Friday , March 13 2026
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

மதுரையில் தேவர் சிலைக்கு மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அவர்களின் ஆணைக்கிணங்க, மாநில மகளிரணி செயலாளர் சுந்தரச்செல்வி ஒச்சாத்தேவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாநில இளைஞரணி துணைத்தலைவர் U.A.செந்தில்ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் தேவர் சிலைக்கு அகில பாரத இந்து மகா மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில பாரத இந்து மகா சார்பாக மாநில இளைஞரணி செயலாளர் எம்.டி ராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அர்ச்சகர் பேரவை மாவட்ட தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகராஜன், ஜெயந்திபுரம் நகர தலைவர் ராஜூ, மற்றும் முத்து, செந்தில், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் தேவர் சிலைக்கு இந்து முன்னணி பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தி முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு இந்து முன்னணி சார்பாக அதன் பொதுச்செயலாளர் கலாநிதி மாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் ராஜாமதன், மாவட்ட செயலாளர்கள் செல்வகுமார், சதீஷ்குமார், பாண்டிபிடாரன், செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், சண்முகவேல், எஸ்.எஸ் காலனி ராஜா உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More »

மதுரையில் அகில இந்திய முக்குலத்தோர் இளைஞர் பேரவை சார்பாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு,மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அகில இந்திய முக்குலத்தோர் இளைஞர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் வெற்றி, ராஜாநாடார், கல்யாணி, மெக்கானிக் ராஜா, சுரேஷ்,சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

Read More »

மதுரையில் தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இலக்கிய அணி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை.!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இலக்கிய அணி மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் ஆலங்குளம் கார்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக கோச்சடை பகுதியில் ஏழை எளியோர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானத்தையும் அவர் வழங்கினார்.

Read More »

மதுரையில் தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம்.!!

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் தாமோதரன், மாநில துணை பொதுச்செயலாளர்கள் மகுடீஸ்வரன், பஞ்சவர்ணம், கூட்டுறவு சங்கத் தலைவர் கண்ணன்,மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர் சங்க செயலாளர் கே.டி.கே துரைக்கண்ணன், சி.ஐ.டி.யு மதுரை மாநகராட்சி அனைத்து தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகராட்சிகளில் மக்களின் …

Read More »

மதுரையில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் சிலைக்கு பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுர் இப்ராஹிம் மாலை அணிவித்து மரியாதை.!

மாமன்னர்கள் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அவர்களது திருவுருவச் சிலைக்கு பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுர் இப்ராஹிம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், சிறுபான்மையினர் அணி மாநில பொது செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாநில செயலாளர் சாம் சரவணன் , தல்லாகுளம் மண்டல் தலைவர் அருண் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக …

Read More »

மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் சிவாவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு.!!

மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் சிவாவுக்கு கேடயம் பரிசு அமைச்சர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார் தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது, எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிச்சாமி வருவார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டிமதுரை காந்தி மியூசியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் …

Read More »

பக்கவாதத்திற்கு அடுத்த நொடியிலேயே சிகிச்சை தேவை என அப்போலோ மருத்துவர்கள் எச்சரிக்கை.!

பக்கவாதத்திற்கு அடுத்த நொடியிலேயே சிகிச்சை தேவை என அப்போலோ மருத்துவமனை விழிப்புணர்வு கருத்தரங்கில் டாக்டர்கள் கூறியுள்ளனர் பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை உள்ளதாக பிரபல மருத்துவர்கள் வலியுறுத்தினர். பக்கவாதம் ஏற்பட்ட பிறகு ஒவ்வொரு நிமிடத்திலும் சுமார் 19 லட்சம் நரம்புகளும், 10 நிமிடத்திற்குள் சுமார் 2 கோடி நரம்புகளும் செயலிழக்கும் அபாயம் உள்ளதால் பக்கவாதத்திற்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பொதுமக்கள் உணர வேண்டும் …

Read More »

கரூர் ஜேசிஸ் மகளிர் அமைப்பு துவக்கம்.

கரூர் ஜேசிஐ டைமண்ட் குயின்ஸ் என்கிற பெண்கள் அமைப்பின் துவக்க விழாவும், பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது புதிய அமைப்பின் தலைவராக ஓசை மீடியா மகேஸ்வரி, செயலாளராக Dr.சர்மிளா, பொருளாளராக கவிபாலா பதவி ஏற்றுக் கொண்டனர் மேலும் பல பெண்கள் பொறுப்பாளர்களாகவும், அடிப்படை உறுப்பினர்களாகவும்தங்களை இணைத்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக மண்டலம் 17 – ன் தலைவர் பிபிபி.எஸ்.மோகன்ராஜ் ,எழுத்தாளர் ஜி.சிவராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். பிபூபா புஷ்பராஜன், …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES