Saturday , February 22 2025
Breaking News
Home / செய்திகள் (page 35)

செய்திகள்

All News

மதுரையில் சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்

சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம்

சினிமா பாடல் ஆசிரியர் பூமாதேவி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை நியூ சினிமா தியேட்டர் அருகே உள்ள வள்ளலார் அன்னதான கூடத்தில் மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

மேலும் ஏழை,எளியோருக்கு வேட்டி சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு திரைப்பட இயக்குனர் அலெக்ஸ் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக சேவகர் பாரதி சிவா, திமுக மதுரை தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மாரியப்பன், வழக்கறிஞர்கள் ஜெய்கணேஷ், இரவிக்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் மதுரை தமிழ் திரை கலைஞர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மதுரை கனகு, சமூக சேவகர் ஸ்ரீமான் சரவணன், ஜெயபால்,ஒளிப்பதிவாளர் பாண்டி இணை இயக்குனர் வைரம் மூத்த நடிகர் அழகப்பன்,உதவி இயக்குனர்கள் பிரபு, சாமி, துணை நடிகைகள் சியாமளா கௌரி, முனீஸ்வரி, பத்ரகாளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் நாயுடு சேவா சங்கம் சார்பாக யுகாதி நாயுடு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி..!

மதுரையில் நாயுடு சேவா சங்கம் சார்பாக யுகாதி பண்டிகையை முன்னிட்டு நாயுடு குடும்ப சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆர்.கே சேதுராமன் தலைமை வகித்தார். இலக்கிய இளந்தென்றல் தீபக் விழா பேருரையாற்றினார்.

இவ்விழாவில் ஓய்வு பெற்ற காவல் துறை கண்காணிப்பாளர் சென்றாய பெருமாள், வெலமநாயுடு மகாஜன சங்க மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்க மாநில பொதுச் செயலாளர் சுருதி ரமேஷ், ரங்கா பில்டர்ஸ் கமலக்கண்ணன், கோம்பைராம் கன்ஸ்ட்ரக்சன்ஸ் சுதாகரன், பராசக்தி கல்வி குழுமம் தாளாளர் ஜெகதீசன், டாக்டர் சிட்டிபாபு, எஸ்.என்.பி டெய்ரி மில்க் நிறுவனர் ராஜேந்திரபாபு, பேராசிரியர் கதலி நரசிங்கப் பெருமாள், தொழிலதிபர் வாலிபால் செந்தில்குமார், பொம்மை ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் நாயுடு சேவா சங்க நிறுவனர் பி.கே சம்பத்குமார் நன்றி கூறினார்.

மதுரையில் பெத்தானியாபுரம் நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி விழா..!

யுகாதி பண்டிகையை முன்னிட்டு மதுரையில் பெத்தானியாபுரம் நாயுடு மகாஜன சங்கம் சார்பாக யுகாதி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. மகளிரணியினர் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

மாணவ, மாணவிகளுக்கு பொது அறிவு வினா-விடை புத்தகங்களை சங்கத்தலைவர் எவர்கிரீன் பாலமுருகன் மற்றும் செயலாளர் பொம்மை ரவிச்சந்திரன் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்வில் சங்க நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், டி.எம்.நாயுடு, மதுரை சிங்கம், ரெங்கராஜ், கஜேந்திரன், ராஜாராம், முத்துகண்ணன், டெய்லர் ரங்கராஜ், பாபு, அழகர்ராமானுஜம் மற்றும் மகளிரணியினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தெலுங்கு, கன்னடம் பேசும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உகாதி புத்தாண்டு வாழ்த்து!

தெலுங்கு, கன்னடம் பேசும் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் உகாதி புத்தாண்டு வாழ்த்து!

தமிழகத்திலும், அண்டை மாநிலங்களிலும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் அனைவருக்கும் உகாதி, புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழ்நாட்டிலும், பக்கத்து மாநிலங்களிலும் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது மனங்கனிந்த யுகாதி – புத்தாண்டுத் திருநாள் (9-04-2024) நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழும் மொழிச் சிறுபான்மையினரின் நலனில் என்றுமே அக்கறையுடன் செயல்பட்டும் வரும் கழக அரசுதான் யுகாதி திருநாளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது.

வெவ்வேறு மாநிலங்களாக உள்ளபோதும், ஒரே மொழிக்குடும்பமாகவும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டவர்களாகத் தென்னிந்திய மக்களான நாம் திகழ்கிறோம். தனித்தன்மையை இழக்காமல், சகோதர உணர்வைப் பேணி வாழ்ந்து வருகிறோம். புத்தாடை, மாவிலைத் தோரணம், அறுசுவையும் கலந்த பச்சடியுடன் யுகாதி திருநாளை வரவேற்கும் உங்கள் வாழ்வில் புத்தாண்டு மகிழ்ச்சியை மலரச் செய்யட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பாலரெங்காபுரத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளர் டி.எஸ்.கே ஞானேஸ்வரன் ஏற்பாட்டில் வாக்கு சேகரிப்பு..!

மதுரை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடும் பேராசிரியர் ஸ்ரீனிவாசனை ஆதரித்து, பாலரெங்காபுரம் மண்டல் 165 வது பூத்தில் தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலன் பிரிவு மாநில செயலாளரும், மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளருமான டி.எஸ்.கே ஞானேஸ்வரன் தலைமையில் வீடு வீடாக சென்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் தாமரை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். இந்நிகழ்வில் நெசவாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஜே.கே.ரவி, 165-வது பூத் கிளைத் தலைவர் எம்.ஏ.டி சேகரன் மற்றும் மகாதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து,மதுரை சமூக சேவகர் அண்ணாநகர் முத்துராமன் வாக்கு சேகரித்தார்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிடும் அருண் நேருவை ஆதரித்து, மதுரையில் இருந்து சென்ற மக்கள் நீதி மய்யம் வடக்கு தொகுதி நற்பணி இயக்க நிர்வாகியும், சமூக சேவகருமான அண்ணாநகர் முத்துராமன் துறையூர் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குகள் சேகரித்தார். மேலும் வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

இந்நிகழ்வில் அனுப்பானடி சங்கர், மாரிமுத்து, சேதுமாதவன், காளிமுத்து, கர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுரையில் கடுமையான வெயிலில் மக்களை காக்கும் விதமாக நீர்,மோர் வழங்கிய தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க நிர்வாகிகள்..!

பொதுமக்களின் நலன் கருதி சமூக அக்கறையுடன் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் மதுரை மாவட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நீர்மோர் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதையொட்டி பொதுமக்கள் அனைவரும் 100% வாக்கினை பதிவு செய்ய வேண்டும், ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் எம்.கணேஷ், செயலாளர் ஆ.மாயகிருஷ்ணன், பொருளாளர் கவிதா, துணைத்தலைவர்கள் சிவ.கதிரவன், பாலா, இணைச்செயலாளர் சிதம்பரம், செயற்குழு உறுப்பினர்கள் கார்த்தி, வெங்கடேஷ், சுரேஷ், உறுப்பினர் அஜித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக புத்தக தின விழா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டு வரும் வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனிமுருகன் தலைமை வகித்தார். டிரஸ்ட் செயலாளர் சித்ரா ரகுபதி அருள்ஜோதி ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நாள்தோறும் நடைபெறும் நற்பணிகளை வாழ்த்தி வள்ளலார் மாலை நேர பயிற்சி பள்ளி தலைமை ஆசிரியர் ருக்மணி வாழ்த்துரை வழங்கினார்.

வள்ளலார் பயிற்சி பள்ளி ஆசிரியை சிவஜோதிகா புத்தகங்களின் பெருமைகள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியை ரோகுபாண்டி தொகுத்து வழங்கினார்.

விழாவின் முடிவில் ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.

பிரதமர் வேட்பாளர் யார் ? ராகுல் காந்தியின் பதில் இது தான்..!

பிரதமர் வேட்பாளர் யார் ? ராகுல் காந்தியின் பதில் இது தான்..!

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் அழிக்க முயற்சிக்கும் சக்திகளுக்கும், அவற்றைப் பாதுகாக்கும் சக்திகளுக்கும் இடையிலான தேர்தல் இது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.

பின்னர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “கடந்த 2004-ல் செய்தது போல், ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற கருத்து தற்போது பரப்பப்படுகிறது. அந்த பிரச்சாரத்தில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். கொள்கை அடிப்படையிலான தேர்தல் இது. பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “அச்சம் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் வெளியேறி இருக்கிறார்கள். அவர்கள் ஏதோ தவறு செய்திருக்கிறார்கள். கொள்கையில் உறுதியாக இருப்பவர்கள் யாரும் அஞ்ச மாட்டார்கள்.

எங்கள் தலைவர்களான சோனியா காந்தியிடமும், ராகுல் காந்தியிடமும் அச்சம் இல்லை. ஆனால், பிரதமரிடம் அச்சம் இருக்கிறது. எங்கள் கட்சியில் இருந்து சிலரை எடுத்துக்கொண்ட பிறகு தற்போது 400+ பற்றி பிரதமர் பேசுகிறார். அவரால் உலகம் முழுவதற்கும் செல்ல முடியும்; ஆனால் மணிப்பூருக்குச் செல்ல முடியாது. ராகுல் காந்தி மணிப்பூருக்குச் சென்றார். ஆனால், பிரதமரால் ஏன் முடியவில்லை? ஏனெனில் அவர் அச்சத்துடன் இருக்கிறார். யார் அச்சத்துடன் இருக்கிறார்களோ அவர்களால் நாட்டை நடத்த முடியாது” என தெரிவித்தார்.

தோல்விக்கு காரணம் இதுதான்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!

தோல்விக்கு காரணம் இதுதான்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை முதலில் பேட் செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிஎஸ்கே அணிக்கு இந்த ஐபிஎல் தொடரில் இது 2வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.வாழ்க்கையின் ஆட்ட நாயகன்: பிரீத்தி ஜிந்தாவின் அறிவுரை!

தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறியதாவது:

உண்மையை சொல்ல வேண்டுமானால் இது மிகவும் மெதுவான பிட்ச். நாங்கள் முதலில் நன்றாகவே பேட்டிங் செய்தோம். ஆனால் எதிரணியினர் 2ஆம் பாதியில் சிறப்பாக பந்து வீசினார்கள். மேலும் பவர்பிளேவில் அதிகமாக ரன்களை குவித்தார்கள். நாங்கள் ஒரு கேட்ச் தவறவிட்டோம், ஒரு ஓவரில் அதிகமான ரன்களை வழங்கி விட்டொம். 170-175 ரன்கள் அடித்திருந்தால் நல்ல டார்கெட்டாக இருந்திருக்கும். இறுதியில் சிறிது ஈரப்பதம் தென்பட்டது. இருப்பினும் 19வது ஓவர் வரைக்கும் எடுத்து சென்றது சிறப்பன விசயமே. மொயின் அலி சிறப்பாக பந்து வீசினார். 15-16ஆவது ஓவரிலும் அவர் வீசிய பந்துகள் திரும்பியது. கருப்பு நிற ஆடுகளம் மெதுவாக இருக்குமென கணித்தோம்;ஆனால் அது மிக மெதுவாக இருந்தது.

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES