவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் மதுரை அப்போலோ மருத்துவமனை.!

உறங்கா விழிகளுடன் அப்போலோ மருத்துவமனை
மாநகரின் 15 கி.மீ. சுற்றளவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் மதுரை அப்போலோ மருத்துவமனை


உலகின் வேறெந்த சிறந்த மருத்துவனைக்கும் இணையான தரமான சேவையை அவசர சிகிச்சைப் பிரிவில் அப்போலோ மருத்துவமனை அளிக்கிறது. சர்வதேச தரம் வாய்ந்த அவசர சிகிச்சை கட்டமைப்பை உருவாக்கும் அப்போலோ மருத்துவமனை தலைவரின் தொலைநோக்குப் பாதையில் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறது.


நோயாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முந்தைய நிலையைப் பொருத்தவரை ஆம்புலன்ஸ் சேவைகள், நோயாளியை சிகிச்சை பெறும் இடத்திலிருந்து மற்றும் முதலுதவி பெறும் இடத்திலிருந்து இடமாற்றம் செய்தல் ஆகிய சேவைகளை அப்போலோ வழங்குகிறது. அதேவேளையில் ஆம்புலன்சில் நோயாளி நுழையும் நொடியிலிருந்து மருத்துவ சேவைகளை அப்போலோ தொடங்குகிறது. கோல்டன் ஹவர் எனக் குறிப்பிடப்படும் மருத்துவமனை சென்றடைவதற்குள்ளான காலத்தில் பெரும்பாலான முதலுதவிகள் மற்றும் உயிர்காப்பு வழிமுறைகளை ஆம்புலன்சில் உள்ள தேர்ச்சி பெற்ற அவசர சிகிச்சை குழுவினராலேயே அளிக்கப்படுவது அப்போலோவின் தனிச்சிறப்பு.

அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவானது அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது. நோயாளிக்கு உயர் தரமான மருத்துவ சேவையை அளிப்பதற்கு தேவைப்படும் உயர்தரமான மானிடர்கள், ரத்தப் பரிசோதனை ஆய்வகம், அத்தியாவசிய மற்றும் அனைத்து உயிர் காப்பு மருந்து நிலையம், பரிசோதனை முடிவுகளை மிகத் துல்லியமாகவும், உடனடியாகவும் தெரிந்துகொள்ள உதவும் அதிநவீன சாதனங்கள் அப்போலோ மருத்துவமனையில் உள்ளன. அப்போலோவின் அவசர சிகிச்சைப் பிரிவானது கதிரியக்கப் பிரிவு, ஆய்வகம் மற்றும் ரத்த வங்கியுடன் இணைந்து மிக விரைவாக மற்றும் திறம்பட செயலாற்றுகிறது. NABH போன்ற தேசிய தர நிர்ணய அமைப்புகள் அளித்திருக்கும் அங்கீகாரம் அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவின் சிறப்பான சிகிச்சைக்கு சான்றாக உள்ளன.

அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவானது விஷப் பரவல், நீரிழிவு, சிறுநீரக செயலிழப்பு, சுவாச சிக்கல்கள், இதய துடிப்பு பிரச்சினைகள், எதிர் உயிர் தொற்றுகள் போன்ற உடனடி மருத்துவ தேவைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கிறது. மேலும் சாலை விபத்துகள், தாக்குதல், தீக்காயம், தீவிர அடிவயிற்று வலி, உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடுதல், ரத்தப் போக்கு, மலக்குடல் பாதிப்புகள் போன்ற உடனடி அறுவை சிகிச்சை தேவைகளுக்கான அனைத்து வசதிகளுடன் 24 மணி நேரமும் அப்போலோ மருத்துவமனை சேவையளிக்கிறது.


வயது வித்தியாசமின்றி, இளைஞர்கள் மட்டுமின்றி, பச்சிளம் குழந்தைகள், குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் போன்ற கவனமான சிகிச்சை தேவைப்படும் சிறப்புப் பிரிவினருக்கும் மிகத் தரமான சிகிச்சையை அளிப்பதில் தேர்ச்சி பெற்ற மருத்துவர் மற்றும் பணியாளர் குழுவினரையும், அனைத்து அதிநவீன வசதிகளையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் பெறக்கூடிய அவசர சிகிச்சைப் பிரிவை மதுரை அப்போலோ மருத்துவமனை கொண்டுள்ளது என்று அவசர சிகிச்சைப் பிரிவின் மூத்த மருத்துவ நிபுணர் ஜூடு வினோத் மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் மருத்துவ நிபுணர் மதன் ராஜா ஆகியோர் தெரிவித்தனர்.


இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை அப்போலோ மருத்துவமனை சிஓஓ நீலக்கண்ணன், டாக்டர் பிரவீண் ராஜன், JDMS அப்போலோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மார்க்கெட்டிங் பிரிவு பொதுமேலாளர் கே .மணிகண்டன், நிர்வாக பொதுமேலாளர் டாக்டர் நிகில் திவாரி ஆகியோர் உடனிருந்தனர்.
24 மணி நேரமும் 1066 கட்டுப்பாட்டு அறை எண்ணை அழைக்கலாம்.

கழுத்தில் இரும்பு கம்பி குத்தி ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்த இளைஞரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவர்கள்.!!

கழுத்தில் இரும்புக் கம்பி குத்தி
ஆபத்தான நிலையில் இருந்த இளைஞர் ஒரே வாரத்தில் குணமடைந்தார் !திருச்சி அப்போலோ மருத்துவர்களுக்கு பாராட்டு!!


கார்த்திகேயன் என்ற 33 வயது இளைஞர் கடந்த 15.10.2022 அன்று திருச்சி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுவரப்பட்டார்.. வீட்டில் சுமார் 15 அடி உயர முதல் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் இரும்பு ராடு ஒன்று அவரது கழுத்தில் சொருகி உள்ளது.

அதிக உயரத்தில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இரும்புக் கம்பி குத்திக் கிழித்ததால் ஏற்பட்ட பாதிப்பு என சற்று ஆபத்தான நிலையில் அந்த இளைஞர் இருந்தார். டாக்டர் ஸ்டீபன் மற்றும் டாக்டர் விஜய் ஆனந்த் ஆகியோர் உடனடியாக செயல்பட்டு முதலுதவி சிகிச்சைகளை அளித்து நோயாளியின் இதய துடிப்பு மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதை உறுதி செய்தனர்

இரும்புக் கம்பியை பாதுகாப்பாக அகற்றுவதற்கு இரும்புக் கம்பியின் நீளத்தைக் குறைப்பது அவசியமானதாக இருந்தது. மேலும் ஸ்கேன் எடுப்பதற்கும் இதர பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் இரும்புக் கம்பி நீட்டிக் கொண்டிருப்பது சிரமத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாலும் முதலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யபட்டு ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

பின்னர் இரும்புக் கம்பியை லேபராஸ்கோபிக் நிபுணர் டாக்டர் முகமது மன்சூர் தலைமையிலான மருத்துவ நிபுணர் குழுவினர் எந்தவித சிக்கலும் இல்லாமல் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர். இஎன்டி நிபுணர் அஜய் மாணிக்கம் கண்காணிப்பில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் விதுன் ராஜ் பாரத், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் ஆகியோரின் உதவியுடன் டிரக்கியஸ்டமி செய்யப்பட்டது.
நோயாளி மூச்சுவிடுவது சிரமமாக இருந்தநிலையில், மயக்க மருத்துவர்கள் டாக்டர் கார்த்திக் மற்றும் டாக்டர் அழகப்பன் ஆகியோர் சீரான சுவாச வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

மேலும் அந்த நிலையிலேயே உணவுக் குழாயில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக டாக்டர் முரளிரங்கன் எண்டோஸ்கோபி சிகிச்சையை மேற்கொண்டார்.
இந்த நிலையில், ஆஸ்பிரேசன் நிமோனியாவுக்கான அறிகுறிகள் தென்பட்டது சற்று பின்னடைவாக அமைந்தது. நுரையீரல் சிகிச்சை நிபுணர் தமிழரசன் நிமோனியா பாதிப்பு ஏற்படாத வகையில் சிகிச்சைகளை அளித்தார்.

உலகின் வேறெந்த பகுதியிலும் உள்ள சிறந்த மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவர் குழுவினை தாங்கள் பெற்றுள்ளதாகவும் திருச்சி அப்போலோ மருத்துவமனை தலைவர் மற்றும் மூத்த பொது மேலாளர் சாமுவேல் பெருமிதம் தெரிவித்தார். அப்போலோ மருத்துவமனை நிர்வாகி டாக்டர் சிவம் மற்றும் நிவாரணப் பிரிவின் (எச்சிஎஸ்) பொதுமேலாளர் மணிகண்டன் மற்றும் செயல்பாட்டு பொது மேலாளர் சங்கீத் ஆகியோர் உடனிருந்தனர்.

அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி.ராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி செயலாளர் மற்றும் மண்டலத்தலைவர் எம்.டி.ராஜா தலைமையில் மனு வழங்கப்பட்டது.

இதில் அர்ச்சகர் பேரவைத் தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சசிகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்,ஐடி விங் மாயாண்டி, ஜெ.புரம் நகர்த்தலைவர் ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES