Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் (page 84)

செய்திகள்

All News

அமைதி மனித வள சபையின் தமிழ்நாட்டின் மருத்துவத்துறை தலைவராக டாக்டர் கஜேந்திரன் நியமனம்.!!

நாகர்கோவிலில் அமைதி மனிதவள சபை முப்பெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் நிறுவனர் ஜெபராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது அமைதி மனித வள சபையின் தமிழ்நாட்டின் மருத்துவத்துறை தலைவராக டாக்டர் கஜேந்திரன் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. மருத்துவ தலைவராக நியமிக்கப்பட்டதற்கான சான்றிதழை நிறுவனர் ஜெபராஜ் மற்றும் தமிழக NGO கூட்டமைப்பு தலைவர் தாமோதரன் ஆகியோர்
வழங்கி கௌரவித்தனர்.

இந்நிகழ்வில் தலைமை செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட்ராஜ், தமிழக கல்வித்துறை சஜீ, மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏசுநேசன், தமிழக மருத்துவ துறை தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில துணைத்தலைவர் டாக்டர் முருகேசன்,மாநில செயலாளர் டாக்டர் முத்துக்குமார், மாநில பொருளாளர் டாக்டர் வீரலட்சுமி, மாநில துணைச் செயலாளர் மருத்துவர் குருலட்சுமி, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ரமேஷ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் கண்ணன், சட்ட ஆலோசகர் ராபின்சன்,
மாநிலச் செயலாளர் ஸ்டீபன், கிரேஸ் சாரிடபிள் டிரஸ்ட் ஜாய்ஸ் மேரி, சேவை செம்மல் ராணி, தலைமை சட்ட ஆலோசகர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் தென் தமிழக தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நன்றியுரை கூறினார்.

மதுரையில் அதிமுக மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் பேத்தி A.ரதியின் பிறந்தநாள் விழாவில் செல்லூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்று வாழ்த்து.!

மதுரை தேம்பாவணியில்
மத்திய 2-ம் பகுதி அதிமுக செயலாளர் ஞானசேகரன் மற்றும் மாநகர் மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் பாண்டிச்செல்வி ஞானசேகரன் ஆகியோரின் பேத்தி A.ரதியின் 11-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.


இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளர், அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ பங்கேற்று குழந்தை செல்வம் A.ரதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினார்.

இவ்விழாவில் பகுதி, வார்டு, சார்பு அணியினர், மகளிரணி நிர்வாகிகள் உள்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாஜக விவசாய அணி மதுரை மேற்கு மாவட்ட தலைவராக முத்துப்பாண்டி நியமனம்.!


பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி மதுரை மேற்கு மாவட்ட தலைவராக முத்துப்பாண்டி அவர்களை விவசாய அணி மாநில தலைவர் சி.கே நாகராஜன் நியமனம் செய்துள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுடைய ஆலோசனையின் படியும், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், மாவட்ட தலைவர் சசிகுமார் அவர்களுடனான கலந்தாய்வின்படியும், முத்துப்பாண்டி அவர்களை மதுரை மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவராக நியமனம் செய்கிறேன்.அவர் பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட முத்துப்பாண்டி அவர்களுக்கு பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

மதுரையில் வ.உ.சி எழுச்சி பேரவை மணிநகரம் சார்பாக, மாவட்ட தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஐஸ்.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 86-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்து அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அந்த வகையில் மணிநகரம் வ.உ.சி எழுச்சி பேரவை சார்பாக, மாவட்டத் தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஐஸ்.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மதுரையில் வ.உ.சி எழுச்சி பேரவை மணிநேரம் சார்பாக, மாவட்டத் தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஐஸ்.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.!

சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனாரின் 86-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்து அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்


அந்த வகையில் மணிநகரம் வ.உ.சி எழுச்சி பேரவை சார்பாக, மாவட்டத் தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்ட செயலாளர் ஐஸ்.ஆறுமுகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பேரவை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மதுரையில் பாஜக சார்பாக பட்டியலின மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சி.!

பாரதிய ஜனதா கட்சி மதுரை மாநகர் வைகை வடகரை மண்டலில் உள்ள பட்டியலின மக்களை சந்தித்து மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன், மத்திய அரசின் திட்டங்கள் பிரிவு மாநில செயலாளர் சதிஸ்ஆசாத், மாவட்ட செயலாளர் ரோஜாராணி, மீனவர் அணி மாவட்ட தலைவர் இளங்கோமணி, வைகைவடகரை மண்டல் தலைவர் அருண்பாண்டி, பொதுச்செயலாளர் யுவராஜ், முன்னாள் மண்டல் பொருளாளர் சண்முகசுந்தரம், துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன், வார்டு தலைவர்கள் பாஸ்கர் மற்றும் சிவாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவை முன்னிட்டு, மதுரையில் அவரது படத்திற்கு பாஜக பிச்சைவேல் மலர் தூவி மரியாதை.!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவை முன்னிட்டு மதுரையில் பாஜக விளையாட்டு பிரிவு சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தல்லாகுளம் விசாலம் காபி பார் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு ஏராளமான பாஜக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிகழ்வில் பாஜக மாநகர் 62-வது வார்டு தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் மற்றும் 74-வது வார்டு தலைவர் முருகேசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பிரியாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா படத்திற்கு பாஜக வார்டு தலைவர் பிச்சைவேல் மலர் தூவி மரியாதை.!

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மறைவை முன்னிட்டு மதுரையில் பாஜக விளையாட்டு பிரிவு சார்பாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தல்லாகுளம் விசாலம் காபி பார் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு ஏராளமான பாஜக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.


இந்நிகழ்வில் பாஜக மாநகர் 62-வது வார்டு தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் மற்றும் 74-வது வார்டு தலைவர் முருகேசபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பிரியாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

கருவனூர் ராஜேந்திரன் நினைவு தினத்தை முன்னிட்டு, விசிக அய்யங்காளை மாலை அணிவித்து மரியாதை.!




மதுரை வடக்கு மாவட்ட விசிக முன்னாள் மேற்கு ஒன்றியச் செயலாளர் கருவனூர் ராஜேந்திரன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கருவனூரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் மலர் தூவியும் மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்


இந்நிலையில் கருவனூர் ராஜேந்திரன் படத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் இரா.அய்யங்காளை
வழக்கறிஞர் ரவிக்குமார்,
புதூர் பரமசிவம்,
ஒத்தக்கடை மலைச்சாமி,
தொண்டைமான், அன்பழகன்,
கருவனூர் பறைமுருகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை பெத்தானியாபுரத்தில் பாஜக விளாங்குடி மண்டல் தலைவர் கஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

பால் விலை உயர்வை கண்டித்து மதுரை பெத்தானியாபுரத்தில் பாஜக விளாங்குடி மண்டல் தலைவர் கஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வார்டு தலைவர்கள் ராதா, திருப்பதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஓபிசி அணி மாநில பொருளாளர் மோகன்குமார் கண்டன உரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் வேங்கைமாறன், ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர் பாலன் ரேடியோஸ் பாலமுருகன், மகளிரணி மாவட்ட தலைவி ஓம்சக்தி.தனலட்சுமி, சோலை பரமன், பூமிநாதன், ராணுவ பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மண்டல் பொதுச் செயலாளர் கோச்சடை ரங்கராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES