Friday , December 19 2025
Breaking News
Home / இளைஞர் குரல்

இளைஞர் குரல்

YouTube player
NKBB Technologies

மதுரையில் சோழன் உலக சாதனை படைத்த சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

மதுரை கே.கே நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் நடத்திய நிகழ்வில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 12 வயது பள்ளி மாணவன் ஹரிஷ்ராஜ் என்பவர் ஐந்து படிநிலைகளைக் கொண்ட 100 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளை அபாகஸ் முறையை பயன்படுத்தி மூன்று நிமிடங்கள் மற்றும் 30 நொடிகளில் தீர்த்து சோழன் உலக சாதனை படைத்தார்.இதை கண்காணித்து உறுதி செய்தார் நடுவர் சிவசங்கரன் அவர்கள். …

Read More »

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சி

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள டேக் சிபிஎஸ்சி பள்ளியில் அறிவியல் மற்றும் கலை கண்காட்சிநடைபெற்றது. பள்ளியின் தாளாளர்கள் மங்கள்ராம், திருமதி. காயத்ரி மங்கள்ராம் ஆகியோர் தலைமை வகித்தனர்.எட்டாம் வகுப்பு மாணவன் ஜெப்ரிஅனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளியின் முதன்மை முதல்வர் டாக்டர் சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். தியாகராஜா பொறியியல் கல்லூரியில் முதல்வர் டாக்டர் திரு பழனிநாதராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தார். …

Read More »

மதுரையில் இ.டி.ஐ.ஐ, அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் இணைந்து சுயதொழில் பயிற்சி துவக்க விழா

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்சர் நிறுவனம், பெட்கிராட் தொழில் பயிற்சி பள்ளி இணைந்து காய்கறி பழங்கள் பதப்படுத்துதல், சிறுதானிய உணவு பொருட்கள் தயாரித்தல் போன்ற இலவச சுயதொழில் பயிற்சி துவக்க விழா மதுரை கோ.புதூர் வண்டிப்பாதை மெயின் ரோடு பகுதியில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பெட்கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் குத்துவிளக்கேற்றி …

Read More »

இணைந்து எழு கரூர் கூட்டம்…

25/11/2023 இன்று கரூரில் நடைபெற்ற இணைந்து எழு கரூர் என்ற குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக செயல்படக்கூடிய ஆதரவாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக முன்னாள் கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பேங்க் சுப்ரமணியன் அவர்கள் ஒரு மனதாக ஏற்கப்பட்டார். கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், கரூர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இணைந்தெழு குழுக்களின் …

Read More »

மதுரையில் ஸ்ரீ அரவிந்தோ மீரா பள்ளியில் பிரமாண்டமாக 100 அடி உயர கம்பத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை எஸ்.பி.சிவபிரசாத் ஏற்றி வைத்தார்.

மதுரை துவரிமான் அருகே உள்ள ஸ்ரீ அரவிந்தோ மீரா பிரபஞ்சப் பள்ளி, மதுரையில் ஒரு வரலாற்று நிகழ்வை பெருமையுடன் நிகழ்த்தியது. நகரத்தில் உள்ள பள்ளிகளிலேயே முதல் மற்றும் உயரமான 100 அடி தேசியக் கொடிக்கம்பத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.சிவபிரசாத் ஐ.பி.எஸ் அவர்கள் பிரமாண்டமான 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் …

Read More »

மதுரை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்த பொறியியல் பிரிவு பணியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்.!

மதுரை மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணியை தனியார் மூலம் மேற்கொள்ள உள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. அரசுத்துறைகளை தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் வகையில், மதுரை மாநகராட்சி பொறியியல் பிரிவு பணியாளர் சங்கம், தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் இணைந்து மாநகராட்சி ஆணையாளரை நேரில் சந்தித்து முறையிட்டனர். அவர்கள் கூறியதை கவனமாக கேட்டறிந்த ஆணையாளர் இணையதளம் மூலமாக பணம் செலுத்தும் …

Read More »

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : விவசாயிகள் வெளிநடப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருமங்கலம், மேலூர் பாசன கால்வாயில் விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து திருமங்கலம் பகுதி விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில்:- 21/04/2010 அன்று அன்று திருமங்கலம் கால்வாய், கள்ளந்திரி கால்வாய், மேலூர் கால்வாய் மூன்றுக்கும் ஒன்றாக தண்ணீர் திறந்து விட …

Read More »

சாதனை படைத்த மாணவிக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் நிர்வாகிகள் வாழ்த்து.!

சீனாவின் ஹாங்காங் நகரில் நடைபெற்ற 19-வது ஏசியன் ரோலர் ஹாக்கி போட்டியில் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஜெயஸ்ரீ ஹர்ஷினி,3-வது இடத்தைப் பிடித்து வெண்கல பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். சாதனை படைத்த அவருக்கு தேசிய மனித உரிமை சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா தேசிய இயக்குனர் சர்க்கார் அவர்களின் ஆலோசனைப்படி, மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிச்சைவேல் தலைமையில் சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. …

Read More »

உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 58 கால்வாயில் தண்ணீர் திறந்து விட வேண்டி தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து உசிலை சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அப்துல்கலாம் அறிவியல் விவசாய சங்க மாநில தலைவர் ஆபெல் மூர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் மாநில கௌரவ தலைவர் எம்.பி.ராமன் உள்பட விவசாய சங்க நிர்வாகிகள் …

Read More »

தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அஜீத் திருமணத்தை சங்கத் தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் தலைமையேற்று நடத்தி வைத்தார்.

மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள பூங்கா முருகன் கோவிலில், தென் மாவட்ட திரைப்பட கலைஞர்கள் நலச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அஜீத் திருமணத்தை சங்கத் தலைவர் டாக்டர் வி.பி.ஆர். செல்வகுமார் அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவ்விழாவில் சங்க பொதுச்செயலாளர் மாஸ்.மணி, பொருளாளர் சின்னமணி, இன்சூரன்ஸ் ராஜா, ஷேக் அப்துல்லா, செயற்குழு உறுப்பினர் டாக்டர் சின்னச்சாமி, இணைத்தலைவர் மகேஸ்வரன், இணைச்செயலாளர் கனரா சோனி, செயற்குழு உறுப்பினர் முருகேசன்,செல்வம், ஜெயந்தி, மங்கையர்திலகம், …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES