
வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின், சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளின் தலைமை ஒருங்கிணைப்பாளராக மதுரையை சேர்ந்த டாக்டர் கஜேந்திரன் அவர்களை, வளைகுடா வாழ் தமிழர்கள் நலச்சங்கத்தின் நிறுவனத்தலைவர் நம்புதாளை டாக்டர் பாரிஸ் நியமனம் செய்துள்ளார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்
எஸ்டிபிஐ கட்சியின் தெற்கு மாவட்ட பொதுக்கைகுயானைக்கல் பகுதியில் உள்ள ஹோட்டல் பிரசிடென்ட்ல் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு
மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சிராஜ்தீன் வரவேற்புரையும்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முகமது யூசுப் தொகுப்புரையும்,
மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் தலைமையுரையும் நிகழ்த்தினார்கள்.
மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது கடந்த ஒரு ஆண்டிற்கான அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநில செயலாளர் நஜ்மா பேகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
மேலும்
SDTU மாநில துணைத் தலைவர் அப்துல் சிக்கந்தர்,
SDTU மாநில செயற்குழு உறுப்பினர் சத்ய மூர்த்தி,
வழக்கறிஞர் அணி மண்டல தலைவர் வழக்கறிஞர் பஷீர்,
WIM மாநில செயற்குழு உறுப்பினர் கதிஜா
உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1) சென்னை போன்ற நகரங்களில் கடந்து சென்ற மழை காலங்களில் வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் நிகழ்வுகளில் சிறப்புற கையாண்டு சீரிய செயலாற்றிய மாண்புமிகு மாநில முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
2) மதுரை சாலைகள் குறிப்பாக நகரின் பிரதான பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. ஆகவே உடனடியாக சரி செய்து தர மதுரை மாவட்ட அரசு நிர்வாகத்தை கேட்டு கொள்கிறோம்.
3) மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
4)மழை காலத்தில் பெரியார் பேருந்து நிலைய பகுதியில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்படுகிறார்கள். இதற்கு உண்டான உரிய செயல் திட்டங்களை வகுத்து தீர்வு காண வேண்டும்.
5)மதுரையில் கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகள் மாணவர்களிடம் மிகவும் சுலபமாக கிடைக்கும் அவல நிலை உள்ளது. இக்கொடிய பழக்கத்தினால் சமூக சீர்கேடு மற்றும் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக இரும்பு கரம் கொண்டு அடக்கி நம் நாட்டின் வருங்கால தூண்களை வளமான தலைமுறைகளாக காத்திட வேண்டும்.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மாவட்ட பொருளாளர் சிக்கந்தர் நன்றியுரை கூறினார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 16-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தலைவர் மலர்பாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பொருளாளர் சுகுமார், துணைத்தலைவர் கணேசன், மகளிர் பிரிவு கயர்நிஷாகபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்புராம் வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்விகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.வி.முருகன், லக்சிகா ஸ்ரீ, காவேரி, எஸ்.எம்.டி ரவி, தமிழ்ச்செல்வி மற்றும் என்.எம் மாரி, பென்குயின் நடராஜன், நல்லதம்பி, செல்வராஜ், சண்முகசுந்தரம், வேல்பாண்டி
ஆலோசகர்கள் நரசிங்கம், கோபால், சட்ட ஆலோசகர்கள் மரியவினோலா, வெங்கட்ராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்திய அளவில் தேசிய உடல் உறுப்பு தான தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ல் கொண்டாடபட்டு வருகின்றது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து, நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் 100 நபர்கள் தங்களின் உடல் உறுப்புகளை தானம் அளிப்பதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் திருச்சி அப்போலோ மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் அளித்த கொடையாளர்கள் மற்றும் உறுப்பு தானம் பெற்ற நபர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இம்மருத்துவமனை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மருத்துவமனையின் Dr. வேல் அரவிந்த் – மூத்த சிறப்பு சிறுநீரக சிகிச்சை நிபுணர் மற்றும் Dr. C. அழகப்பன் – மூத்த சிறப்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரால் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக மாற்று அறுவை சிகிச்சையில் கொடையாளர்களுக்கு லேபராஸ்கோபிக் டோனர் நெஃப்ரெக்டோமி (Laparascopic DOnor Nephrectomy) முறைப்படி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் கொடையாளர்கள் துரிதமாக உடல்நிலை தேறி இயல்புநிலைக்கு திரும்ப ஏதுசெய்கிறது. இம்முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் மிகுந்த அனுபவம் மற்றும் உட்கட்டமைப்பு வசதி அவசியம் இதனை திருச்சி அப்போலோ மருத்துவமனை கொண்டுள்ளது என
Dr. வேல் அரவிந்த், சிறுநீரக மாற்று மருத்துவ சிகிச்சை நிபுணர் கூறினார் அனைவரும் தங்கள் இறப்பிற்கு பின்பாவது உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
Dr. C. அழகப்பன் – மூத்த சிறப்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர், Dr. சிவம் ,நிலைய மருத்துவ அதிகாரி உடன் இருந்தனர்.
மருத்துவமனை மூத்த பொதுமேலாளர் சாமுவேல் அவர்கள் மருத்துவர்களை பாராட்டியதுடன் கொடையாளர்கள் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு நபர்களுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்
பொதுமேலாளர் சங்கீத், விற்பனை பிரிவு பொதுமேலாளர் மணிகண்டன் மற்றும் முதன்மை மேலாளர் அனந்த ராமகிருஷ்ணன் உடன் இருந்தனர்.